மின்வாகனத்திற்கான ரோபோ பவர் பேங்க்.. இது நீங்கள் இருக்கும் இடத்தை தேடி வந்து சார்ஜ் செய்யும்..

இருக்கும் இடத்தைத் தேடி வந்து சார்ஜ் செய்யும் ரோபோ பவர் பேங்க் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மின்வாகனத்திற்கான ரோபோ பவர் பேங்க்.. இது நீங்கள் இருக்கும் இடத்தை தேடி வந்து சார்ஜ் செய்யும்..

இப்போதைய சூழ்நிலையில் கொரோனா வைரசின் தாக்கமே தலையாய பிரச்னையாக மாறியிருக்கின்று. ஆனால், இதற்கு முன்பாக உலக நாடுகள் அனைத்திற்கும் காற்று மாசுறுதல் மற்றும் உலக வெப்பமயமாதல் ஆகியவையை அதிக தலை வலியை ஏற்படுத்தி வந்தன. இதனால் ஏற்பட்ட பின் விளைவுகள் ஏராளம்.

மின்வாகனத்திற்கான ரோபோ பவர் பேங்க்.. இது நீங்கள் இருக்கும் இடத்தை தேடி வந்து சார்ஜ் செய்யும்..

அவ்வாறு, புவி வெப்பமயமாதலின் தீவிரம் அதிகரித்துக் கொண்டிருந்த வேலையிலேயே, அறிவிக்கப்படாத போரை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தொடுத்து வருகின்றது. இந்த வைரசின் அச்சம் காரணமாக நிலவும் உலகம் தழுவிய முடக்க நிலை, புவி வெப்ப மயமாதல் மற்றும் காற்று மாசுறுதலுக்கு தற்காலிக முற்று புள்ளி வைத்துள்ளது. ஆனால், இது நிரந்தரமில்லை.

மின்வாகனத்திற்கான ரோபோ பவர் பேங்க்.. இது நீங்கள் இருக்கும் இடத்தை தேடி வந்து சார்ஜ் செய்யும்..

கொரோனா பிரச்னை ஓய்ந்த பின்னர் பழையபடி அனைத்து தொழிற்சாலைகளும் இயங்க ஆரம்பித்துவிடும். முக்கியமாக, காற்று மாசுறுதலில் அதிக பங்கு வகிக்கும் எரிபொருள் வாகனங்களின் இயக்கமும் ஆரம்பித்துவிடும்.

இதனை குறைப்பதற்காக ஏற்கனவே பலகட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை, கொரோனா வைரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் போரைக் காட்டிலும் மிக தீவிரமானது.

மின்வாகனத்திற்கான ரோபோ பவர் பேங்க்.. இது நீங்கள் இருக்கும் இடத்தை தேடி வந்து சார்ஜ் செய்யும்..

அந்தவகையில், எரிபொருள் வாகனங்களை முற்றிலுமாக ஒழித்துவிட்டு, மாற்று வாகனமாக பயன்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டதுதான் மின்சார வாகனங்கள். இவை, விலை அதிகமாக இருக்கின்ற காரணத்தினாலும், போதிய சார்ஜிங் நிலையங்கள் மற்றும் கட்டமைப்பை கொண்டிராத காரணத்தினாலும் இன்னும் தொடங்கப்பட்ட இடத்திலேயே இருக்கின்றன.

மின்வாகனத்திற்கான ரோபோ பவர் பேங்க்.. இது நீங்கள் இருக்கும் இடத்தை தேடி வந்து சார்ஜ் செய்யும்..

அதாவது, எரிபொருள் வாகனங்களின் விற்பனையைக் காட்டிலும் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே அவை விற்பனையாகி வருகின்றன.

அதேசமயம், முந்தையக் கால கட்டத்தைக் காட்டிலும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை பல மடங்கு உயர்வைச் சந்திக்க ஆரம்பித்துள்ளன. இதற்கு கடந்த மாதங்களின் விற்பனையான மின்சார வாகனங்களின் எண்ணிக்கையே சான்று.

மின்வாகனத்திற்கான ரோபோ பவர் பேங்க்.. இது நீங்கள் இருக்கும் இடத்தை தேடி வந்து சார்ஜ் செய்யும்..

இந்த நிலையில், மின்சார வாகனங்களின் மீதுள்ள ஆவலையும், அவற்றின் பயன்பாட்டையும் அதிகரிக்கச் செய்கின்ற வகையில் ஓர் புதிய தொழில்நுட்பம் விரைவில் பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றது.

மின்வாகனத்திற்கான ரோபோ பவர் பேங்க்.. இது நீங்கள் இருக்கும் இடத்தை தேடி வந்து சார்ஜ் செய்யும்..

அது, உங்கள் மின் வாகனம் எந்த இடத்தில் இருந்தும், நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும் காருக்கு தேவையான சார்ஜிங்கை வழங்க உதவும். ஆம், நீங்கள் நினைத்தது சரிதான். அது கார்களுக்கான பவர்பேங்க். ஆனால், இது ரோபோட் திறன் கொண்டது ஆகும்.

மின்வாகனத்திற்கான ரோபோ பவர் பேங்க்.. இது நீங்கள் இருக்கும் இடத்தை தேடி வந்து சார்ஜ் செய்யும்..

சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஐவேஸ் எனப்படும் வாகன உற்பத்தி நிறுவனம்தான், இந்த கார்களுக்கான பவர்பேங்க் தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது. இதற்கு கார்ல் என்ற பெயரை வைத்துள்ளது.

ஆன்லைன் மூலமாக ஷாப்பிங் செய்வதைப் போன்று, சார்ஜிங் தேவையை நீங்கள் புக் செய்தால் ஜிபிஎஸ் உதவியுடன் நீங்கள் இருக்கும் இடத்தைத் தேடி வந்து இந்த சார்ஜிங் நிலையும், காருக்கு தேவையான சார்ஜை வழங்கும்.

மின்வாகனத்திற்கான ரோபோ பவர் பேங்க்.. இது நீங்கள் இருக்கும் இடத்தை தேடி வந்து சார்ஜ் செய்யும்..

30kWh முதல் 60kWh திறன் வரை இந்த ரோபோட் சார்ஜிங் நிலைத்தின் மூலம் பயனர்களால் ஏற்றிக் கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, இது ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தைக் கொண்டிருப்பதன் காரணத்தினால் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே மின்சார காருக்கு தேவையான 80 சதவீத சார்ஜை அது ஏற்றிவிடும்.

இந்த ரோபோ சார்ஜிங் நிலையத்தை இயக்கவோ அல்லது மீண்டும் உரிய இடத்திற்கு திருப்பி அனுப்பவோ மனித ஈடுபட முழுக்க முழுக்க தேவையில்லை என்கின்றது ஐவேஸ்.

தானாக தேடி வந்து சார்ஜ் செய்யும் ரோபோ சார்ஜ் தொழில்நுட்பத்தை ஆரம்ப கட்டமாக சீனா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட ஏழு நாடுகளில் மட்டுமே ஆரம்ப கட்டமாக தொடங்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் பின்னரே மற்ற நாடுகளுக்கு இந்த சேவை வழங்கப்பட இருக்கின்றது. அந்தவகையில், வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவிலும் இம்மாதிரியான சேவைகள் விரைவில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
China Firm Aiways Created Charging Robot CARL. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X