Just In
- 53 min ago
ஒருபக்கம் விலை அதிகரிப்பு, மறுபக்கம் சலுகை!! மோட்டார்சைக்கிள் விற்பனையில் கவாஸாகியின் அடுத்தடுத்த அறிவிப்புகள்
- 2 hrs ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 3 hrs ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 14 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
Don't Miss!
- Sports
எதிரணி வீரர்களை சீண்டறது கீழ்த்தரமானது.. இதுமூலமா நம்மோட பலவீனம்தான் வெளிப்படும்!
- Movies
திருமணம் செய்வதாக ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை.. பைலட் மீது டிவி நடிகை பரபரப்பு புகார்!
- Finance
நரேந்திர மோடியின் செம அறிவிப்பு.. புதிய தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி..!
- News
காட்டுப்பள்ளி துறைமுக திட்டத்திற்கான கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: சிபிஎம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அப்படிபோடு... ரூ.8 லட்சத்தில் மினி எலெக்ட்ரிக் எஸ்யூவி... சிட்ரோனின் 'சீக்ரெட்' திட்டம் அம்பலம்!
இந்தியாவில், மிக குறைவான பட்ஜெட்டில் புதிய மினி எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை களமிறக்க சிட்ரோன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ குழுமம் இந்தியாவில் கார் வர்த்தகத்தை மீண்டும் துவங்குவதற்கு ஆயத்தமாகி வருகிறது. இந்திய சந்தையில் இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக ஆடுவதற்காக பல புதிய திட்டங்களை வகுத்து வருகிறது. இந்த முறை தனது திட்டம் இந்தியாவில் தோல்வியை தழுவிவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக உள்ளது.

முதல் மாடலாக சிட்ரோன் நிறுவனத்தின் சி5 ஏர்க்லாஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த எஸ்யூவி ஏற்கனவே இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது. ஆனால், கொரோனாவால் இதன் விற்பனைக்கு கொண்டு வரப்படும் திட்டம் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கான வரவேற்பு அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் மின்சார கார் மாடல் இல்லாமல் காலத்தை ஓட்ட முடியாது என்ற நிலை உள்ளது. இதனை மனதில் வைத்து மிகவும் குறைவான பட்ஜெட்டில் மினி எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை கொண்டு வருவதற்கு சிட்ரோன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து எக்கனாமிக் டைம்ஸ் தளம் வெளியிட்டுள்ள செய்தியில், சிட்ரோன் நிறுவனம் சிசி21 கார் அடிப்படையில் புதிய மினி எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை இந்தியாவுக்காக உருவாக்கி வருகிறது. இந்த புதிய எஸ்யூவிக்கு ரூ.8 லட்சம் விலை நிர்ணயிக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி மஹிந்திரா இகேயூவி100, மாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக், ஹூண்டாய் அறிமுகப்படுத்த உள்ள மினி எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியான ரகத்திலும் விலையிலும் வரும் என்று எதிர்பார்கக்ப்படுகிறது.

இந்த புதிய மினி எலெக்ட்ரிக் எஸ்யூவி தவிர்த்து, சிட்ரோன் நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு உகந்த விசேஷ எரிபொருள் தேர்வு கொண்ட கார் மாடல்களையும் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது. குறிப்பிட்ட சதவீதம் எத்தனால் சேர்க்கப்பட்ட பெட்ரோல் எரிபொருளில் இயங்கும் கார் மாடல்களை இந்தியா கொண்டு வருவதற்கான திட்டத்தையும் சிட்ரோன் வைத்துள்ளது.

இந்த விசேஷ கலவை கொண்ட பெட்ரோல் குறைவான மாசு உமிழ்வை வழங்கும். அதேநேரத்தில், கார் எஞ்சினில் தொழில்நுட்ப ரீதியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தேவைப்படும். இது மினி எஸ்யூவி மாடலாக இந்தியா கொண்டு வருவதற்கும் சிட்ரோன் திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு இந்த மினி எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, 2022ம் ஆண்டில் சிட்ரோனினி மினி எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.