புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ எப்போது விற்பனைக்கு வரும்..?

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து அடுத்த ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ளதாக கூறப்படும் ஸ்கார்பியோ மாடலின் அடுத்த தலைமுறை கார் இரு நிறங்களில் தற்போது சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ எப்போது விற்பனைக்கு வரும்..?

கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்பட்ட ஸ்கார்பியோவின் இந்த புதிய தலைமுறை கார் சோதனை ஓட்டங்களில் பெரிய அளவில் ஈடுப்படுத்தப்படாததால் காட்சிப்படுத்தப்படவில்லை.

புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ எப்போது விற்பனைக்கு வரும்..?

தற்போது சோதனை ஓட்டத்தில் ஈடுப்பட்டுள்ள இந்த கார்களில் தற்போதைய ஸ்கார்பியோ மாடலில் இருந்து எந்த மாற்றத்தையும் அறிய முடியவில்லை. மேலும் இதன் இந்திய அறிமுகத்தை நாம் நினைத்துள்ளதை விட தாமதமாக தான் காண்போம் என்றே தெரிகிறது.

புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ எப்போது விற்பனைக்கு வரும்..?

டிசைன் அமைப்பில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை என்றாலும் புதிய தலைமுறை ஸ்கார்பியோ கார் புதிய 2.0 லிட்டர் டீசல் என்ஜினை பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் பிஎஸ்6 தரத்தில் தற்போதைய ஸ்கார்பியோ மாடலில் உள்ள 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் என்ஜினையும் புதிய மாசு உமிழ்வு விதிக்கு ஏற்ப சில அப்கிரேட்களுடன் இந்த 2021 மாடல் பெறவுள்ளது.

புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ எப்போது விற்பனைக்கு வரும்..?

இந்த டீசல் என்ஜின் தற்சமயம் விற்பனை செய்யப்பட்டு வரும் ஸ்கார்பியோ மாடலில் பிஎஸ்4 தரத்தில் இரு விதமான நிலைகளில் ஆற்றலை வெளிப்படுத்தி வருகிறது. அதாவது ஸ்கார்பியோவின் மிட்-வேரியண்ட்டில் இந்த என்ஜின் 120 பிஎச்பி பவர் மற்றும் 280 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ எப்போது விற்பனைக்கு வரும்..?

அதுவே விலை அதிகமான வேரியண்ட்டில் 140 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக காருக்கு வழங்கி வருகிறது. இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் 2021 ஸ்கார்பியோ மாடல் கூடுதலாக 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸையும் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ எப்போது விற்பனைக்கு வரும்..?

மேலும் இந்த புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடலுக்கு பிஎஸ்6 தரத்தில் கொடுக்கப்படவுள்ள 2.2 லிட்டர் என்ஜின் தேர்வு தற்போதைய மாடலில் உள்ளதுபோல் இல்லாமல் ஒரே ஒரு ட்யூனில் மட்டுமே ஆற்றலை காருக்கு வழங்கவுள்ளது.

புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ எப்போது விற்பனைக்கு வரும்..?

தற்சமயம் ஸ்கார்பியோ மாடலின் விலை குறைவான வேரியண்ட்களில் வழங்கப்பட்டு வருகின்ற 75 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 2.5 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வு இந்த மாத இறுதிக்குள் சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள பிஎஸ்6 ஸ்கார்பியோ மாடலில் வழங்கப்பட போவதில்லை.

புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ எப்போது விற்பனைக்கு வரும்..?

அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ கார் கடந்த சோதனை ஓட்டங்களில் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் ஈடுப்படுத்தப்பட்டதால், இந்த புதிய மாடலில் டிசைன் அப்டேட்களை மஹிந்திரா நிறுவனம் கொண்டுவரவுள்ளது உறுதி. ஏனெனில் கடந்த 17 வருடங்களுக்கும் மேலாக இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கும் ஸ்கார்பியோ மாடல் பெரிய அளவிலான அப்டேட்களை பெற்று பல வருடங்களாகிவிட்டது.

புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ எப்போது விற்பனைக்கு வரும்..?

ஸ்கார்பியோவிற்கு விற்பனை போட்டியினை அளிக்க ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் உள்ளிட்ட க்ராஸ்ஓவர் கார்கள் இருந்தாலும், டாடா சஃபாரி ஸ்ட்ரோம் மாடல் தான் முதன்மையான போட்டி மாடலாக பார்க்கப்படுகிறது. தற்போது சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ள ஸ்கார்பியோ அடுத்த தலைமுறை காரின் அறிமுகம் 2021ஆம் ஆண்டில் மே மாதத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.

Source: Rushlane

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
New Gen Mahindra Scorpio Spied
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X