2021 பிஎம்டபிள்யூ எம்5 காரின் தோற்றம் வெளிவந்தது... இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகம்...

ஜெர்மனை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் உலகளாவிய சந்தைக்காக 2021 எம்5 சலூன் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் தோற்றத்தை வெளியிட்டுள்ளது. பிஎம்டபிள்யூ ப்ராண்ட்டின் 5 சீரிஸ் ரேஞ்சில் ஆற்றல்மிக்க வேரியண்ட்டாக இணையவுள்ள இந்த 2021 மாடலை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 பிஎம்டபிள்யூ எம்5 காரின் தோற்றம் வெளிவந்தது... இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகம்...

ஸ்டாண்டர்ட் மற்றும் காம்பெடிஷன் என இரு விதமான வேரியண்ட்களில் மை2021 பிஎம்டபிள்யூ எம்5 ஃபேஸ்லிஃப்ட் கார் சந்தைப்படுத்தப்படவுள்ளது. இதில் இரு வேரியண்ட்களிலும் அதன் முன்னோடி மாடல்களை காட்டிலும் அடேட்டான தொழிற்நுட்ப அம்சங்களும், டிசைன் பேனல்களும் வழங்கப்பட்டுள்ளன.

2021 பிஎம்டபிள்யூ எம்5 காரின் தோற்றம் வெளிவந்தது... இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகம்...

இதில் புதிய எல்-வடிவிலான முழு-அடாப்டிவ் லேசர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லைட்களில் 3டி பாகங்கள், கருப்பு நிறத்தில் கிட்னி வடிவிலான க்ரில், திருத்தியமைக்கப்பட்ட முன்புற மற்றும் பின்புற பம்பர்கள், குவாட்-எக்ஸாஸ்ட் டிப்கள் மற்றும் 20-இன்ச்சில் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன.

2021 பிஎம்டபிள்யூ எம்5 காரின் தோற்றம் வெளிவந்தது... இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகம்...

இவற்றுடன் சில பாகங்களை புதிய பிஎம்டபிள்யூ எம்5 மாடலானது ப்ராண்ட்டின் டாப் வேரியண்ட்களான ஜிடி மற்றும் எம்8 கார்களில் இருந்தும் பெற்றுள்ளது. உட்புறத்தில் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் முழுவதும் டிஜிட்டல் தரத்தில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 12.5 இன்ச்சில் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

2021 பிஎம்டபிள்யூ எம்5 காரின் தோற்றம் வெளிவந்தது... இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகம்...

செட்அப் மற்றும் எம் மோட் என செயல்பாடுகளுக்கான பொத்தான்கள் மூலமாக ஓட்டுனர் தனது ட்ரைவிங் ஸ்டைலுக்கு ஏற்றப்படி வெவ்வேறு விதமான அமைப்புகளை பெற முடியும். பிஎம்டபிள்யூ நிறுவனம் புதிய எம்5 மாடலுக்கு கம்ஃபோர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட்+ மற்றும் ட்ராக் என நான்கு விதமான ட்ரைவிங் மோட்களை வழங்கியுள்ளது.

2021 பிஎம்டபிள்யூ எம்5 காரின் தோற்றம் வெளிவந்தது... இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகம்...

மேற்கூறப்பட்ட அம்சங்களுடன் லெதர் உள்ளமைவு, ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு, பிஎம்டபிள்யூவின் லேட்டஸ்ட் ஐட்ரைவ் தொழிற்நுட்பம், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி ப்ரேக்கிங், லேன் புறப்படு வார்னிங், ஹை-பீம் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவற்றையும் இந்த 2021 ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஏற்றுள்ளது.

2021 பிஎம்டபிள்யூ எம்5 காரின் தோற்றம் வெளிவந்தது... இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகம்...

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 2021 பிஎம்டபிள்யூ எம்5 காரில் 4.4 லிட்டர் இரட்டை-டர்போசார்ஜ்டு வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 600 பிஎச்பி பவரையும், 750 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. அதுவே எம்5 காம்பெடிஷன் வேரியண்ட்டில் சற்று கூடுதலாக 620 பிஎச்பி-ஐ வெளிப்படுத்தும்.

2021 பிஎம்டபிள்யூ எம்5 காரின் தோற்றம் வெளிவந்தது... இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகம்...

காரின் இரு வேரியண்ட்களிலும் வழங்கப்படவுள்ள 8-ஸ்பீடு எம்-ஸ்டெப்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் ஆற்றலை ‘எம் எக்ஸ்ட்ரைவ்' சிஸ்டத்தின் வாயிலாக அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கும். இந்த ஆல்-வீல் ட்ரைவ் சிஸ்டம் எம்5 மாடலில் 4-வீல் ட்ரைவ், 4-வீல் ட்ரைவ் ஸ்போர்ட் மற்றும் ட்ரிஃப்ட் மோட் (2-வீல் ட்ரைவ்) என்ற மூன்று மோட்களுடன் உள்ளது.

2021 பிஎம்டபிள்யூ எம்5 காரின் தோற்றம் வெளிவந்தது... இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகம்...

0-விலிருந்து 100-kmph என்ற வேகத்தை முறையே 3.4 மற்றும் 3.3 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய எம்5 மாடலின் ஸ்டாண்டர்ட் மற்றும் காம்பெடிஷன் வேரியண்ட்கள் அதிகப்பட்சமாக 250kmph என்ற வேகத்தில் இயக்கும் திறனை கொண்டுள்ளன. கூடுதல் தேர்வாக வழங்கப்படும் எம் ட்ரைவர் பேக்கேஜ்ஜை பயன்படுத்தினால் காரின் வேகத்தை அதிகப்பட்சமாக 305kmph வரை கொண்டு செல்ல முடியும்.

அடுத்த ஆண்டு இந்திய சந்தைக்கு வரவுள்ள புதிய பிஎம்டபிள்யூ எம்5 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.1.5 கோடி அளவில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. அறிமுகத்திற்கு பிறகு இந்த காருக்கு இந்திய சந்தையில் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ 63 மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள ஆடி ஆர்எஸ்7 மாடல்கள் போட்டியாக விளங்கவுள்ளன.

Most Read Articles

English summary
New (2021) BMW M5 & M5 Competition Unveiled
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X