பைடன் எம்-பைட் எலக்ட்ரிக் எஸ்யூவியின் தயாரிப்பு பணிகள் துவங்கின... சீனாவில் இந்த வருடம் அறிமுகம்..

சீனாவை சேர்ந்த இவி ஸ்டார்ட்அப் நிறுவனமான பைடன், மை-பைட் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலின் ப்ரீ-புரோடக்‌ஷன் வேலைகளை துவங்கியுள்ளது. இதனால் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்த வருட இறுதியில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

பைடன் எம்-பைட் எலக்ட்ரிக் எஸ்யூவியின் தயாரிப்பு பணிகள் துவங்கின... சீனாவில் இந்த வருடன் அறிமுகம்..

பைடன் நிறுவனம் முதன்முதலாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிஸான் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்களின் நிர்வாகியாக சந்தையில் அறிமுகமானது. அதன்பின் தனது முதல் டிசைன் புரிதலை கடந்த 2018ல் காட்சிப்படுத்தி இருந்தது. இந்த டிசைனில் நாஞ்சிங் எச்க்யூ மாடல் உள்ளது.

பைடன் எம்-பைட் எலக்ட்ரிக் எஸ்யூவியின் தயாரிப்பு பணிகள் துவங்கின... சீனாவில் இந்த வருடன் அறிமுகம்..

சீனாவில் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகவுள்ள எம்-பைட் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் அடுத்த ஆண்டில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கும் கொண்டு செல்லப்படவுள்ளது. இதற்கான ப்ரீ-புரோடக்‌ஷன் வேலைகள் துவங்கப்பட்டதை வெளிப்படுத்தும் விதமாக மை-பைட் மாடலின் முன்மாதிரி மாடல்கள் தொழிற்சாலை ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

பைடன் எம்-பைட் எலக்ட்ரிக் எஸ்யூவியின் தயாரிப்பு பணிகள் துவங்கின... சீனாவில் இந்த வருடன் அறிமுகம்..

இறுதிகட்ட பணியில் உள்ள இந்த முன்மாதிரி எலக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் பதிவு மற்றும் சான்றிதழ் செயல்பாடுகளில் உட்படுத்தப்படவுள்ளன. வாடிக்கையாளர்களை சென்றடைவதற்கு முன்பாக இந்த தயாரிப்பு மாடல்கள் இன்னும் மெருக்கேற்றப்பட்டுவிடும்.

பைடன் எம்-பைட் எலக்ட்ரிக் எஸ்யூவியின் தயாரிப்பு பணிகள் துவங்கின... சீனாவில் இந்த வருடன் அறிமுகம்..

சீனாவில் இந்த வருட இறுதியில் டெலிவிரியை துவங்கவுள்ள எம்-பைட் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்பி வைப்பதற்கான பணிகள் தற்சமயம் உலகம் முழுவதும் நிலவிவரும் இக்கட்டான சூழ்நிலையால் ஒவ்வொரு நாளும் தாமதமாகி கொண்டே வருகிறது.

பைடன் எம்-பைட் எலக்ட்ரிக் எஸ்யூவியின் தயாரிப்பு பணிகள் துவங்கின... சீனாவில் இந்த வருடன் அறிமுகம்..

எம்-பைட் எலக்ட்ரிக் காரை இரு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்த பைடன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் ஒவ்வொரு வேரியண்ட்டும் தனித்தனி செயல்படுதிறன் மற்றும் பேட்டரி அமைப்பை பெறவுள்ளன. சிங்கிள்-மோட்டாரில் செயல்படவுள்ள இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் 72 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்படவுள்ளது.

பைடன் எம்-பைட் எலக்ட்ரிக் எஸ்யூவியின் தயாரிப்பு பணிகள் துவங்கின... சீனாவில் இந்த வருடன் அறிமுகம்..

இந்த மோட்டார் அமைப்பு அதிகப்பட்சமாக 270 பிஎச்பி பவரை வெளிப்படுத்த முடியும். இந்த எலக்ட்ரிக் மோட்டார் ஆற்றலை பின்சக்கரத்திற்கு வழங்கவுள்ளது. இந்த பேட்டரி அமைப்பு உடன் பெரிய அளவிலான 95 kWh பேட்டரி தேர்வும் வழங்கப்படவுள்ளது. இந்த பேட்டரி அமைப்பின் மூலமாக 400 பிஎச்பி பவரை பெற முடியும்.

பைடன் எம்-பைட் எலக்ட்ரிக் எஸ்யூவியின் தயாரிப்பு பணிகள் துவங்கின... சீனாவில் இந்த வருடன் அறிமுகம்..

4-வீல்-ட்ரைவ் லேஅவுட் உடன் உள்ள இந்த பெரிய அளவிலான பேட்டரியை பெறும் எம்-பைட் வேரியண்ட் சற்று ப்ரீமியமாக விளங்கும். சிங்கிள் சார்ஜில் 320 கிமீ தூரம் இயங்கக்கூடிய இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் 4-வீல்-ட்ரைவ் வெர்சன் ஒரே சார்ஜில் 386கிமீ வரையில் பயணிக்கவல்லது. காரின் பேட்டரியை சார்ஜ் செய்யவத்றகாக வாடிக்கையாளர்களுக்கு 150 kW DC விரைவான சார்ஜர் வழங்கப்படவுள்ளது.

பைடன் எம்-பைட் எலக்ட்ரிக் எஸ்யூவியின் தயாரிப்பு பணிகள் துவங்கின... சீனாவில் இந்த வருடன் அறிமுகம்..

உட்புறத்தில் இந்த கார் 48-இன்ச் இன்போடெயின்மெண்ட் திரையை பெறவுள்ளது. கிட்டத்தட்ட அமெரிக்க மதிப்பில் 45,000 டாலரை விலையாக பெறவுள்ள எம்-பைட் எலக்ட்ரிக் எஸ்யூவி காருடன் அடுத்த ஆண்டில் இந்நிறுவனத்தின் கே-பைட் செடான் கான்செப்ட்டும் விற்பனைக்கு வரவுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Byton M-Byte Electric SUV Pre-Production Begins; Launch Later This Year
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X