சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி இந்தியாவில் சோதனை!! மாருதி எர்டிகா முன் விற்பனையில் தாக்குப்பிடிக்குமா?

சிட்ரோன் பிராண்ட் இந்தியாவில் அதன் எம்பிவி காரான பெர்லிங்கோவை சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி இந்தியாவில் சோதனை!! மாருதி எர்டிகா முன் விற்பனையில் தாக்குப்பிடிக்குமா?

இந்தியாவில் காலடித்தடத்தை பதிக்க சிட்ரோன் பிராண்ட் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி அந்த நிறுவனத்தின் சி5 ஏர்க்ராஸ் மற்றும் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களை சோதனை ஓட்டங்களை பற்றி இதற்கு முன்னர் பார்த்துள்ளோம்.

சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி இந்தியாவில் சோதனை!! மாருதி எர்டிகா முன் விற்பனையில் தாக்குப்பிடிக்குமா?

சிட்ரோனின் பெர்லிக்கோ எம்பிவி காரின் ஸ்பை படங்களையும் கடந்த மாதங்களில் நமது செய்திதளத்தில் பதிவிட்டுள்ளோம். இந்த வகையில் தற்போது மீண்டும் இந்த எம்பிவி கார் இந்தியாவில் குருகுராம் நெஞ்சாலையில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது.

சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி இந்தியாவில் சோதனை!! மாருதி எர்டிகா முன் விற்பனையில் தாக்குப்பிடிக்குமா?

வழக்கமாக சந்தைக்கு வரும் புதிய கார் மாடல்கள் சோதனை ஓட்டங்களில் மறைக்கப்பட்டே ஈடுப்படுத்தப்படும். ஆனால் பெர்லிங்கோ கார் இந்த சோதனையில் எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்படவில்லை என்பது கார்வாலே செய்திதளத்தின் மூலமாக கிடைத்துள்ள ஸ்பை படங்களில் பார்க்க முடிகிறது.

சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி இந்தியாவில் சோதனை!! மாருதி எர்டிகா முன் விற்பனையில் தாக்குப்பிடிக்குமா?

ஆனால் காரின் முன் மற்றும் பின்பக்கத்தில் வழங்கப்படும் தயாரிப்பு பிராண்டின் லோகோக்கள் மறைக்கப்பட்டுள்ளன. சிட்ரோன் நிறுவனம் தற்சமயம் மூன்றாம் தலைமுறை பெர்லிங்கோ காரை சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்து வருகிறது.

சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி இந்தியாவில் சோதனை!! மாருதி எர்டிகா முன் விற்பனையில் தாக்குப்பிடிக்குமா?

பிராண்டின் புதிய இஎம்பி2 ப்ளாட்ஃபாரத்தின் கீழ் தயாரிக்கப்படுகின்ற பெர்லிங்கோவின் முன்பக்கம் பிளவுப்பட்ட ஹெட்லைட் யூனிட்கள், சிறிய பொனெட் உடன் சிட்ரோனின் சி5 ஏர்க்ராஸ் காரை பெரிதும் ஒத்து காணப்படுகிறது.

சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி இந்தியாவில் சோதனை!! மாருதி எர்டிகா முன் விற்பனையில் தாக்குப்பிடிக்குமா?

ஏனெனில் இரு மாடல்களிலும் ஓட்டுனரால் சாலையை முழுவதும் பார்க்கும் வகையில் முன்பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் காரை இரண்டாக பிரிக்கும் லைனை சற்று மேலே பெர்லிங்கோ பெற்றுள்ளது.

சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி இந்தியாவில் சோதனை!! மாருதி எர்டிகா முன் விற்பனையில் தாக்குப்பிடிக்குமா?

இரண்டாவது இருக்கை வரிசைக்கான கதவுகள் இழு/தள்ளு விதத்தில் உள்ளன. கதவுகளின் பாதுகாப்பிற்கு அவற்றின் கீழ்பகுதியில் பிளாஸ்டிக் பாதுகாப்பான் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் இந்த சோதனை எம்பிவி கார் செங்குத்தாக பொருத்தப்பட்ட டெயில்லேம்ப்களை கொண்டுள்ளது.

சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி இந்தியாவில் சோதனை!! மாருதி எர்டிகா முன் விற்பனையில் தாக்குப்பிடிக்குமா?

இதுமட்டுமின்றி பெரிய விண்ட்ஸ்க்ரீன் மற்றும் நம்பர் ப்ளேட் உடன் பின்கதவு உள்ளிட்டவற்றையும் காரின் பின்பக்கத்தில் பார்க்க முடிகிறது. காரின் உட்புறத்தை இந்த ஸ்பை படங்களில் பார்க்க முடியவில்லை. சர்வதேச சந்தைகளில் பெர்லிங்கோ, எம் மற்றும் எக்ஸ்எல் என்ற பெயர்களில் 5 மற்றும் 7 இருக்கை வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி இந்தியாவில் சோதனை!! மாருதி எர்டிகா முன் விற்பனையில் தாக்குப்பிடிக்குமா?

அத்தகைய சந்தைகளில் இந்த எம்பிவி கார் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய 8-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், நாவிகேஷன், வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்டவற்றுடன் அதிகளவில் பொருட்களை வைப்பதற்கு தேவையான இட வசதியுடன் கேபினை பெறுகிறது.

சிட்ரோன் பெர்லிங்கோ எம்பிவி இந்தியாவில் சோதனை!! மாருதி எர்டிகா முன் விற்பனையில் தாக்குப்பிடிக்குமா?

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ற இரு என்ஜின்கள் தேர்வுகளாக விற்பனையில் உள்ள சந்தைகளில் வழங்கப்படுகின்றன. இந்தியாவிற்காக ‘சி-க்யூப்' திட்டத்தை சிட்ரோன் பிராண்ட் வைத்துள்ளது. இதில் பெர்லிங்கோ இல்லை என்றாலும், நம் மக்களுக்கு சிட்ரோன் எதாவது சர்பிரைஸை தரலாம்.

Most Read Articles

மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen Berlingo MPV spied testing on Indian roads
Story first published: Friday, December 18, 2020, 23:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X