கொரோனா பரவலுக்கு முன்பே சமூக இடைவெளியுடன் தயாரான டெம்போ டிராவலர்... தமிழகத்தில் நிகழ்ந்த ஆச்சரியம்?

கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பே சமூக இடைவெளியுடன் ஃபோர்ஸ் டிராவலர் வேன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. அதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

கொரோனா பரவலுக்கு முன்பே சமூக இடைவெளியுடன் தாயாரன டிராவல்லர்... தமிழகத்தில் நிகழ்ந்த ஆச்சரியம்?

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போதும் பல மாநிலங்களில் முழுமையாக போக்குவரத்து சேவைத் தொடங்கப்படாமல் இருக்கின்றது. உயிரைக் கொல்லும் இந்த வைரஸ் மிக எளிதில் பரவும் தன்மைக் கொண்டிருப்பதன் காரணத்தினால் இந்த நிலை உலகம் முழுவதும் நீடித்து வருகின்றது.

கொரோனா பரவலுக்கு முன்பே சமூக இடைவெளியுடன் தாயாரன டிராவல்லர்... தமிழகத்தில் நிகழ்ந்த ஆச்சரியம்?

அதேசமயம், வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக சமூக இடைவெளி கையாளப்பட்டு வருகின்றது. அதாவது, ஒருவருக்கு ஒருவர் இடையே இடைவெளி கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இதேமுறைதான் தற்போது வாகன போக்குவரத்திலும் கையாளப்பட்டு வருகின்றது.

கொரோனா பரவலுக்கு முன்பே சமூக இடைவெளியுடன் தாயாரன டிராவல்லர்... தமிழகத்தில் நிகழ்ந்த ஆச்சரியம்?

அதாவது, இருவர் அமர்ந்து செல்லும் இருக்கையில் ஒருவரும், மூவர் அமர்ந்து பயணிக்கக்கூடிய இருக்கையில் இருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு, கொரோனா வைரசால் ஏற்பட்ட மற்றும் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் ஏராளம். ஆனால், இந்த நிலைக்கு முன்னரே போர்ஸ் டிராவல்லர் ஒன்று சமூக இடைவெளியை உறுதி செய்கின்ற வகையில் தனி இருக்கையுடன் தயாராகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா பரவலுக்கு முன்பே சமூக இடைவெளியுடன் தாயாரன டிராவல்லர்... தமிழகத்தில் நிகழ்ந்த ஆச்சரியம்?

12+1 என்ற அமைப்பில் இருந்த ஃபோர்ஸ் டிராவல்லர் தற்போது வெறும் 5+1 என்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லைங்க டிராவல்லரின் படகு போன்ற அமைப்புடைய மேற்கூரைக்கு பதிலாக தட்டையான வடிவம் கொண்ட மேற்கூரை வழங்கப்பட்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த மாற்றங்களும் அதிக சொகுசான பயணத்திற்காக மட்டுமே செய்யப்பட்டுள்ளது. ஆகையால், இதற்கும் கொரோனா வைரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

கொரோனா பரவலுக்கு முன்பே சமூக இடைவெளியுடன் தாயாரன டிராவல்லர்... தமிழகத்தில் நிகழ்ந்த ஆச்சரியம்?

குறிப்பாக, ஐவர் கொண்ட குடும்பத்தினர் சொகுசாக பயணிக்கும் வகையில் இந்த ஃபோர்ஸ் டிராவல்லர் மாற்றப்பட்டுள்ளது. இதனை தமிழகத்தைச் சேர்ந்த ஜான் என்பவர் மாடிஃபைச் செய்துள்ளார். இந்த வேனில் செய்யப்பட்டுள்ள மற்றுமொரு முக்கிய மாற்றமாக அதன் நம்பர் பிளேட் உள்ளது.

கொரோனா பரவலுக்கு முன்பே சமூக இடைவெளியுடன் தாயாரன டிராவல்லர்... தமிழகத்தில் நிகழ்ந்த ஆச்சரியம்?

பொதுவாக, எந்தவொரு பெரிய உருவம் கொண்ட, கார் அல்லாத வாகனத்தின் பதிவெண்ணைப் பார்த்தாலும் மஞ்சள் நிறத்தில் மட்டுமே இருக்கும். ஆனால், இந்த டிராவல்லரின் நம்பர் பிளேட்டோ வெள்ளை நிறத்தில் உள்ளது. எனவேதான் இது ஓர் குடும்பத்தின் தனிப்பட்ட பயணத்திற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட வேன் என்று உறுதியாகக் கூறப்படுகின்றது.

கொரோனா பரவலுக்கு முன்பே சமூக இடைவெளியுடன் தாயாரன டிராவல்லர்... தமிழகத்தில் நிகழ்ந்த ஆச்சரியம்?

பதிவெண்ணைக் கொண்டு பார்க்கையில் சேலத்தில் இந்த மாற்றியமைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்திருக்கும் என யூகிக்கப்படுகின்றது. ஃபோர்ஸ் டிராவல்லர் சொகுசு பயணத்தை வழங்கும் வகையில் மட்டுமின்றி கவர்ச்சியாக காட்சியை வழங்கும் வகையிலும் மாற்றப்பட்டுள்ளது. அதாவது இதன் பழைய தோற்றம் பெருமளவில் மாற்றப்பட்டு முற்றிலும் அழகிய கேரவனைப் போல் மாற்றப்பட்டுள்ளது.

கொரோனா பரவலுக்கு முன்பே சமூக இடைவெளியுடன் தாயாரன டிராவல்லர்... தமிழகத்தில் நிகழ்ந்த ஆச்சரியம்?

ஆனால், இது கேரவன் கிடையாது. கேரவனில் சகல வசதிகளும் இருக்கும். அதாவது, கழிவறை முதல் ஒய்வறை வரை பல வசதிகள் வழங்கப்பட்டிருக்கும். ஆனால், அம்மாதிரியான வசதிகள் எதையும் இந்த டிராவல்லர் பெறவில்லை. இருப்பினும், ராயலான தோற்றம் மற்றும் வசதிக்கு எந்தவொரு குறைச்சலுமின்றி காணப்படுகின்றது.

கொரோனா பரவலுக்கு முன்பே சமூக இடைவெளியுடன் தாயாரன டிராவல்லர்... தமிழகத்தில் நிகழ்ந்த ஆச்சரியம்?

போர்ஸ் டிராவல்லர் எனும் பெயர்கூட இதில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஸ்கைலைனர் எனும் பேட்ஜ் வழங்குகள் வாகனத்தின் முன் மற்றும் பின் பக்கத்தில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், வெளிப்புறத்தில் செய்யப்பட்ட பிரமாண்ட மாற்றமாக இதன் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளன. பொதுவாக டிராவல்லரில் பிள்ளர்கள் கொண்ட தனி தனி கண்ணாடிகளே இருக்கும். ஆனால், இதில் ஒரே நீளமான கண்ணாடி ஜன்னல் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலுக்கு முன்பே சமூக இடைவெளியுடன் தாயாரன டிராவல்லர்... தமிழகத்தில் நிகழ்ந்த ஆச்சரியம்?

லிமோசைன் எனப்படும் நீளமான கார்களில்கூட இதுபோன்று ஒரு அமைப்பை நம்மால் காண முடியாது. சிறப்பு வசதியாக இந்த ஜன்னல் வசதியை ஜான் வழங்கியிருக்கின்றார். இத்துடன், ஸ்மோக்கட் ஹெட்லை, மரத்தாலான அடிப்பகுதி, பிரிமியம் தரத்திலான ரூஃப் மற்றும் அதிக சொகுசு வாய்ந்த ஐந்து இருக்கைகள் உள்ளிட்டவையும் டிராவல்லரில் வழங்கப்பட்டுள்ளது. இது நெடுந்தூர பயணத்தை அழகானதாகவும், சொகுசானதாகவும் மாற்ற உதவும்.

கொரோனா பரவலுக்கு முன்பே சமூக இடைவெளியுடன் தாயாரன டிராவல்லர்... தமிழகத்தில் நிகழ்ந்த ஆச்சரியம்?

இந்த இருக்கைகள் அனைத்தும் படுக்கையைப் போல் அதிகளவில் மடங்கும் தன்மையைக் கொண்டுள்ளது. எனவேதான் நெடுந்தூர பயணத்திற்கு ஏற்ற வாகனமாக இது கருதப்படுகின்றது. இதுமட்டுமின்றி, ஆறு ஏசி வெண்டுகள், படிப்பதற்கு ஏதுவான மின் விளக்கு, மனநிலையை மாற்றும் மின் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் டிராவல்லரில் இடம்பெற்றிருக்கின்றன.

கொரோனா பரவலுக்கு முன்பே சமூக இடைவெளியுடன் தாயாரன டிராவல்லர்... தமிழகத்தில் நிகழ்ந்த ஆச்சரியம்?

தொடர்ந்து, பெரிய ஸ்பீக்கர் பாக்ஸ் டிராவல்லர் கேபினின் முன் பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. இது பயணத்தின்போது இசையை மழையில் நனைய உதவும். இத்துடன், 1 கேவி திறனுடைய இன்வெர்டரும் வழங்கப்பட்டுள்ளது. இது தேவையான மின்சார திறனைப் பெற வழி வழகுக்கும். குறிப்பாக, செல்போன் சார்ஜ், கூடுதல் மின்சாதனங்களுக்கு மின்திறன் பெற அது உதவும்.

இந்த ஒட்டுமொத்த மாற்றத்தைப் பெற்ற ஃபோர்ஸ் டிராவல்லர் ஓர் பிஎஸ்-4 மாடல் வாகனம் ஆகும். இதில்தான் பல்வேறு சொகுசு வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. மேற்கூறிய சொகுசு அம்சங்களுடன் மைக்ரோவேவ் போன்ற உபகரணங்களுடன் அதில் நிலை நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. போர்ஸ் டிராவல்லர் வேனில் 2.6 லிட்டர் டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
BS4 Force Traveller Customized Into A Luxury Van. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X