ஜிஎஸ் பைக்குகளின் விற்பனையில் 40 வருடத்தை நிறைவுசெய்யும் பிஎம்டபிள்யூ- தயார் நிலையில் புது எடிசன்கள்

ஜிஎஸ் வரிசை பைக்குகளின் விற்பனையில் 40 வருடத்தை நிறைவு செய்ததை நினைவுக்கூரும் விதமாக பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் அதன் தற்போதைய மிட்-சைஸ் ஜிஎஸ் மாடல்களை புதிய நிறங்களுடன் அப்டேட் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜிஎஸ் பைக்குகளின் விற்பனையில் 40 வருடத்தை நிறைவுசெய்யும் பிஎம்டபிள்யூ- தயார் நிலையில் புது எடிசன்கள்

இந்த அப்டேட்களை பெற்றுள்ள பிஎம்டபிள்யூ எஃப்750 ஜிஎஸ், பிஎம்டபிள்யூ எஃப்850 ஜிஎஸ் மற்றும் எஃப்850 ஜிஎஸ் அட்வென்ஜெர் பைக் மாடல்களுக்கு ஹைலைட்டாக ஸ்ட்ரைக்கிங் ப்ளாக் மற்றும் மஞ்சள் நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் ‘40 வருடத்திற்கான ஜிஎஸ் எடிசன்' என்ற தலைப்பும் இவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ் பைக்குகளின் விற்பனையில் 40 வருடத்தை நிறைவுசெய்யும் பிஎம்டபிள்யூ- தயார் நிலையில் புது எடிசன்கள்

கருப்பு மற்றும் தங்க நிறத்தில் காட்சியளிக்கும் இந்த மூன்று பைக்குகளின் ஹேண்ட்கார்ட்ஸ், இருக்கை, டேங்க் உள்ளிட்டவற்றுடன் சில பிளாஸ்டிக் பாகங்களும் மஞ்சள் நிறத்தில் மாற்றப்பட்டுள்ளன. 40 வருடத்திற்கான ஜிஎஸ் முத்திரை பைக்கின் பக்கவாட்டு பேனல்களில் பொருத்தப்பட்டுள்ளது.

ஜிஎஸ் பைக்குகளின் விற்பனையில் 40 வருடத்தை நிறைவுசெய்யும் பிஎம்டபிள்யூ- தயார் நிலையில் புது எடிசன்கள்

இந்த கருப்பு-கோல்டு நிறத்துடன் புதிய ரேசிங் ரெட், ரேசிங் ப்ளூ உள்பட சில ராலி நிறங்களும் இந்த பிஎம்டபிள்யூ பைக்குகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்த ஸ்பெஷல் எடிசன் பைக்குகளில் புதிய நிறத்தேர்வுகளுடன் எல்இடி இண்டிகேட்டர்கள் நிலையாகவும், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் மற்றும் கார்னரிங் ஏபிஎஸ் மற்றும் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் போன்ற வழக்கமான அம்சங்களும் தொடர்ந்துள்ளன.

ஜிஎஸ் பைக்குகளின் விற்பனையில் 40 வருடத்தை நிறைவுசெய்யும் பிஎம்டபிள்யூ- தயார் நிலையில் புது எடிசன்கள்

மற்றப்படி இயந்திர பாகங்களில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. இதனால் வழக்கமான 853சிசி, இணையான-இரட்டை, லிக்யூடு-கூல்டு, 4-வால்வு என்ஜின் அமைப்பு தான் இந்த ஸ்பெஷல் எடிசன் பைக்குகளிலும் பொருத்தப்பட்டுள்ளன.

ஜிஎஸ் பைக்குகளின் விற்பனையில் 40 வருடத்தை நிறைவுசெய்யும் பிஎம்டபிள்யூ- தயார் நிலையில் புது எடிசன்கள்

இரு பேலன்ஸ் ஷாஃப்ட்ஸ் உடன் உள்ள இந்த என்ஜின், சீரான செயல்திறன், தன்னிச்சையாக செயல்படக்கூடிய பண்பு, அட்டகாசமான இழு சக்தி மற்றும் குறைவான எரிபொருள் நுகர்வு உள்ளிட்டவற்றை வழங்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ் பைக்குகளின் விற்பனையில் 40 வருடத்தை நிறைவுசெய்யும் பிஎம்டபிள்யூ- தயார் நிலையில் புது எடிசன்கள்

இந்த 853சிசி என்ஜின் பிஎம்டபிள்யூ எஃப்750 ஜிஎஸ் பைக்கில் அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 77 பிஎச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம் 83 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. அதேநேரம் எஃப்850 ஜிஎஸ் மற்றும் எஃப்850 ஜிஎஸ் அட்வென்ஜெர் பைக்குகளுக்கு 8,250 ஆர்பிஎம்-ல் 95 பிஎச்பி பவரையும், 6,250 ஆர்பிஎம்-ல் 92 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக வழக்குகிறது.

ஜிஎஸ் பைக்குகளின் விற்பனையில் 40 வருடத்தை நிறைவுசெய்யும் பிஎம்டபிள்யூ- தயார் நிலையில் புது எடிசன்கள்

பிஎம்டபிள்யூவின் இந்த அனைத்து மிட்-ரேஞ்ச் ஜிஎஸ் மாடல்களிலும் ப்ரோ ரைடிங் மோட்கள் ஆனது திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இதனால் என்ஜினிற்கு எரிபொருள் வழங்குவது சற்று வேறுப்படுவது மட்டுமில்லாமல் பைக் கூடுதல் ஆற்றலையும் பெறும். என்ஜின் ட்ராக் டார்க் கண்ட்ரோல் மற்றும் டைனாமிக் ப்ரேக் கண்ட்ரோல் உள்ளிட்டவை தற்போது ப்ரோ ரைடிங் மோடி கூறுகளாக மாறியுள்ளன.

ஜிஎஸ் பைக்குகளின் விற்பனையில் 40 வருடத்தை நிறைவுசெய்யும் பிஎம்டபிள்யூ- தயார் நிலையில் புது எடிசன்கள்

இதனுடன் நிலையான மற்ற நான்கு ரைடிங் மோட்களும் தொடர்ந்து வழங்கப்படவுள்ளன. பைக்கில் இந்த மோட்களை ஹேண்டில்பார் மூலமாக மாற்ற முடியும். இருப்பினும் புதிய ஒத்திசைவு தேவைகளுக்காக ஆண்டி-லாக் ப்ரேக் சிஸ்டத்தை முழுமையாக அணைத்து வைக்க முடியாது.

ஜிஎஸ் பைக்குகளின் விற்பனையில் 40 வருடத்தை நிறைவுசெய்யும் பிஎம்டபிள்யூ- தயார் நிலையில் புது எடிசன்கள்

இதன் காரணமாக எண்டூரோ மற்றும் எண்டூரோ ப்ரோ ரைடிங் மோட்கள் இந்த ஸ்பெஷல் எடிசன் பைக்குகளில் சரியான முறையில் அடாப்டட் கண்ட்ரோலை வழங்கும். பிஎம்டபிள்யூ எஃப்850 ஜிஎஸ் மற்றும் எஃப்850 ஜிஎஸ் அட்வென்ஜெர் பைக்குகளில் மட்டுமே வழங்கப்படும் எண்டூரோ ப்ரோ ரைடிங் மோடில் பின் சக்கரத்தில் உள்ள ஏபிஎஸ் செயல்பாட்டை அணைத்து வைக்க முடியும்.

ஜிஎஸ் பைக்குகளின் விற்பனையில் 40 வருடத்தை நிறைவுசெய்யும் பிஎம்டபிள்யூ- தயார் நிலையில் புது எடிசன்கள்

ஜிஎஸ் மாடல்களை பெருமைப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் ஜிஎஸ் பைக்குகள் வருகிற செப்டம்பர் மாதத்தில் இருந்து ஐரோப்பாவில் உள்ள டீலர்ஷிப்களில் விற்பனையை துவங்கவுள்ளன. இந்தியாவிற்கு இந்த பைக்குகள் இந்த வருட இறுதிக்குள் வருகை தரலாம்.

Most Read Articles

English summary
BMW F 750 GS, F 850 GS, 40 Year GS Edition Models Announced
Story first published: Saturday, July 18, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X