சீனாவில் தீவிர தயாரிப்பு பணியில் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர்...

ஜெர்மனியை சேர்ந்த லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ எக்ஸ்3 க்ராஸ்ஓவர் மாடலின் அடிப்படையில் புதிய முழு-எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர்/எஸ்யூவி காரின் தயாரிப்பில் உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக சில படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

சீனாவில் தீவிர தயாரிப்பு பணியில் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர்...

எக்ஸ்3 மாடலின் அடிப்படையில் உருவாகுவதால் ஐஎக்ஸ்3 என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய எலக்ட்ரிக் காரின் தயாரிப்பு பணிகளை சீனாவில் உள்ள பிஎம்டபிள்யூ ப்ரில்லியன்ஸ் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதை தான் தற்போது வெளியாகியுள்ள படங்களும் வெளிக்காட்டுகின்றன.

சீனாவில் தீவிர தயாரிப்பு பணியில் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர்...

சீனாவின் ஷென்யாங்க் நகரத்தில் உள்ள டடோங்க் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டு வரும் ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் கார், இவி கார் அங்கீகாரத்தை அனைத்து முக்கியமான சந்தைகளிலும் பெறுவதற்கான சோதனைகளை நிறைவு செய்துவிட்டதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் உறுதி செய்துள்ளது.

சீனாவில் தீவிர தயாரிப்பு பணியில் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர்...

இதனால் விரைவில் இந்த எலக்ட்ரிக் கார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுப்பி வைக்கப்படவுள்ளது. மேலும் ஐஎக்ஸ்3 இவி கார், 4 வாரங்களாக கிட்டத்தட்ட 340 மணிநேரங்களாக 7,700 கிமீ தூர சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டதாகவும் பிஎம்டபிள்யூ நிறுவனம் கூறியுள்ளது.

சீனாவில் தீவிர தயாரிப்பு பணியில் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர்...

இவி கார் தயாரிப்பில் பெயர் பெற்றதான இந்நிறுவனத்தின் ஷென்யாங்க் தொழிற்சாலையில் தயாரிப்பு பணியில் உள்ள இந்த எலக்ட்ரிக் காரின் 200வது ப்ரீ-புரோடக்‌ஷன் மாடல் சமீபத்தில் அசெம்பிள் லைனிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

சீனாவில் தீவிர தயாரிப்பு பணியில் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர்...

இந்த க்ராஸ்ஓவர் எலக்ட்ரிக் மாடலின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணியில் உள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் டடோங்க் தொழிற்சாலையின் இயக்குனர் எரிபொருள் என்ஜின் பொருத்தப்படும் எக்ஸ்3 மாடலுடன் ஐஎக்ஸ்3 மாடலும் தங்களது தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

சீனாவில் தீவிர தயாரிப்பு பணியில் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர்...

மற்றப்படி இந்த எலக்ட்ரிக் காரை பற்றிய வேறெந்த தகவலையும் இந்நிறுவனம் வெளியிடவில்லை. தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள படங்களின் மூலம் பார்க்கும்போது வழக்கமான எக்ஸ்3 எஸ்யூவி மாடலுடன் வெளிப்புறத்தை அப்படியே பகிர்ந்து கொண்டுள்ள இந்த எலக்ட்ரிக் காரில் நீல நிற பெயிண்ட் அமைப்பும், வித்தியாசமான அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது.

சீனாவில் தீவிர தயாரிப்பு பணியில் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர்...

ஐஎக்ஸ்3 காரில் 74kWh பேட்டரியானது அதிகப்பட்சமாக 286 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டிருக்கும். இவற்றின் உதவியுடன் இந்த கார் சிங்கிள் சார்ஜில் 440km தூரம் வரை இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
BMW iX3 Electric Crossover Teased, Likely Launch By End-2020
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X