கவர்ந்திழுக்கும் பச்சை நிறத்தில் வெளிவரவுள்ள 2021 பிஎம்டபிள்யூ எம்3 செடான்... புதிய டீசர் படங்கள்...

பிஎம்டபிள்யூ நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள 2021 எம்3 செடான் காரின் புதிய டீசர் படங்களை வெளியிட்டுள்ளது. அவற்றின் மூலம் தெரியவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கவர்ந்திழுக்கும் பச்சை நிறத்தில் வெளிவரவுள்ள 2021 பிஎம்டபிள்யூ எம்3 செடான்... புதிய டீசர் படங்கள்...

பிஎம்டபிள்யூ நிறுவனம் புதிய எம்3 செடான் காரை பற்றிய விபரங்களை நாளை (செப்டம்பர் 23) வெளியிடவுள்ளது. மேலும் இந்த 2021 செடான் மாடலுடன் எம்4 கூபே காரையும் இந்நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவர்ந்திழுக்கும் பச்சை நிறத்தில் வெளிவரவுள்ள 2021 பிஎம்டபிள்யூ எம்3 செடான்... புதிய டீசர் படங்கள்...

இதற்கிடையில் தான் தற்போது எம்3 செடானின் அறிமுகத்திற்கு முன்னதாக அதன் டீசர் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த படங்களில் கார் கவர்ச்சிக்கரமான பச்சை நிறத்தில் ஜொலிக்கிறது.

கவர்ந்திழுக்கும் பச்சை நிறத்தில் வெளிவரவுள்ள 2021 பிஎம்டபிள்யூ எம்3 செடான்... புதிய டீசர் படங்கள்...

பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் இந்த பச்சை நிறம் ‘பச்சை மனிதனின் தீவு' என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த பெயரில் உண்மையில் பிரிட்டிஷ் நாட்டின் தீவு ஒன்று உள்ளது. இந்த தீவில் வருடந்தோறும் டிடி மோட்டார்சைக்கிள் போட்டி நடைபெறுவது உண்டு.

கவர்ந்திழுக்கும் பச்சை நிறத்தில் வெளிவரவுள்ள 2021 பிஎம்டபிள்யூ எம்3 செடான்... புதிய டீசர் படங்கள்...

தற்போது வெளியிடப்பட்டுள்ள படங்களில் காரின் முன்பகுதியின் டிசைன் மிக தெளிவாக வெளிக்காட்டப்பட்டுள்ளது. இந்த செடான் கார் பெரிய அளவில் க்ரில் அமைப்பை பெற்றுள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்த அடையாள க்ரில் கவர்ச்சிகரமாக பச்சை நிற புகையில் இருந்து வெளிவருவதுபோல் இந்த படங்களில் காட்டப்பட்டுள்ளது.

கவர்ந்திழுக்கும் பச்சை நிறத்தில் வெளிவரவுள்ள 2021 பிஎம்டபிள்யூ எம்3 செடான்... புதிய டீசர் படங்கள்...

மேலும் இந்த படங்களில் நேர்த்தியான வடிவில் ஹெட்லேம்ப்களையும் பார்க்க முடிகிறது. பிஎம்டபிள்யூவின் எம் வரிசை கார் என்பதால் கூடுதல் அழகிற்காக காரை சுற்றிலும் கருப்பு நிற பாகங்கள் மற்றும் துணை முத்திரை உள்ளிட்டவைகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.

கவர்ந்திழுக்கும் பச்சை நிறத்தில் வெளிவரவுள்ள 2021 பிஎம்டபிள்யூ எம்3 செடான்... புதிய டீசர் படங்கள்...

இந்த டீசர் படங்கள் காரின் பின்புறத்தையும் வெளிக்காட்டுகின்றன. இதன்படி எம்3 செடான் பின்பக்கத்தில் திருத்தியமைக்கப்பட்ட ரியர் டிஃப்யூஸர், குவாட் எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் நேர்த்தியான டிசைனில் ட்ரங்க் உள்ளிட்டவைகளை கொண்டுள்ளது.

கவர்ந்திழுக்கும் பச்சை நிறத்தில் வெளிவரவுள்ள 2021 பிஎம்டபிள்யூ எம்3 செடான்... புதிய டீசர் படங்கள்...

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த 2021 மாடலில் 3.0 லிட்டர் இரட்டை-டர்போசார்ஜ்டு இன்லைன் 6-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. வழக்கமான எம்3-ல் இந்த என்ஜின் 466.5 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். அதேநேரம் எம்3-ன் காம்பெடிஷன் வேரியண்ட்டிற்கு இந்த என்ஜின் 496.1 பிஎச்பி பவரை வழங்கும்.

கவர்ந்திழுக்கும் பச்சை நிறத்தில் வெளிவரவுள்ள 2021 பிஎம்டபிள்யூ எம்3 செடான்... புதிய டீசர் படங்கள்...

ட்ரான்ஸ்மிஷன் பணிகளை கவனிக்க நிலையான அனைத்து-சக்கர ட்ரைவ் சிஸ்டத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படலாம். ஆனால் காம்பெடிஷன் வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மட்டுமே கொடுக்கப்படும்.

கவர்ந்திழுக்கும் பச்சை நிறத்தில் வெளிவரவுள்ள 2021 பிஎம்டபிள்யூ எம்3 செடான்... புதிய டீசர் படங்கள்...

பிஎம்டபிள்யூ எம்4 கூபே-வை பொறுத்தவரையில், 2021 எம்3-ல் வழங்கப்பட்ட அதே இயந்திர பாகங்கள் தான் இந்த கூபே காரிலும் வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால் 2021 எம்3-க்கு பச்சை நிறம்போல், எம்4 கூபே-வுக்கு ஸா பாலோ மஞ்சள் நிறம் கொடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரு புதிய கார்களும் அமெரிக்க டீலர்ஷிப் ஷோரூம்களை அடுத்த ஆண்டில் சென்றடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
2021 BMW M3 And M4 With Bright Green Paint Teased Ahead Of Official Debut. Read in Telugu.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X