Just In
- 5 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 7 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 7 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
- 9 hrs ago
பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா?
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 17.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Movies
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கார் ஏசியால் இப்படியும் நடக்குமா?.. கலங்க வைக்கும் நொய்டா சம்பவம்... யாருக்குமே இப்படி நடக்க கூடாது!
கார் ஏசியால் சோகமான சம்பவம் ஒன்று நொய்டாவில் அரங்கேறியுள்ளது. என்ன நடந்தது இதுபோன்ற சம்பவத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதை இந்த பதிவில் காணலாம்.

வெப்பத்தை சமாளிக்க உதவும் மிக முக்கியமான அம்சங்களில் ஏசிக்கே முதல் இடம். எனவேதான் முன்பு உயர் ரக வாகனங்களில் மட்டுமே காணப்பட்டு வந்த ஏசி சிஸ்டம், தற்போது அனைத்து விதமான வாகனங்களிலும் பயன்பாட்டுக்கு கிடைத்து வருகின்றது. இது எந்த அளவிற்கு அதிக உதவியை வழங்குகின்றதோ, அதைவிட பல மடங்கு ஆபத்தானது ஆகும். ஆம், இதனை முறையாக கவனிக்கவில்லை என்றால் பேராபத்தை நொடிப்பொழுதில் ஏற்படுத்துவிடும்.

அந்தவகையில், ஏசியால் நொய்டாவில் அரங்கேறிய கசப்பான சம்பவம் பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். ஆம், காரில் ஏசியை ஆன் செய்தவாறு உறங்கிய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர், அப்போது மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகின்றது.

அளவுக்கு அதிகமாக குடிபோதையில் இருந்த காரணத்தால் காரில் ஏசியை ஆன் செய்துவிட்டு அதிலேயே உறங்கியிருக்கின்றார். அப்போதே இந்த சோகமான சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. நொய்டாவில் உள்ள செக்டார் 49, பரோலா பகுதியில் வசிப்பவர் சுந்தர் பண்டிட். இவரே காருக்குள் தூங்கும்போது பரிதாபமாக உயிரிழந்தவர்.

இவர் அளவுக்கு மிஞ்சி குடித்திருந்த காரணத்தால், போதை தலைக்கு ஏறியிருந்ததாகக் கூறப்படுகின்றது. இதனால், காரை தனது அடுக்குமாடி குடியிருப்பின் பார்க்கிங் வளாகத்தில் நிறுத்திய சுந்தர், கசகசவென இருந்ததன் காரணத்தினால் அப்படியே ஏசியையும் ஆன் செய்துவிட்டு இருக்கையில் சாய்ந்துள்ளார். உச்சகட்ட போதை, உறக்கம் ஆகியவற்றால் அயர்ந்து உறங்கியிருக்கின்றார்.

அந்த நேரத்தில் ஏசியில் இருந்து விஷவாயு கசிந்துள்ளது. இதையறியாமல் உறங்கிக் கொண்டிருந்த அவர் அப்படியே மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். சுந்தர், மயங்கிக் கிடப்பதாக எண்ணிய அவரின் சகோதரர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றார். அங்கு சுந்தரைப் பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அதிர்ச்சியான தகவலைக் கூறியிருக்கின்றனர்.

இதனால் சுந்தர் பண்டிட்டின் ஒட்டுமொத்த குடும்பமே சோகத்தில் உறைந்துள்ளது. இதுகுறித்த எந்தவொரு வழக்கையும் அவரது குடும்பத்தார் காவல்நிலையத்தில் வழங்கவில்லை என கூறப்படுகின்றது. ஆனால், தகவல் அறிந்து வந்த போலீஸார் சம்பவம்குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

நொய்டாவில் அரங்கேறிய இந்த சம்பவத்தால், காருக்குல் ஏசி போட்டால் ஆபத்தா?, என்ற கேள்வி பலரின் மத்தியில் எழும்பியுள்ளது. இதனைப் போக்கும் விதமாக இந்த தகவலை தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

காருக்குள் நிலவும் அதிகப்படியான வெப்பத்தைப் போக்கி குளிர்ச்சியான சூழலை உருவாக்குவதில் ஏசியின் பங்கு இன்றியமையாதது. எனவேதான், பலர் காருக்குள் ஏறியவுடனேயே ஏசியை ஆன் செய்துவிடுகின்றனர். ஆனால், அவ்வாறு செய்வதும் மிகவும் ஆபத்தானது ஆகும். சிறிது நேரம் காரின் அனைத்து ஜன்னல் கதவுகளையும் திறந்து வைத்து, ஒரு சில நிமிடங்களுக்கு பின்னர் ஏசியை ஆன் செய்வது சிறந்தது.

குறிப்பாக, நீண்ட நாட்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கும் கார் மற்றும் காரின் ஏசியை ஒரு சர்வீஸ் விட்ட பின்னர் பயன்படுத்துவது மிக சிறந்தது. பயன்படுத்தப்படாமல் இருந்த காரணத்தால் ஏசியில் இருக்கும் வாயுக்கள் வேதிவினை மாற்றமடைய பல வாய்ப்புகள் இருக்கின்றன. எனவேதான் சிறிது நேரம் காரின் அனைத்து கதவுகளையும் திறந்து வைத்து சில நிமிடங்கள் எஞ்ஜினை ரன் செய்த பின்னர் பயணத்தைத் தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.

மேலும், ஒரே இடத்தில் நீண்ட நேரமாக காரை நிறுத்திவிட்டு, எஞ்ஜின் மற்றும் ஏசியை ஆன் செய்து வைப்பதும் மிகுந்த ஆபத்தானதாகும். ஏனெனில், ஏசி வெளிப்புறத்தில் இருக்கும் காற்றை உருஞ்சியே உட்புறத்தை வெண்டிலேட் செய்யும். அம்மாதிரியான நேரத்தில் எஞ்ஜினில் இருந்து வெளியாகும் கார்பன் மோனாக்ஸைடை (CO) வாயுவை ஏசி உறிஞ்சி காருக்குள் வெளிப்படுத்தலாம்.

இந்த வாயு மனித உயிருக்கு மிகவும் ஆபத்தானது. முதலில் மயக்கம், பின்னர் உயிரையே பறித்துவிடும். இந்த மாதிரியான செயலினாலயே நொய்டாவைச் சேர்ந்த சுந்தர் பண்டிட் இறந்திருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. எனவேதான், ஒரே இடத்தில் காரை நிறுத்திவிட்டு எஞ்ஜினை ஆன் செய்து, ஏசியைப் பயன்படுத்த வேண்டாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்த விஷ வாயு முதலில் காருக்குள் நுழையும்போது மூச்சுக் கோளாறு, மங்களான பார்வை, தலை வலி, வாந்தி மயக்கம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும். இதன் பின்னரே மரணத்தைத் தழுவ செய்யும். அம்மாதிரியான நேரத்தில் முழுமையான போதையில், ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததும் பண்டிட்டின் இறப்பிற்கு காரணமாக இருக்கும் என யூகிக்கப்படுகின்றது.

அவர் அந்த நேரத்தில் தூங்காமல் இருந்திருந்தால் நிச்சயம் தப்பித்து இருக்க முடியும். ஏசியில் ஏற்படும் மின் கசிவும் இந்த மாதிரியான சூழ்நிலைகளை ஏற்படுத்தும். ஆகையால், நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருக்கும் ஏசியையோ செலவு பார்க்காமல் சர்வீஸ் செய்துவிடுவது சிறந்தது. மேலும். குறிப்பிட்ட சில மாதங்களுக்கு ஒரு முறை ஏசியை சர்வீஸ் செய்வதன் மூலமாகவும் இதுமாதிரியான கசப்பான அனுபவங்களை தவிர்க்க முடியும்.
குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை.