சாதாரண காராக பிறந்து விலையுயர்ந்த வாகனமாக உருமாறிய பட்ஜெட் கார்கள்... இதுகூட நல்லா தாங்க இருக்கு..!

பட்ஜெட் கார்கள் சில ஆடம்பர வாகனங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து இந்த பதிவில் காணலாம்.

சாதாரண காராக பிறந்து விலையுயர்ந்த வாகனமாக உருமாறிய பட்ஜெட் கார்கள்... இந்த மாற்றம்கூட நல்லா தாங்க இருக்கு!

ஒவ்வொரு வாகன பிரியருக்கும் சொந்தமாக சொகுசு மற்றும் ஆடம்பர ரக கார்களை வைத்திருக்க வேண்டும் என்பது கனவாக இருக்கின்றது. ஆனால், அவற்றின் விலை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உச்சபட்சமாக இருப்பதால், அவர்களின் கனவு எப்போதுமே கனவாகவே இருந்து விடுகின்றது.

சாதாரண காராக பிறந்து விலையுயர்ந்த வாகனமாக உருமாறிய பட்ஜெட் கார்கள்... இந்த மாற்றம்கூட நல்லா தாங்க இருக்கு!

ஆனால், இந்த கனவை ஒரு சில நிறுவனங்கள் கஸ்டமைசேஷன் மற்றும் மாடிஃபிகேஷன் செயலின் மூலமாக நனவாக்கிக் கொடுக்கின்றன. அந்தவகையில், தயாரிக்கப்படும்போது பட்ஜெட் கார்களாக உருவாகி தற்போது விலையுயர்ந்த கார்களாக மாறியிருக்கும் ஐந்து சூப்பர் கார்களைப் பற்றி கார்டாக் வெளியிட்டிருக்கும் தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

சாதாரண காராக பிறந்து விலையுயர்ந்த வாகனமாக உருமாறிய பட்ஜெட் கார்கள்... இந்த மாற்றம்கூட நல்லா தாங்க இருக்கு!

இதுபோன்ற சுவாரஷ்ய தகவல்கள் பலவற்றை நாம் நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் பார்த்திருக்கின்றோம். ஆனால், தற்போது பார்க்கவிருக்கும் தகவலானது சற்று மாறுபட்டதாகும். ஆம், இந்த கார்களில் சிறப்பு வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றதோ, இல்லையே..., ஆனால், அவற்றின் சின்னம் (லோகோ) மட்டும் மாற்றப்பட்டிருக்கின்றன.

சாதாரண காராக பிறந்து விலையுயர்ந்த வாகனமாக உருமாறிய பட்ஜெட் கார்கள்... இந்த மாற்றம்கூட நல்லா தாங்க இருக்கு!

அதாவது, தயாரிப்பு நிறுவனத்தின் உண்மையான சின்னம் நீக்கப்பட்டு விலையுயர்ந்த கார்களை விற்பனைச் செய்யும் நிறுவனங்களின் லோகோக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பொய்யான ஆடம்பர தோற்றத்தை வழங்கும் விதமாக இந்த புதுமாதிரியான மாற்றத்தை அந்தந்த கார்களின் உரிமையாளர்கள் வழங்கியிருக்கின்றனர்.

சாதாரண காராக பிறந்து விலையுயர்ந்த வாகனமாக உருமாறிய பட்ஜெட் கார்கள்... இந்த மாற்றம்கூட நல்லா தாங்க இருக்கு!

ஆடி சியாஸ்

பார்ப்பதற்கு ஆடி நிறுவனத்தின் செடான் ரக காரைப் போன்று காட்சியளிக்கும் இக்கார் பிறப்பால் மாருதி சியாஸ் காராகும். உண்மையான தோற்றத்தை மழுங்கடிக்கும் விதமாக இந்த காரின் சின்னம் மாற்றப்பட்டிருக்கின்றது. சின்னம் மட்டுமின்றி முன் பக்க கிரில்லும் மாற்றப்பட்டிருக்கின்றது. மேலும், அதன் ஹெட்லைட், பனி மின் விளக்கு மற்றும் பானட் உள்ளிட்டவையும் ஆடி கார்களில் இருப்பதைப் போன்று மாற்றப்பட்டுள்ளது.

சாதாரண காராக பிறந்து விலையுயர்ந்த வாகனமாக உருமாறிய பட்ஜெட் கார்கள்... இந்த மாற்றம்கூட நல்லா தாங்க இருக்கு!

இதற்கான கிட் ஆஃப்டர் மார்கெட்டில் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கிட்டைப் பொருத்தியாதலே வழக்கமான மாருதி சியாஸ் கார் ஆடி நிறுவனத்தின் விலையுயர்ந்த காரைப் போன்று மாறியிருக்கின்றது. இந்த காரை சட்டென பார்க்கும்போது ஆடி நிறுவனத்தின் காரொன்று நிற்பதைப் போன்றே தோன்றும். அந்தளவிற்கு சியாஸ் காரின் உருவமைப்பு புதிய தோற்றத்திற்கு ஒத்து போகியுள்ளது.

சாதாரண காராக பிறந்து விலையுயர்ந்த வாகனமாக உருமாறிய பட்ஜெட் கார்கள்... இந்த மாற்றம்கூட நல்லா தாங்க இருக்கு!

லெக்சஸ் பார்ச்சூனர்

லெக்சஸ் என்பது டொயோட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பிரீமியம் கார்களைக் களமிறக்கும் பிராண்டாகும். இந்த பிராண்டில் விற்பனைக்கு கிடைக்கும் வாகனங்கள் அனைத்தும் விலையுயர்ந்த மற்றும் அதி-திறனை வெளிப்படுத்துபவையாக இருக்கின்றன. எனவேதான் இக்காரை சொற்ப அளவில் மட்டுமே நம்மால் காண முடிகின்றது.

சாதாரண காராக பிறந்து விலையுயர்ந்த வாகனமாக உருமாறிய பட்ஜெட் கார்கள்... இந்த மாற்றம்கூட நல்லா தாங்க இருக்கு!

இந்த நிலையிலேயே டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை அதன் உரிமையாளர், லெக்சஸ் காராக மாற்றியிருக்கின்றார். இந்த புதிய தோற்றத்திற்காக இக்காரின் உரிமையாளரும் முன் பக்க கிரில் மற்றும் டயர் போன்றவற்றை மாற்றியிருக்கின்றார். ஆனால், ஆச்சரியமாக இவர் காரின் சின்னத்தை மாற்றவில்லை.

சாதாரண காராக பிறந்து விலையுயர்ந்த வாகனமாக உருமாறிய பட்ஜெட் கார்கள்... இந்த மாற்றம்கூட நல்லா தாங்க இருக்கு!

இருப்பினும், கிரில் மற்றும் பேனட் உள்ளிட்டவை மாற்றப்பட்டிருப்பதால் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் பார்பதற்கு லெக்சஸ் பிராண்டின் எஸ்யூவி காரைப் போன்று காட்சியளிக்கின்றது. இந்த மாற்றத்திற்காக பக்கவாட்டு பகுதியில்கூட சில அம்சங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. இது, லெக்சஸ் பிராண்டின் எல்எக்ஸ் மாடலைப் போன்று காட்சிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதற்கேற்பவே எல்இடி டிஆர்எல்கள் மற்றும் பம்பர்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

சாதாரண காராக பிறந்து விலையுயர்ந்த வாகனமாக உருமாறிய பட்ஜெட் கார்கள்... இந்த மாற்றம்கூட நல்லா தாங்க இருக்கு!

பென்ஸ் ஸ்கார்ப்பியோ

மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கேள்வி பட்டிருக்கோம், அது என்னங்க பென்ஸ் ஸ்கார்பியோ?, என்று தானே கேட்குறீங்க. பென்ஸ் நிறுவனத்தின் லோகோ மற்றும் பம்பரைப் பயன்படுத்தியதன் காரணத்தினாலேயே மஹிந்திரா ஸ்கார்பியோ தற்போது பென்ஸ் ஸ்கார்பியோ மாறியிருக்கின்றது.

சாதாரண காராக பிறந்து விலையுயர்ந்த வாகனமாக உருமாறிய பட்ஜெட் கார்கள்... இந்த மாற்றம்கூட நல்லா தாங்க இருக்கு!

இந்திய சந்தையில் மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக ஸ்கார்பியோ இருக்கின்றது. இக்காருக்கு பென்ஸ் காரின் தோற்றம் வழங்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக இருந்தாலும் ரசிக்கும் வகையிலேயே இந்த மாற்றம் இருக்கின்றது. இந்த மாற்றத்திற்காக முன்பக்க கிரில், பம்பர், ஹெட்லைட் மற்றும் எல்இடி டிஆர்எல்கள் ஆகியவை மட்டுமே மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.

சாதாரண காராக பிறந்து விலையுயர்ந்த வாகனமாக உருமாறிய பட்ஜெட் கார்கள்... இந்த மாற்றம்கூட நல்லா தாங்க இருக்கு!

லெக்சஸ் கேம்ரி

டொயோட்டா நிறுவனத்தின் கேம்ரி காரே தற்போது லெக்சஸ் பிராண்டின் கேம்ரி காராக மாறியிருக்கின்றது. இந்த மாற்றத்திற்காக இக்காரும் முன்பக்க கிரில், பம்பர், ஹெட்லைட் மற்றும் டிஆர்எல்கள் ஆகியவற்றை புதிதாக தன்னுள் ஏந்தியிருக்கின்றது. இதுமட்டுமின்றி கூடுதலாக முகப்பு பகுதியில் சிறு சிறு மின் விளக்குகள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், இதன் நிறமும் சிவப்பு வண்ணத்திற்கு மாற்றப்பட்டிருக்கின்றது.

சாதாரண காராக பிறந்து விலையுயர்ந்த வாகனமாக உருமாறிய பட்ஜெட் கார்கள்... இந்த மாற்றம்கூட நல்லா தாங்க இருக்கு!

பென்ஸ் டிசையர்

மாருதி டிசையர் காராக பிறந்த இந்த கார் தற்போது சின்னம் மாற்றம் மற்றும் பம்பர் மாற்றம் ஆகியவற்றால் பென்ஸ் டிசையராக மாறியிருக்கின்றது. ஆனால், இந்த சின்னம் உண்மையான பென்ஸ் சின்னத்தைப் போன்று காட்சியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இக்கார் சாலையில் செல்லும்போது பார்வையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது.

சாதாரண காராக பிறந்து விலையுயர்ந்த வாகனமாக உருமாறிய பட்ஜெட் கார்கள்... இந்த மாற்றம்கூட நல்லா தாங்க இருக்கு!

மாருதி டிசையர் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்று ஆகும். முக்கியமாக பட்ஜெட் வாகன விரும்பிகளின் தேர்வில் இடம்பிடிக்கும் முக்கியமான கார்களில் இதுவும் ஒன்றாகும். தற்போது நாம் பார்த்த அனைத்து மாடிஃபிகேஷனும் ரசிக்கின்ற வகையில் இருந்தாலும், அவையனைத்தும் சட்டத்திற்கு புறம்பானவை ஆகும். ஆம், ஓர் காரின் உண்மையான தோற்றத்தை மாற்றுவது இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றமாகும். இதற்கு உச்சபட்ச அபராதம், பதிவு ரத்து மற்றும் வாகன பறிமுதல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Most Read Articles

English summary
Cars That Were Born As Budget Cars & Transformed Into Luxury Vehicles. Read in Tamil.
Story first published: Friday, September 25, 2020, 7:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X