பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியீடு... இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியீடு... இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

ஐஎக்ஸ் (iX) எலெக்ட்ரிக் எஸ்யூவியை, பிஎம்டபிள்யூ வெளியிட்டுள்ளது. தற்போது உலகளாவிய அளவில் வெளியிடப்பட்டுள்ள ஐஎக்ஸ், பிஎம்டபிள்யூவின் முதல் முழு எலெக்ட்ரிக் எஸ்யூவியாகும். ஜெர்மனியின் டிங்கோல்ஃபில் ஆலையில், ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் உற்பத்தி அடுத்த ஆண்டின் இரண்டாவது பாதியில் தொடங்கும் என பிஎம்டபிள்யூ அறிவித்துள்ளது.

பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியீடு... இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

அடுத்த ஆண்டு கடைசியில், வளர்ந்த நாடுகளின் சந்தைகளுக்கு பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். ஆனால் பிஎம்டபிள்யூ நிறுவனம் ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியை இந்திய சந்தைக்கு கொண்டு வருமா? என்பது உறுதியாக தெரியவில்லை. அப்படியே கொண்டு வந்தாலும், 2022ம் ஆண்டில்தான் அது நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியீடு... இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

புதிய ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியில், இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களை உள்ளடக்கிய பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை பவர்டிரெயின் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்தமாக 503 பிஎச்பி பவரை உற்பத்தி செய்யும் வல்லமை வாய்ந்தது. டெஸ்லா மாடல் எக்ஸ் உள்ளிட்ட கார்களுடன் புதிய பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி போட்டியிடும்.

பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியீடு... இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 300 மைல்கள் (480 கிலோ மீட்டர்கள்) பயணிக்க முடியும். ஆனால் டெஸ்லா மாடல் எக்ஸ் லாங் ரேஞ்ச் உடன் ஒப்பிடுகையில் இது குறைவுதான். அமெரிக்க சந்தையில் விற்பனை செய்யப்படும் டெஸ்லா மாடல் எக்ஸ் லாங் ரேஞ்ச் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 371 மைல்கள் பயணிக்கலாம்.

பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியீடு... இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

ஆனால் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி தற்போதுதான் மேம்பாட்டு நிலைகளில் உள்ளது. எனவே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நேரத்தில், இதன் டிரைவிங் ரேஞ்ச் மாறுபடலாம். எனினும் 200kW ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் பேட்டரியை வெறும் 40 நிமிடங்களில், 70 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியீடு... இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

உற்பத்திக்கு சென்ற பிறகு, பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதன்மையான மாடல்களில் ஒன்றாக ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இருக்கும். புதிய பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி, புதிய பிளாட்பார்ம் அடிப்படையில், புதிய டிசைன் மொழியில் உருவாக்கப்படுகிறது. அத்துடன் கனெக்டட் தொழில்நுட்ப வசதிகளையும் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி பெற்றிருக்கும்.

பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியீடு... இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

சர்வதேச சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூசி, ஆடி இ-ட்ரான் மற்றும் ஜாகுவார் ஐ-பேஸ் உள்ளிட்ட கார்களுடன், பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி போட்டியிடும். இதில், மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூசி வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியீடு... இந்தியாவில் விற்பனைக்கு வருமா?

இந்தியாவின் முதல் சொகுசு எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் என்ற பெருமையுடன் மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூசி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ மட்டுமல்லாது உலகின் அனைத்து முன்னணி கார் நிறுவனங்களும் தற்போது எலெக்ட்ரிக் கார்களின் தயாரிப்பில் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளன. இந்த பந்தயத்தில் டெஸ்லா முன்னணியில் சென்று கொண்டுள்ளது.

Most Read Articles

English summary
BMW iX Electric SUV Globally Unveiled. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X