முதன்முறையாக பிஎம்டபிள்யூ எக்ஸ்3 மாடலின் புதிய எம் வேரியண்ட் இந்திய சாலையில் சோதனை...

உலகளாவிய அறிமுகத்திற்கு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு பிஎம்டபிள்யூ எக்ஸ்3 மாடலை இந்தியாவில் சந்தைப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்திய சாலையில் இந்த கார் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் முதன்முறையாக சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

முதன்முறையாக பிஎம்டபிள்யூ எக்ஸ்3 மாடலின் புதிய எம் வேரியண்ட் இந்திய சாலையில் சோதனை...

இதனால் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்த புதிய மாடல் மிக விரைவில் சந்தையில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. எக்ஸ்4 மாடலின் சிறிய ரக காரான எக்ஸ்3, பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் இருந்து புதிய பாக்கெட்-ராக்கெட் எஸ்யூவி காராக நிலைநிறுத்தப்படவுள்ளது.

முதன்முறையாக பிஎம்டபிள்யூ எக்ஸ்3 மாடலின் புதிய எம் வேரியண்ட் இந்திய சாலையில் சோதனை...

இந்நிறுவனத்தின் எம் கார்களை போன்று, வலுவான உடற் பாகங்களை பெற்றுள்ள இந்த புதிய கார், அதிநவீன சேசிஸ் தொழிற்நுட்பத்தை கொண்டுள்ளது. எலக்ட்ரிக் மூலமாக கண்ட்ரோல் செய்யக்கூடிய டேம்பர்கள், ட்ராக் மற்றும் அன்றாட பயன்பாடு என இரண்டு விதமான செயல்பாட்டிற்கும் பயன்படுத்தும் விதமாக ட்யூன் செய்யப்பட்டுள்ளது.

முதன்முறையாக பிஎம்டபிள்யூ எக்ஸ்3 மாடலின் புதிய எம் வேரியண்ட் இந்திய சாலையில் சோதனை...

20-இன்ச் எம் லைட்-அலாய் சக்கரங்களை கட்டுப்படுத்துவதற்கு, பிரத்யேகமான எம் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் வலுவான எம்-கலவை ப்ரேக்குகள் இந்த 2020 காரில் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் எம் எக்ஸ்ட்ரைவ் மோட்களை தேவையான இடங்களில் சரியாக பயன்படுத்தினால் இந்த எக்ஸ்3 மாடலை சறுக்கலான பகுதிகளிலும் எளிதாக இயக்கி செல்ல இயலும்.

முதன்முறையாக பிஎம்டபிள்யூ எக்ஸ்3 மாடலின் புதிய எம் வேரியண்ட் இந்திய சாலையில் சோதனை...

டிசைன் பாகங்களை பொறுத்த வரையில் 2020 எக்ஸ்3 எம் கார், மேற்புறமாக பெரிய அளவிலான ஏர் இண்டேக்குகள் மற்றும் காரை சுற்றிலும் ஸ்டைலிஷான பாடி கிட்-ஐ கொண்டுள்ளது. உட்புறத்தில் இந்த புதிய மாடலின் கேபின் வெர்னஸ்கா லெதரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக பிஎம்டபிள்யூ எக்ஸ்3 மாடலின் புதிய எம் வேரியண்ட் இந்திய சாலையில் சோதனை...

இதனால் எம் லெதரில் ஸ்டேரிங் சக்கரத்தை கொண்டுள்ள இந்த 2020 கார், எம் கியர்ஷிஃப்ட் தேர்ந்தெடுப்பான் லிவர் மற்றும் பிரத்யேகமான எம் காக்பிட் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது. பிஎம்டபிள்யூவின் கிட்னி வடிவிலான க்ரில், மிரர் கேப்கள், எம் கில்ஸ், பின்புற ஸ்பாய்லர் மற்றும் எம் ஸ்போர்ட் எக்ஸாஸ்ட் போன்றவை மற்ற மாடல்களுக்கு எக்ஸ்3 எம் வேரியண்ட் கடுமையான போட்டியினை தர உதவும்.

முதன்முறையாக பிஎம்டபிள்யூ எக்ஸ்3 மாடலின் புதிய எம் வேரியண்ட் இந்திய சாலையில் சோதனை...

இந்த புதிய மாடலின் அல்காண்டாரா ட்ரிம்களின் உட்புறத்தில் மெரினோ லெதர் பயன்படுத்தப்பட்டுள்ளது. டிசைன் மாற்றங்களுக்கு ஏற்றாற்போல் சக்தி வாய்ந்த புதிய 3.0 லிட்டர் எம் ட்வின்பவர் டர்போ என்ஜின் தற்போது சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள எக்ஸ்3 மாடலின் புதிய எம் வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக பிஎம்டபிள்யூ எக்ஸ்3 மாடலின் புதிய எம் வேரியண்ட் இந்திய சாலையில் சோதனை...

அதிப்பட்சமாக 473 பிஎச்பி பவர் மற்றும் 600 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்கக்கூடிய இந்த என்ஜின் இந்தியாவில் அறிமுகமாகுவதற்கு முன்னதாக சந்தையில் உள்ள போட்டியினை சமாளிக்க 30 பிஎச்பி பவரை கூடுதலாக பெற்று 503 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் திருத்தியமைக்க பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதன்முறையாக பிஎம்டபிள்யூ எக்ஸ்3 மாடலின் புதிய எம் வேரியண்ட் இந்திய சாலையில் சோதனை...

ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 8-ஸ்பீடு எம் ஸ்டெப்ட்ரானிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இது பின்புற சக்கரங்கள் சார்புடைய ஆற்றலை ஆக்டீவ்வான தனிப்பட்ட எம்-விற்கு வழங்கவுள்ளது. இவற்றுடன் எம் எக்ஸ்ட்ரைவ் ஆல்-வீல்-ட்ரைவ் சிஸ்டமும் உள்ளது. 0-லிருந்து 100 kMPh என்ற வேகத்தை 4.2 வினாடிகளில் அடையும் எக்ஸ்3 மாடலின் இந்த புதிய எம் வேரியண்ட் 100 kMPh-ஐ வெறும் 4.1 வினாடிகளில் எட்டிவிடும்.

முதன்முறையாக பிஎம்டபிள்யூ எக்ஸ்3 மாடலின் புதிய எம் வேரியண்ட் இந்திய சாலையில் சோதனை...

அறிமுகத்திற்கு பிறகு பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்த கார், போர்ஷே மேகன் மாடலுக்கு போட்டியாக இருக்கும் என்றாலும், இதன் செயல்படுதிறனிற்கு மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி 63 ஏஎம்ஜி, ஜாக்குவார் எஃப்-பேஸ் எஸ்விஆர் மற்றும் ஆடி எஸ்க்யூ5 மாடல்கள் தான் சரியான போட்டி மாடல்களாக விளங்கும். இதில் ஜாக்குவார் எஃப்-பேஸ் மாடலின் எஸ்விஆர் வேரியண்ட் மற்றும் ஆடி எஸ்க்யூ5 கார் இந்தியாவில் இப்போதுவரை அறிமுகமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source: ssim700

Most Read Articles
English summary
BMW X3 M spotted in India; launch soon
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X