பிஎஸ்6 மஹிந்திரா டியூவி300 புனேவில் சோதனை ஓட்டம்... விரைவில் விற்பனைக்கு வருகிறது...

மராஸ்ஸோ மற்றும் எக்ஸ்யூவி500 மாடல்களின் பிஎஸ்6 வெர்சன்களுடன் மஹிந்திரா நிறுவனம் டியூவி300 மாடலையும் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து வருகிறது. இந்த நிலையில் இந்த பிஎஸ்6 மாடல் தற்போது சோதனை ஓட்டத்தின் போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பிஎஸ்6 மஹிந்திரா டியூவி300 புனேவில் சோதனை ஓட்டம்... விரைவில் விற்பனைக்கு வருகிறது...

மஹிந்திரா நிறுவனம் கடந்த ஆண்டில் இருந்து அதன் தயாரிப்புகளை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருவது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஏனெனில் இந்நிறுவனத்தின் புதிய பிஎஸ்6 மாடல்களான மராஸ்ஸோ மற்றும் எக்ஸ்யூவி500 மாடல்கள் கடந்த பல மாதங்களாக தொடர் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகின்றன.

பிஎஸ்6 மஹிந்திரா டியூவி300 புனேவில் சோதனை ஓட்டம்... விரைவில் விற்பனைக்கு வருகிறது...

இவற்றை தொடர்ந்து டியூவி300 மாடலும் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டு சோதனைகளில் உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது மீண்டும் இந்த கார் சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த ஸ்பை படங்களை மோட்டார்பீம் செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

பிஎஸ்6 மஹிந்திரா டியூவி300 புனேவில் சோதனை ஓட்டம்... விரைவில் விற்பனைக்கு வருகிறது...

இருப்பினும் புனேக்கு அருகே நடத்தப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்ட ஸ்பை படங்களின் மூலம் காரின் முன் பக்கத்தை மட்டும் தான் காண முடிகிறது. இதன்மூலம் பார்க்கும்போது இந்த சோதனை காரின் முன்பக்கத்தில் உள்ள பம்பர், ஹெட்லைட்கள், மூடுபனி விளக்குகளுக்கான குழி, ரேடியேட்டர் க்ரில் உள்ளிட்டவை முந்தைய தலைமுறை காரில் இருந்து சற்று திருத்தியமைக்கபட்டுள்ளதை அறிய முடிகிறது.

பிஎஸ்6 மஹிந்திரா டியூவி300 புனேவில் சோதனை ஓட்டம்... விரைவில் விற்பனைக்கு வருகிறது...

பிஎஸ்6 டியூவி300-ன் இதற்கு முந்தைய சோதனை ஸ்பை படங்கள் கூடுதலாக சில விபரங்களையும் வெளிப்படுத்தி இருந்தன. அதாவது அவற்றின் மூலமாக காரின் பின்பக்க பம்பர், டெயில்லேம்ப்கள் மற்றும் ஸ்பேர் வீல் கவர் உள்ளிட்டவையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளதை அறிந்திருந்தோம்.

பிஎஸ்6 மஹிந்திரா டியூவி300 புனேவில் சோதனை ஓட்டம்... விரைவில் விற்பனைக்கு வருகிறது...

இவற்றுடன் புதிய டிசைனில் அலாய் சக்கரங்களும் இந்த பிஎஸ்6 மஹிந்திரா வாகனத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இதன் உட்புறமும் புதிய உள்ளமைவு உடன் அப்டேட் செய்யப்பட்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை பெற்று வரும் என கூறப்படுகிறது.

பிஎஸ்6 மஹிந்திரா டியூவி300 புனேவில் சோதனை ஓட்டம்... விரைவில் விற்பனைக்கு வருகிறது...

டியூவி300 மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜினை மஹிந்திரா நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த என்ஜின் பிஎஸ்6 தரத்திலும் அதே 101 பிஎச்பி மற்றும் 240 என்எம் டார்க் திறனை தான் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிஎஸ்6 என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுவது உறுதி.

பிஎஸ்6 மஹிந்திரா டியூவி300 புனேவில் சோதனை ஓட்டம்... விரைவில் விற்பனைக்கு வருகிறது...

ஏஎம்டி கியர்பாக்ஸ் கூடுதல் தேர்வாக வழங்கப்படுமா என்பதை தற்போதைக்கு உறுதியாக கூற முடியவில்லை. கொரோனா வைரஸ் உலகம் முழுவதில் பரவவில்லை எனில் இந்த பிஎஸ்6 மஹிந்திரா மாடல் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே அறிமுகமாக வேண்டியது. சரி அதெல்லாம் பழைய கதையாயிற்று. தற்போது சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதால் இதன் அறிமுகத்தை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
BS6 Mahindra TUV300 Spotted On Test, Launch Soon
Story first published: Saturday, September 12, 2020, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X