Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 7 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 8 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நம்பர்-1 இடத்திற்காக அடுத்து இரண்டு புதிய சொகுசு கார்களை களமிறக்கும் பிஎம்டபிள்யூ!
இந்திய சொகுசு கார் சந்தையில் நம்பர்-1 இடத்தில் நிலைத்து நிற்பதற்காக பல புதிய மாடல்களை அறிமுகம் செய்ய பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. அதில், இரண்டு முக்கிய மாடல்கள் குறித்த விபரம் வெளியாகி இருக்கிறது.

இந்திய சொகுசு கார் சந்தையில் ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி கார் நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், நடப்பாண்டில் பிஎம்டபிள்யூ நிறுவனம் முன்னிலை பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து தக்க வைப்பதற்கான முயற்சிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே, புதிய தலைமுறை 2 சீரிஸ் கிரான் கூபே, 3 சீரிஸ், 7 சீரிஸ், எக்ஸ்5 மற்றும் எக்ஸ்7 கார்களை இந்தியாவில் களமிறக்கியது.

இதையடுத்து, 2021ம் ஆண்டுக்கான புதிய கார் மாடல்கள் அறிமுகம் குறித்த திட்டத்தை பிஎம்டபிள்யூ வகுத்துள்ளது. இந்தியர்களுக்கு புதுவிதமான மாடல்களை கொண்டு வருவதிலும் கவனம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில், கார் அண்ட் பைக் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள பிஎம்டபிள்யூ இந்தியா தலைவர் விக்ரம் பவா கூறுகையில்,"இந்தியாவில் பல புதிய மாடல்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு புதிய 5 சீரிஸ் மற்றும் 6 சீரிஸ் ஜிடி ஆகிய மாடல்களை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு பல ஆச்சர்யங்களும் காத்திருக்கிறது," என்று தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு கார்களையும் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யவும் பிஎம்டபிள்யூ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால், மிக சரியான விலையில் நிலைநிறுத்த முடியும். இதனிடையே, பிஎம்டபிள்யூ நிறுவனம் புதிய கார்களில் பெட்ரோல், டீசல் தேர்வுகளில் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது. மினி பிராண்டிலும் புதிய மாடல்களை கொண்டு வரவும் பிஎம்டபிள்யூ முடிவு செய்துள்ளது.

புதிய மாடல்களின் வருகை மற்றும் சந்தை தேவை மனதில் வைத்து சென்னை ஆலையில் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கும், பல புதிய மாடல்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்வதற்கும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய மாடல்கள் மூலமாக இந்திய சொகுசு கார் சந்தையில் மிக வலுவான இடத்தை தக்க வைப்பதற்கு பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டு போலவே, அடுத்த ஆண்டிலும் தனது சந்தைப் பங்களிப்பை தக்க வைப்பதற்கு பல திட்டங்களுடன் காய் நகர்த்தி வருகிறது பிஎம்டபிள்யூ நிறுவனம்.