கவர்ச்சிக்கரமான நிறத்தில் விற்பனைக்கு வரும் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 ஷடோவ் எடிசன்...

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி காருக்கான புதிய டார்க் ஷடோவ் எடிசன் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ள இந்த புதிய எடிசன் காரை பற்றிய முழு விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கவர்ச்சிக்கரமான நிறத்தில் விற்பனைக்கு வரும் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 ஷடோவ் எடிசன்...

யுஎஸ்ஏ, ஸ்பார்டங்பர்க் பகுதியில் உள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தொழிற்சாலையில் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தயாரிக்கப்படவுள்ள எக்ஸ்7 எஸ்யூவி மாடலின் இந்த புதிய எடிசன் வெறும் 500 யூனிட்கள் மட்டுமே உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படவுள்ளது.

கவர்ச்சிக்கரமான நிறத்தில் விற்பனைக்கு வரும் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 ஷடோவ் எடிசன்...

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 மாடல் தற்சமயம் கொண்டிருக்கும் என்ஜின் தேர்வுகள் மற்றும் இயந்திர பாகங்களை அப்படியே பெற்று வரவுள்ள இந்த லிமிடேட் எடிசன் கார் காஸ்மெட்டிக் மாற்றங்களின் மூலமாக தான் வேறுப்பட்டிருக்கும். இதில் முக்கியமானதாக ஃப்ரோஜன் ஆர்க்டிக் க்ரே மெட்டாலிக் பெயிண்ட் அமைப்பு விளங்கும்.

கவர்ச்சிக்கரமான நிறத்தில் விற்பனைக்கு வரும் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 ஷடோவ் எடிசன்...

ப்ராண்ட்டின் உயர் மட்ட தனிப்பயனாக்குதல் திட்டத்தில் வழங்கப்படவுள்ள இந்த பெயிண்ட் அமைப்பை பெறும் இந்த டார்க் ஷடோவ் எடிசன் காரில் தான் எந்தவொரு எஸ்யூவி கார்களிலும் இல்லாத வகையில் தனிப்பயனாக்குதல் திட்டத்தை முதன்முறையாக பிஎம்டபிள்யூ நிறுவனம் கொண்டுவரவுள்ளது.

கவர்ச்சிக்கரமான நிறத்தில் விற்பனைக்கு வரும் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 ஷடோவ் எடிசன்...

புதிய பெயிண்ட் அமைப்புடன், காரின் B & C பில்லர்கள் மற்றும் வெளிப்புற கண்ணாடிகள் அதி பளபளப்பான ஷடோவ் லைனில் வடிவமைக்கப்படவுள்ளன. அதேபோல் ப்ராண்ட்டின் அடையாளமான கிட்னி வடிவிலான க்ரில், எதிர்காற்றை உட்கொள்ளும் பகுதி மற்றும் எக்ஸாஸ்ட் சிஸ்டத்தின் டெயில்பைப் கவர்கள் உள்ளிட்டவை கருப்பு க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்டிருப்பதை தற்போது வெளியிடப்பட்டுள்ள படங்கள் மூலமாக அறிய முடிகிறது.

கவர்ச்சிக்கரமான நிறத்தில் விற்பனைக்கு வரும் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 ஷடோவ் எடிசன்...

வெளிப்புறத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மற்ற மாற்றங்களாக பளபளப்பான கருப்பு நிறத்தில் ரூஃப் ரெயில் மற்றும் பாதுகாப்பு க்ளாசிங் சன்ரூஃப் உள்ளிட்டவை உள்ளன. இந்த டார்க் எடிசன் காற்று இயக்கவியலுக்கு உகந்த வகையில் எம் ஸ்போர்ட்ஸ் தொகுப்பின் உடற் பாகங்களுடன் விற்பனை செய்யப்படவுள்ளது.

கவர்ச்சிக்கரமான நிறத்தில் விற்பனைக்கு வரும் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 ஷடோவ் எடிசன்...

இந்த பாகங்களில் வித்தியாசமான பம்பர்கள், ஏர் டேம், சைடு ஸ்கிர்ட்ஸ் மற்றும் வி-ஸ்போக் டிசைன் & ஹெட் ப்ளாக் மேட் நிறத்தில் செயல்திறன்மிக்க டயர்களுடன் 22-இன்ச் எம் லைட்-அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன. இவற்றுடன் எம் ஸ்போர்ட்ஸ் எக்ஸாஸ்ட் சிஸ்டத்தையும் இந்த புதிய எடிசன் பெற்றுள்ளது.

கவர்ச்சிக்கரமான நிறத்தில் விற்பனைக்கு வரும் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 ஷடோவ் எடிசன்...

எக்ஸ்7 டார்க் ஷடோவ் எடிசன் 6-இருக்கை மற்றும் 7-இருக்கை என்ற இரு விதமான அமைப்புகளிலும் சந்தைப்படுத்தப்படவுள்ளது. வெளிப்புறத்தை போல் உட்புறத்திலும் சில பாகங்கள் எம் ஸ்போர்ட் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் இதன் கேபின் எம்-ஸ்பெக் லெதரால் மூடப்பட்ட ஸ்டேரிங் சக்கரத்துடன் நைட் ப்ளூ & ப்ளாக் என்ற ட்யூல்-டோன் மெரினோ முழு லெதர் உள்ளமைவை பெறவுள்ளது.

கவர்ச்சிக்கரமான நிறத்தில் விற்பனைக்கு வரும் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 ஷடோவ் எடிசன்...

உட்பகுதியில் மேற்கூரை நைட் ப்ளூ & அல்காண்ட்ரா ஃபினிஷிங் செய்யப்பட்டிருக்கும். மைய கன்சோல் ஆனது பியானோ கருப்பு நிறத்தில் ஸ்பெஷல் எடிசன் முத்திரை கொண்டிருக்கும். ஏற்கனவே கூறியதுபோல், இந்த லிமிடேட் எடிசனில் என்ஜின் தேர்வுகளில் எந்த மாற்றமும் இருக்காது.

கவர்ச்சிக்கரமான நிறத்தில் விற்பனைக்கு வரும் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 ஷடோவ் எடிசன்...

இதனால் எக்ஸ்7 எஸ்யூவி மாடலின் வழக்கமான மூன்று என்ஜின் தேர்வுகளை தான் இந்த ஸ்பெஷல் எடிசன் காரும் பெறவுள்ளது. இந்த மூன்று என்ஜின்களுடனும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் ஆனது 4-சக்கர ட்ரைவ் சிஸ்டத்துடன் வழங்கப்படவுள்ளது. எக்ஸ்7 டார்க் ஷடோவ் எடிசனின் விலை குறித்த எந்த தகவலும் தற்போதைக்கு கிடைக்கவில்லை.

Most Read Articles

English summary
BMW X7 Dark Shadow Edition
Story first published: Saturday, July 25, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X