ஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல் காரை சொந்தமாக்குவதற்கான நேரம் வந்துவிட்டது...!

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள ஹோண்டா சிவிக் பிஎஸ்6 மாடலுக்கான முன்பதிவுகள் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஹோண்டா ஷோரூம்களிலும் இணையம் மூலமாக துவங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல் காரை சொந்தமாக்குவதற்கான நேரம் வந்துவிட்டது...!

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் சிவிக் மாடலை கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது. முதல் மாதத்திலேயே 2,200 யூனிட்கள் விற்பனையை சந்தையில் பதிவு செய்திருந்த இந்த செடான் கார் கடந்த ஆண்டில் ஜூன் மாதம் வரையில் ஸ்கோடா ஆக்டேவியா மாடலுடன் போட்டியிட்டு விற்பனையில் கணிசமான முத்திரையை பதித்து வந்தது.

ஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல் காரை சொந்தமாக்குவதற்கான நேரம் வந்துவிட்டது...!

ஆனால் இந்த காரில் பிஎஸ்6 பெட்ரோல் என்ஜின் மட்டும் தான் வழங்கப்பட்டு வருகிறது. இதன் பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்ட டீசல் மாடல் விரைவில் அறிமுகமாகவுள்ளது. இதற்கிடையில் மற்ற தயாரிப்பு நிறுவனங்களை போல் ஹோண்டா நிறுவனமும் இந்த டீசல் மாடலுக்கான முன்பதிவை இணையம் மூலமாக ஆரம்பித்துள்ளது.

ஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல் காரை சொந்தமாக்குவதற்கான நேரம் வந்துவிட்டது...!

இந்தியாவில் புதிய மாசு உமிழ்வு கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக பெரும்பான்மையான தயாரிப்பு நிறுவனங்கள் பிஎஸ்6 தரத்தில் தயாரிப்புகளை உருவாக்க கட்டாயத்திற்கு உள்ளாகப்பட்டன. சில நிறுவனங்கள் பிஎஸ்6-க்கு அப்டேட் செய்ய முடியாத மாடல்களின் விற்பனைகளை நிறுத்தியுள்ளன.

ஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல் காரை சொந்தமாக்குவதற்கான நேரம் வந்துவிட்டது...!

கடந்த ஆண்டு ஹோண்டா நிறுவனம் 4,928 சிவிக் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இதில் 87 சதவீத கார்கள் பெட்ரோல் வேரியண்ட்கள் தான். சிவிக் பெட்ரோல் மாடலானது வி, விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் உள்ளிட்ட ட்ரிம்களில் விற்பனைக்கு தற்சமயம் கிடைக்கிறது.

ஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல் காரை சொந்தமாக்குவதற்கான நேரம் வந்துவிட்டது...!

இந்த பெட்ரோல் மாடலில் 1.8 லிட்டர் 4-சிலிண்டர் ஐ-விடிஇசி என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த பிஎஸ்6 என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு சிவிடி பெடல்-ஷிஃப்ட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த கியர்பாக்ஸ் மூலமாக என்ஜினானது ஆற்றலை முன் சக்கரங்களுக்கு வழங்குகிறது.

ஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல் காரை சொந்தமாக்குவதற்கான நேரம் வந்துவிட்டது...!

இந்த பெட்ரோல் என்ஜினில் சிவிக் பிஎஸ்6 மாடல் 16.5 kmpl மைலேஜ்ஜை வழங்குகிறது. தற்போது முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ள இதன் பிஎஸ்6 டீசல் மாடலில் 1.6 லிட்டர் ஐ-டிடிஇசி 4-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படவுள்ளது. இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 118 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக காருக்கு வழங்கும்.

ஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல் காரை சொந்தமாக்குவதற்கான நேரம் வந்துவிட்டது...!

சிவிக் பிஎஸ்6 டீசல் மாடலில் 26.8 kmpl மைலேஜ்ஜை பெற முடியும். இதன் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் கூடுதலாக தேர்வாக விலையுயர்ந்த வேரியண்ட்களில் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் வழங்கப்படலாம். இன்னும் சில நாட்களில் அறிமுகமாகவுள்ள இந்த டீசல் மாடலின் விலையை சற்று அதிகமாக எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda Civic BS6 Diesel Bookings Open Ahead Of Launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X