எலக்ட்ரிக் வெர்சனில் உருவாகிறது 2021 சிட்ரோன் சி4 க்ராஸ்ஓவர் கார்...

பிரெஞ்சு நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோன் புதிய தோற்றத்தில் சி4 மாடலின் எலக்ட்ரிக் வெர்சனை வெளியிட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் காரை பற்றிய முழுமையான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

எலக்ட்ரிக் வெர்சனில் உருவாகிறது 2021 சிட்ரோன் சி4 க்ராஸ்ஓவர் கார்...

சிட்ரோன் நிறுவனத்திற்கு சி3 மற்றும் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி மாடல்கள் மிக பெரிய அளவிலான வெற்றியினை பெற்று கொடுத்துள்ளன. 2017ஆம் ஆண்டின் நெருக்கத்தில் அறிமுகமான இந்த இரு எஸ்யூவி கார்களும் இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையை சந்தையில் பதிவு செய்துள்ளன.

எலக்ட்ரிக் வெர்சனில் உருவாகிறது 2021 சிட்ரோன் சி4 க்ராஸ்ஓவர் கார்...

இதில் சி5 ஏர்க்ராஸ் மாடல் மூலமாக தான் சிட்ரோன் ப்ராண்ட் அடுத்த ஆண்டில் இந்திய சந்தையில் நுழைய திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் சர்வதேச சந்தையில் ஹேட்ச்பேக் மாடல்களுக்கு கிடைத்து வரும் வரவேற்பினால் ஹேட்ச்பேக் பிரிவின் பக்கம் தற்போது சிட்ரோனின் கவனம் திரும்பியுள்ளது.

எலக்ட்ரிக் வெர்சனில் உருவாகிறது 2021 சிட்ரோன் சி4 க்ராஸ்ஓவர் கார்...

இந்த நிலையில் தான் சி4 மாடலின் எலக்ட்ரிக் வெர்சன் முற்றிலும் புதுமையான தோற்றத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் சி4 மாடலுக்கு புதிய எலக்ட்ரிக் வெர்சனால் கூடுதலான வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என சிட்ரோன் நிறுவனம் கணித்துள்ளது.

எலக்ட்ரிக் வெர்சனில் உருவாகிறது 2021 சிட்ரோன் சி4 க்ராஸ்ஓவர் கார்...

சி5 ஏர்க்ராஸ் ஹைப்ரீட், அமி, இ-ஜம்பி மற்றும் இ-ஸ்பேஸ்டூரர் மாடல்களை தொடர்ந்து இந்நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பசுமை போக்குவரத்திற்கு இணக்கமான ஐந்தாவது மாடலாக இ-சி4 இடம்பிடித்துள்ளது. இ-சி4 மாடல், அட்வான்ஸ்டு கம்போர்ட் ப்ரோகிராமின் தோற்றமாக இருக்கும் என சிட்ரோன் நிறுவனம் கூறியுள்ளது.

எலக்ட்ரிக் வெர்சனில் உருவாகிறது 2021 சிட்ரோன் சி4 க்ராஸ்ஓவர் கார்...

எலக்ட்ரிக் சி4 கார் குறித்த வேறெந்த தகவலும் இப்போதைக்கு வெளியாகவில்லை. இந்த தகவல்களை இந்த மாத இறுதியில் எதிர்பார்க்கலாம். சி4 பெயர்பலகையின் வரலாறை சற்று திரும்பி பார்த்தால், முதன்முதலாக 1928ல் அறிமுகப்படுத்தப்பட்ட சி4 மாடல் தற்சமயம் க்ராஸ்ஓவர் உடற் அமைப்பில் கூபே கார்களில் உள்ளதை போன்ற ரூஃப்லைன்னை கொண்டுள்ளது.

எலக்ட்ரிக் வெர்சனில் உருவாகிறது 2021 சிட்ரோன் சி4 க்ராஸ்ஓவர் கார்...

எலக்ட்ரிக் வெர்சனில் வெளிவரும் 2021 சி4 மாடல் எலக்ட்ரிக் கார்களுக்கே உண்டான முன்புற பகுதி, காரை சுற்றிலும் கீழ் பகுதியில் க்ரே க்ளாடிங், பிளாஸ்டிக்கில் நேர்த்தியான பக்கவாட்டு ஸ்கிர்ட்ஸ், ஷீட் மெட்டலில் ஸ்போர்ட்டியான க்ரீஸஸ், அதிகளவில் கருப்பு நிற ட்ரிம் பாகங்கள், கம்பீரமான முன் மற்றும் பின்புற பம்பர்கள், கருப்பு பில்லர்கள், கூர்மையான ஹெட்லேம்ப்கள், புதிய டிசைனில் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும்.

எலக்ட்ரிக் வெர்சனில் உருவாகிறது 2021 சிட்ரோன் சி4 க்ராஸ்ஓவர் கார்...

இந்த க்ராஸ்ஓவர் மாடலானது ஹூண்டாய் கோனா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் பியூஜியோட் 2008 உள்ளிட்ட கார்களுக்கு விற்பனையில் எதிராக நிற்கும். இந்தியாவிற்கான சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி மாடலை பொறுத்தவரையில், இந்த கார் சி21 காம்பெக்ட் எஸ்யூவியை போன்று இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு அதிக யூனிட்களில் சந்தைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

Most Read Articles

மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
New-Gen 2021 Citroen C4 Revealed With Electric Powertrain (Citroen E-C4)
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X