புகாட்டியின் குழந்தைகளுக்கான எலக்ட்ரிக் கார்... விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்...

கடந்த வருடத்தில் ஆண்டு நிறைவு விழாவின் கொண்டாட்டத்தின்போது உறுதியளித்த சபதம் ஒன்றை புகாட்டி நிறுவனம் தற்போது பூர்த்தி செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

புகாட்டியின் குழந்தைகளுக்கான எலக்ட்ரிக் கார்... விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்...

உலகில் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக உள்ள புகாட்டி அதன் 110வது ஆண்டு நிறைவு விழாவை கடந்த ஆண்டு விமர்சையாக கொண்டாடியது. அப்போது இந்த மைல்கல்லை அடைந்ததை நினைவுக்கூறும் வகையில் சிறப்பு பரிசு ஒன்றை வெளியிடவுள்ளதாக உறுதியளித்து இருந்தது.

புகாட்டியின் குழந்தைகளுக்கான எலக்ட்ரிக் கார்... விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்...

அந்த ஸ்பெஷல் பரிசு என்னவென்றால், புகாட்டி பேபி 2 ஆகும். இது முழுக்க முழுக்க 1927ல் வெளியான ஒரிஜினல் புகாட்டி பேபி பொம்மை காருக்கு மரியாதை செலுத்தும் வகையில் வெளியிடப்படும் காராகும். பேபி 2-வின் 3டி படங்களை கடந்த ஆண்டிலேயே வெளியிட்டு இருந்த இந்நிறுவனம் தற்போது இதன் தயாரிப்பு மாடலை வெளியிட்டுள்ளது.

புகாட்டியின் குழந்தைகளுக்கான எலக்ட்ரிக் கார்... விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்...

ஒரிஜினல் பேபி மாடலை போல எலக்ட்ரிக் ஆற்றல் மூலமாக இயங்கக்கூடிய வகையில் பேபி 2 கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஸ்பெஷல் எடிசன் கார், நீக்கக்கூடிய லித்தியம்-இரும்பு பேட்டரிகள், லிமிடேட்-ஸ்லிப் டிஃப்ரென்ஷியல் மட்டுமின்றி ரிஜெனரேட்டிவ் ப்ரேக்கிங் அமைப்பையும் பெற்றுள்ளது.

புகாட்டியின் குழந்தைகளுக்கான எலக்ட்ரிக் கார்... விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்...

முன்னதாக கடந்த ஆண்டிலேயே இந்த கார் 500 யூனிட்கள் மட்டும் தான் தயாரிக்கப்படவுள்ளதாக புகாட்டி நிறுவனம் அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து இந்த ஸ்பெஷல் எடிசன் காரை வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து வந்த நிலையில் கொரோனாவினால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியினால் சிலர் தங்களது முன்பதிவுகளை ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

புகாட்டியின் குழந்தைகளுக்கான எலக்ட்ரிக் கார்... விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்...

தற்போது வெளியாகியுள்ள பேபி 2 காரின் படங்களில் கார் மிகவும் பழமையான தோற்றத்தில் உள்ளது, இதனால் விலையும் அந்த காலத்திற்கு ஏற்றாற்போல் இருக்கும் என்று மட்டும் தப்பு கணக்கு போட்டுவிடாதீர்கள். ஏனெனில் இந்த ஸ்பெஷல் காரின் ஆரம்ப விலையே 30 ஆயிரம் டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புகாட்டியின் குழந்தைகளுக்கான எலக்ட்ரிக் கார்... விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்...

இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட 26.6 லட்சமாகும். அதேநேரம் அதிகப்பட்சமாக 58,500 டாலர் (ரூ.50.7 லட்சம்) வரையிலும் இந்த பொம்மை கார் விலையினை பெற்றுள்ளது. புகாட்டி பேபி காரின் தோற்றத்தின் உண்மையான பிறப்பிடம் 1920களில் வெளிவந்த புகாட்டி டைப்35 கார்களாகும்.

புகாட்டியின் குழந்தைகளுக்கான எலக்ட்ரிக் கார்... விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்...

அந்த காலத்தில் வெற்றிநடை போட்ட ரேஸ் கார்களில் ஒன்றாக விளங்கிய புகாட்டி டைப்35 காரை எட்டோர் புகாட்டி ஜீன் அவர்கள் தனது நான்கு வயது மகனின் பிறந்த நாளிற்கு பரிசாக வழங்க சில மாற்றங்களை மேற்கொண்டார். அதன் விளைவாக உருவானதே பேபி. 1927-ல் இருந்து 1936 வரையில் மட்டும் இந்த கார் 500 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.

புகாட்டியின் குழந்தைகளுக்கான எலக்ட்ரிக் கார்... விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்...

சரி, புகாட்டி பேபி 2 விஷயத்திற்கு வருவோம். இந்த கார் முழுக்க முழுக்க சிறுவர், சிறுமியர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பெரியவர்களும் சிறிய தூர பயணங்களுக்கு பயன்படுத்தலாம் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

புகாட்டியின் குழந்தைகளுக்கான எலக்ட்ரிக் கார்... விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்...

பேஸ், விட்டெஸ்ஸி, மற்றும் புர் சாங் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் தற்சமயம் சந்தையில் கிடைக்கும் இந்த காரின் அதிகப்பட்ச வேகம் 45 kmph ஆகும். காரை முழு சார்ஜில் 25 கிமீ வரை இயக்கி செல்ல முடியும். இதன் பேட்டரியை கழற்றி மாட்டுவது என்பது சில வினாடிகளில் செய்யக்கூடிய செயலாகும்.

Most Read Articles

மேலும்... #புகாட்டி #bugatti
English summary
Bugatti made a 30,000 euros car for kids and it got sold out
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X