ரூ.10 கோடியில் புதிய காரை தவிர்த்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்- அப்படி என்னதான் உள்ளது தற்போதைய காரில்?

இந்த ஆண்டு இந்தியா தனது 73வது சுதந்திர தின விழாவை கொண்டாடவுள்ளது. இந்த தினத்தில் தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றத்தில் தேசிய கொடியினை ஏற்றவுள்ளார். இதற்கிடையில் ராம்நாத் கோவிந் அவர்கள் வைத்துள்ள அதிகாரப்பூர்வ காரை பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ரூ.10 கோடியில் புதிய காரை தவிர்த்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்- அப்படி என்னதான் உள்ளது தற்போதைய காரில்?

‘இந்தியாவின் முதல் குடிமகன்' ராம்நாத் கோவிந் கடந்த 2017ல் ஜனாதிபதியாக பதவியேற்று கொண்டார். பிரனாப் முகர்ஜிக்கு பிறகு 14வது ஜனாபதியாக விளங்கும் ராம்நாத் கோவிந் அவர்கள் குடியரசு தலைவராக மட்டுமில்லாமல் இந்திய ஆயுதப்படைகளுக்கு தளபதியாகவும் விளங்குகிறார்.

ரூ.10 கோடியில் புதிய காரை தவிர்த்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்- அப்படி என்னதான் உள்ளது தற்போதைய காரில்?

இவ்வாறான உயர்பதவிகளை வகிப்பதால் எந்நேரமும் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியிலேயே அவர் தனது பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த வகையில் போக்குவரத்திற்கும் ஜனாதிபதிக்கு மிகவும் பாதுகாப்பான மெர்சிடிஸ்-மேபேக் எஸ்600 புல்மேன் கார்ட் (டபிள்யூ221) அதிகாரப்பூர்வ காராக வழங்கப்பட்டுள்ளது.

ரூ.10 கோடியில் புதிய காரை தவிர்த்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்- அப்படி என்னதான் உள்ளது தற்போதைய காரில்?

உலகில் உள்ள பாதுகாப்பான கார்களுள் ஒன்றாக விளங்கும் மெர்சிடிஸ்-மேபேக் எஸ்600 புல்மேன் கார்ட்-ஐ பல வெளிநாட்டு பிரமுகர்கள் தங்களது போக்குவரத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். ஏனெனில் விஆர்10 பாலிஸ்டிக் பாதுகாப்பான் உடன் இந்த கார் தயாரிக்கப்படுகிறது.

ரூ.10 கோடியில் புதிய காரை தவிர்த்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்- அப்படி என்னதான் உள்ளது தற்போதைய காரில்?

அதாவது கையெறி குண்டில் இருந்து இயந்திர துப்பாக்கி வரையில் எதன் குண்டும் காரை துளைக்காதவாறான பாதுகாப்பு பாகங்களை இந்த மெர்சிடிஸ் மேபேக் கார் கொண்டுள்ளது. தாக்குதல் வாயு வழியாக வந்தாலும் அதிலிருந்தும் உட்புற பயணிகளை பாதுகாக்க ஆக்ஸிஜன் சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.10 கோடியில் புதிய காரை தவிர்த்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்- அப்படி என்னதான் உள்ளது தற்போதைய காரில்?

இவை மட்டுமில்லாமல் உடற்பகுதிக்கு உட்புறத்தில் கவச முலாம், துப்பாக்கி குண்டுகளை தாங்கும் பண்புடன் ஜன்னல் கண்ணாடிகள், சக்கரங்கள் மற்றும் அலாய்கள் உள்ளிட்டவையும் இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக உள்ளன. இவற்றுடன் மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 புல்மேன் கார்ட் காரில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புகள் நிறைவு பெறவில்லை.

ரூ.10 கோடியில் புதிய காரை தவிர்த்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்- அப்படி என்னதான் உள்ளது தற்போதைய காரில்?

மாறாக, கூடுதல் பிரேஸ்கள் மற்றும் எஃகு சுருள்களுடன் வலுவூட்டப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பு, பெரிய ப்ரேக்குகள், சக்கரங்கள் முழுவதுமாக விலகியிருந்தாலும் கூட அவற்றை நகர்த்தும் வகையிலான சிறப்பு உள்சக்கர விளிம்புடன் தட்டையான டயர்கள் என லிஸ்ட் நீண்டு கொண்டு போகிறது.

ரூ.10 கோடியில் புதிய காரை தவிர்த்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்- அப்படி என்னதான் உள்ளது தற்போதைய காரில்?

இந்த பாதுகாப்பு அம்சங்களை தாண்டி பார்த்தோமேயானால், 21.3 அடி நீளம் கொண்டதாக உள்ள இந்த கார், சொகுசு கார் என்பதை நினைவுப்படுத்தும் விதத்தில் ஏகப்பட்ட லக்சரி வசதிகளையும் தன்னுள் கொண்டுள்ளது. இவை அனைத்தும் அடங்கிய இந்த மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 புல்மேன் கார்ட் காரின் மொத்த எடை 5 டன்னாக குறிப்பிடப்படுகிறது.

ரூ.10 கோடியில் புதிய காரை தவிர்த்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்- அப்படி என்னதான் உள்ளது தற்போதைய காரில்?

காரில் வழங்கப்பட்டுள்ள மற்ற வசதிகள், பாகங்கள் மற்றும் சிறப்பு தன்மைகள் உள்ளிட்டவை ஜனாபதியின் பாதுகாப்பு கருதி வெளியிடப்படுவதில்லை. அதேபோல் இதே பாதுகாப்பு காரணங்களால் ஜனாபதியின் காருக்கு நம்பர் ப்ளேட் கிடையாது.

ரூ.10 கோடியில் புதிய காரை தவிர்த்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்- அப்படி என்னதான் உள்ளது தற்போதைய காரில்?

மெர்சிடிஸ்-மேபேக் எஸ்600 புல்மேன் காரில் 6.0 லிட்டர் வி12 பைடர்போ என்ஜின் பொருத்தப்படுகிறது. தற்சமயம் ஜனாபதியிடம் இருப்பது இந்த காரின் பழைய தலைமுறை வெர்சனாகும். இதில் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 530 பிஎச்பி பவரையும், 830 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

ரூ.10 கோடியில் புதிய காரை தவிர்த்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்- அப்படி என்னதான் உள்ளது தற்போதைய காரில்?

ராம்நாத் கோவிந் அவர்கள் தனது காரை புதிய தலைமுறை அப்கிரேட் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸினால் நாடு அடைந்துவரும் பொருளாதார வீழ்ச்சிகளினால் காரை அவர் அப்கிரேட் செய்யவில்லை. புதிய தலைமுறை மெர்சிடிஸ்-மேபேக் எஸ்600 புல்மேனின் விலை ரூ.10 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Independence Day: Car Used By The President Of India Ram Nath Kovind Is A Mercedes-Maybach S600 Pullman
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X