10 புத்தம் புதிய கார்களை அந்தரத்தில் இருந்து விழ செய்த வால்வோ... எதற்காக தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க..

பத்து புத்தம் புதிய கார்களை அந்தரத்தில் இருந்து விழ செய்த வால்வோ நிறுவனத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

10 புத்தம் புதிய கார்களை அந்தரத்தில் இருந்து விழ செய்த வால்வோ... எதற்காக தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க..!

பிரபல லக்சூரி வாகன உற்பத்தி நிறுவனமான வால்வோ ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், சில எண்ணிக்கையிலான கார்கள் அந்தரத்தில் இருந்து கீழே விட்டு நொருக்குவதைப் போன்று காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. நொறுக்கப்பட்ட அனைத்து கார்களும் புத்தம் புதிய கார்களாகும்.

10 புத்தம் புதிய கார்களை அந்தரத்தில் இருந்து விழ செய்த வால்வோ... எதற்காக தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க..!

வாகனங்களை உறுதியானதாக மாற்றும் நோக்கிலும், பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கிலும் இந்த கிராஷ் பரிசோதனையை வால்வோ மேற்கொண்டிருக்கின்றது. மேலும், வாகனங்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த பரிசோதனையைச் செய்துள்ளது.

10 புத்தம் புதிய கார்களை அந்தரத்தில் இருந்து விழ செய்த வால்வோ... எதற்காக தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க..!

விபத்து என்பது எப்படி வேண்டுமானால் நேரலாம் என்பதை உணர்ந்த வால்வே, பன்முகத்தில் விபத்து நிலைகளை உருவாக்கி அதில் புதிய கார்களை பரிசோதனை மேற்கொண்டிருக்கின்றது. சுமார் 30 மீட்டர் உயரத்தில் இருந்து கார்கள் விடப்பட்டன. வழக்கமான கிராஷ் டெஸ்டைக் காட்டிலும் இந்த பரிசோதனையில் எக்கச்சக்க தகவல்களை பெற முடியும்.

10 புத்தம் புதிய கார்களை அந்தரத்தில் இருந்து விழ செய்த வால்வோ... எதற்காக தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க..!

இதில் காரின் உறுதித் தன்மை மட்டுமின்றி உடனடியாக எப்படி காரை மற்றும் அதில் சிக்கியவர்களை மீட்பது என்கிற சோதனையையும் வால்வோ மேற்கொண்டிருக்கின்றது. இதுகுறித்து, வால்வோ நிறுவனத்தின் கார்கள் போக்குவரத்து விபத்து ஆராய்ச்சி குழுவின் மூத்த புலனாய்வாளர் ஹக்கன் குஸ்டாஃப்சன் கூறியதாவது, "நாங்கள் பல ஆண்டுகளாக ஸ்வீடிஷ் மீட்பு சேவைகளுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருகிறோம். இதற்கான காரணம் மற்றும் ஒரே குறிக்கோள்; அனைவருக்கும் பாதுகாப்பான பயணம் இருக்க வேண்டும் என்பதே ஆகும்" என்றார்.

10 புத்தம் புதிய கார்களை அந்தரத்தில் இருந்து விழ செய்த வால்வோ... எதற்காக தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க..!

தொடர்ந்து பேசிய அவர், "பொதுவாக கிராஷ் டெஸ்டினை ஓர் ஆய்வகத்தினுள் வைத்து மட்டுமே செய்வோம். தற்போது முதல் முறையாக கிரேன் எந்திரத்தைக் கொண்டு பாறைகளுக்கு இடையே பரிசோதனை மேற்கொண்டிருக்கின்றோம். இதன்மூலம் மீட்பு பணி மற்றும் விபத்து பற்றிய தகவலை ரியலாக எங்களால் அறிந்து கொள்ள முடிந்தது" என்றார்.

10 புத்தம் புதிய கார்களை அந்தரத்தில் இருந்து விழ செய்த வால்வோ... எதற்காக தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க..!

ஒட்டுமொத்தமாக பத்து வால்வோ கார்கள் அந்தரத்தில் இருந்து கழட்டிவிடப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான மாடல்கள் ஆகும். இந்த கார்கள் பழைய தலைமுறை கார்களைக் காட்டிலும் பல மடங்கு பாதுகாப்பானது என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. இதுதவிர பல்வேறு திறன்களை வால்வோ நிறுவனம் பெற்றிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #வால்வோ #volvo
English summary
Volvo Drops New Cars To Train First Responders In Occupant Recovery: Here Are All Details. Read In Tamil.
Story first published: Tuesday, November 17, 2020, 16:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X