அறிமுகத்திற்கு முன்னதாக ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் பிஎஸ்6 புனேக்கு அருகே சோதனை...

மிக விரைவில் ஃபோர்டு நிறுவனத்தில் இருந்து அறிமுகமாகவுள்ள ஃப்ரீஸ்டைல் பிஎஸ்6 மாடல் புனே அருகே சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டப்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

அறிமுகத்திற்கு முன்னதாக ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் பிஎஸ்6 புனேக்கு அருகே சோதனை...

புதிய மாசு உமிழ்வு விதி இந்தியா முழுவதும் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அறிமுகமாகவுள்ள காரணத்தினால் அனைத்து முன்னணி நிறுவனங்களும் பிஎஸ்6 தரத்தில் தங்களது தயாரிப்பு மாடல்களை அப்டேட் செய்து வருகின்றன. இந்த வகையில் ஃபோர்டு நிறுவனத்தில் இருந்து விரைவில் அறிமுகமாகவுள்ள மாடல் தான் ஃப்ரீஸ்டைல் பிஎஸ்6.

அறிமுகத்திற்கு முன்னதாக ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் பிஎஸ்6 புனேக்கு அருகே சோதனை...

தற்போது சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த ஹேட்ச்பேக் மாடலின் பின்புறத்தில் மாசு உமிழ்வை அளவிடும் சோதனை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சோதனை ஓட்ட புகைப்படங்களை பார்க்கும்போது, கருப்பு நிற அலாய் சக்கரங்களை தவிர்த்து இந்த புதிய பிஎஸ்6 மாடலில் வேறெந்த அப்டேட்டையும் எதிர்பார்க்க முடியாது என்று தான் தெரிகிறது.

அறிமுகத்திற்கு முன்னதாக ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் பிஎஸ்6 புனேக்கு அருகே சோதனை...

ஆனால் '2020 மை' என்ற தலைப்பை நியாயப்படுத்துவதற்காக இதன் இறுதிக்கட்ட விற்பனை மாடல் உட்புறத்தையும் சேர்த்து சில காஸ்மெட்டிக் மாற்றங்களை பெற்றிருக்கும் என தெரிகிறது. அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் மாடலை ஃபிகோ ஹேட்ச்பேக்கின் பெரிய அளவிலான காராக கருத முடியாது.

அறிமுகத்திற்கு முன்னதாக ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் பிஎஸ்6 புனேக்கு அருகே சோதனை...

வித்தியாசமான ட்ரைவிங் அனுபவத்திற்காக ஃபோர்டு நிறுவனத்தின் பொறியியலாளர்கள் சஸ்பென்ஷன் உள்பட காரின் முக்கியமான சில இயந்திர பாகங்களை தரம் உயர்த்தியுள்ளனர். பொதுவாக மகிழ்ச்சியான பயணத்தை வழங்கக்கூடிய தயாரிப்பு மாடல்களை உருவாக்குவதில் ஃபோர்டு நிறுவனம் மிகவும் அனுபவமிக்கது என சந்தையில் வழக்கமாக ஒரு பேச்சு உள்ளது.

அறிமுகத்திற்கு முன்னதாக ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் பிஎஸ்6 புனேக்கு அருகே சோதனை...

இந்நிறுவனத்தின் ஃப்ரீஸ்டைல் பிஎஸ்4 மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு என்ஜின் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் 1.2 லிட்டர் NA 3-சிலிண்டர் ட்ராகன் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 95 பிஎச்பி பவரையும் 120 என்எம் டார்க் திறனையும் காருக்கும் வழங்கும் ஆற்றல் கொண்டது.

அறிமுகத்திற்கு முன்னதாக ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் பிஎஸ்6 புனேக்கு அருகே சோதனை...

மற்றொரு 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டிடிசிஐ டீசல் என்ஜின் 99 பிஎச்பி மற்றும் 215 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும். இந்த இரு என்ஜின்களுடனும் ட்ரான்ஸ்மிஷனிற்காக 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

அறிமுகத்திற்கு முன்னதாக ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் பிஎஸ்6 புனேக்கு அருகே சோதனை...

புதிய மாசு உமிழ்வு விதிக்கான காலக்கெடு இன்னும் 1.5 மாதங்களில் நிறைவடையவுள்ளதால் புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் பிஎஸ்6 மாடலின் அறிமுகத்தை இந்தியாவில் எந்த நேரத்திலும் எதிர்பார்க்கலாம்.

அறிமுகத்திற்கு முன்னதாக ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் பிஎஸ்6 புனேக்கு அருகே சோதனை...

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் மற்றும் டொயோட்டா எடியோ க்ராஸ் மாடல்களுக்கு போட்டியாக உள்ள ஃபோர்டு நிறுவனத்தின் இந்த க்ராஸ்-ஹேட்ச்பேக் மாடல் ரூ.5.91 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிஎஸ்6 அப்டேட்டால் இதன் விலை சிறிது அதிகரிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

Source: Rushlane

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford Freestyle BS6 spied testing in Pune – Launch soon
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X