மார்ச் மாதத்தில் இந்தியாவிற்கு வரும் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஃபேஸ்லிஃப்ட்...

2020 பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஃபேஸ்லிஃப்ட் அடுத்த மாதம் 5ஆம் தேதி அறிமுகமாகவுள்ளதாக தகவல் ஒன்று கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலின் இந்திய வருகையை பிஎம்டபிள்யூ நிறுவனம் மார்ச் 5 என உறுதி செய்துள்ளது.

மார்ச் மாதத்தில் இந்தியாவிற்கு வரும் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஃபேஸ்லிஃப்ட்...

டிசைன் மற்றும் ஸ்டைலிங்கில் முந்தைய மாடலில் இருந்து அப்டேட்டை பெற்றுள்ள இந்த 2020 எஸ்யூவி கார் வெளிப்புற தோற்றத்திற்கு ஏற்றாற்போல் சில கூடுதல் தொழிற்நுட்பங்களை பெற்ற உட்புற கேபினை கொண்டுள்ளது. மற்றப்படி என்ஜினின் தரத்தில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

மார்ச் மாதத்தில் இந்தியாவிற்கு வரும் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஃபேஸ்லிஃப்ட்...

எஸ்யூவி பிரிவில் வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்பும் மாடலாக உள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்1 மாடல், செடான் வகை கார்களில் உள்ளதை போன்ற ஹேண்டிலிங் ஸ்டைலை கொண்ட எஸ்யூவியாக உள்ளதால், அறிமுகத்தில் இருந்து இந்திய சந்தையில் மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ளது.

மார்ச் மாதத்தில் இந்தியாவிற்கு வரும் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஃபேஸ்லிஃப்ட்...

கடந்த 2010ல் அறிமுகமான இந்த எஸ்யூவி மாடல், எஸ்யூவி மாடலுக்கான நிலைப்பாட்டை கொண்டில்லாததால், வெளியான அந்த சமயத்தில் இந்திய கார் பிரியர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அதன்பின் கடந்த 2016ல் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த எஸ்யூவியின் அடுத்த தலைமுறை காரை அறிமுகப்படுத்தியது.

மார்ச் மாதத்தில் இந்தியாவிற்கு வரும் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஃபேஸ்லிஃப்ட்...

மிகவும் கவர்ச்சிகரமான விலை பட்டியலுடன் இந்தியாவில் அறிமுகமான இந்த காரில் ஆட்டோமொபைலில் அனுபவமிக்க வாடிக்கையாளர் ஒருவர் விரும்பும் அத்தனை வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருந்தன. இதனால் தான் தற்போது பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த மாடலில் புதியதாக ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

மார்ச் மாதத்தில் இந்தியாவிற்கு வரும் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஃபேஸ்லிஃப்ட்...

இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலின் மிக பெரிய அடையாளமாக இதன் க்ரில் பகுதி விளங்குகிறது. இதேபோன்று, பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய எல்இடி விளக்குகளுடன் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், முன்புற பம்பர் மற்றும் எல்இடி ஃபாக் விளக்குகள் உள்ளிட்டவையும் ரீ-டிசைனிற்கு மாற்றப்பட்டுள்ளன.

மார்ச் மாதத்தில் இந்தியாவிற்கு வரும் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஃபேஸ்லிஃப்ட்...

இதனால் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்புற முனை பகுதி மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. ஃபேஸ்லிஃப்ட் வெர்சனால் காரின் முன்பகுதி மட்டுமே அப்டேட்களை பெற்றுள்ளது. பக்கவாட்டு பகுதிகள் அப்படியே தொடரவுள்ளன.

மார்ச் மாதத்தில் இந்தியாவிற்கு வரும் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஃபேஸ்லிஃப்ட்...

எக்ஸ்1 மாடலின் இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சனின் பின்புறம், ரீ-டிசைனில் எல்இடி டெயில்லேம்ப்ஸ், சிறிது திருத்தியமைக்கப்பட்ட பம்பர் மற்றும் பெரிய அளவிலான எக்ஸாஸ்ட் அவுட்லெட்களை கொண்டுள்ளது. உட்புறத்தில் பெரிய அளவில் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் இந்தியாவிற்கு வரும் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஃபேஸ்லிஃப்ட்...

இந்த அமைப்பு தான் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள மிக பெரிய மாற்றமாகும். அதாவது தற்போதைய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 மாடலின் 6.5 இன்ச்சிற்கு பதிலாக, 8.8 இன்ச்சில் தொடுத்திரை சிஸ்டம் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் காரில் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அதில் உள்ள வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை.

மார்ச் மாதத்தில் இந்தியாவிற்கு வரும் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஃபேஸ்லிஃப்ட்...

ஏற்கனவே கூறியதுபோல், என்ஜினும், அது வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகளிலும் எந்தவொரு அப்டேட்டும் கொண்டுவரப்படவில்லை. தற்போதைய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 மாடலானது 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என இரு என்ஜின் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மார்ச் மாதத்தில் இந்தியாவிற்கு வரும் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஃபேஸ்லிஃப்ட்...

இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 192 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மற்றொரு டீசல் என்ஜின் தேர்வு 188 பிஎச்பி பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனை காருக்கு அதிகப்பட்சமாக வழங்குகிறது.

மார்ச் மாதத்தில் இந்தியாவிற்கு வரும் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஃபேஸ்லிஃப்ட்...

இந்த எக்ஸ்1 எஸ்யூவி மாடலில் பெட்ரோல் என்ஜினுடன் 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும், டீசல் என்ஜினுடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக வழங்கப்பட்டு வருகின்றன.

மார்ச் மாதத்தில் இந்தியாவிற்கு வரும் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஃபேஸ்லிஃப்ட்...

ஜெர்மன் நாட்டை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலின் மூலம் சில ப்ரீமியம் தொழிற்நுட்பங்களை இந்திய சந்தைக்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலில் தற்போதைய எக்ஸ்1 மாடலை விட அதிக வசதிகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
2020 BMW X1 India Launch Date Confirmed: Receives Updated Styling & Interiors
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X