Just In
- 2 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 9 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 10 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- 11 hrs ago
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
Don't Miss!
- News
சட்டசபை தேர்தலில் திமுக அணிக்கு 1.7% தான் கூடுதல் வாக்குகளாம்- எச்சரிக்கும் ஏபிபி- சி வோட்டர் சர்வே
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்!
கடந்த ஜூன் மாதத்தில் அதிகளவில் விற்பனையான டாப் 10 எஸ்யூவி கார்களின் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது. அதனை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

கடந்த மாதத்தில் அதிகம் விற்பனையான எஸ்யூவி கார் என்று பார்த்தால் அது விட்டாரா பிரெஸ்ஸா தான். மொத்தம் 4,542 யூனிட்கள் விற்பனையாகியுள்ள இந்த கார் கடந்த ஆண்டு இதே மாதம் 8,871 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இந்த வகையில் மாருதி சுசுகியின் இந்த கார் 49 சதவீத விற்பனை வீழ்ச்சியை சந்திந்துள்ளது.

Rank | Model | June 2020 | June 2019 | Growth (%) |
1 | Maruti Brezza | 4,542 | 8,871 | -49 |
2 | Hyundai Venue | 4,129 | 8,763 | - |
3 | Tata Nexon | 3,040 | 4,170 | -27 |
4 | Mahindra XUV300 | 1,812 | 4,769 | -62 |
5 | Ford EcoSport | 1,212 | 3,254 | -63 |
6 | Honda WR-V | 658 | 1,268 | -48 |
இதற்கு அடுத்த நிலையில் ஹூண்டாயின் வென்யூ மாடல் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஒட்டுமொத்த உள்நாட்டு விற்பனையில் ஒரு லட்சம் என்ற மைல்கல்லை கடந்திருந்த இந்த எஸ்யூவி கார் கடந்த 2019ஆம் ஆண்டில் ஐந்து இருக்கை வெர்சன் காராக அறிமுகமாகி இருந்தது.

விட்டாரா பிரெஸ்ஸாவை போல் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான இந்த கார் விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸாவையும் சில முறை தோற்கடித்துள்ளது. இதன் கடந்த மாதம் விற்பனையான யூனிட்களின் எண்ணிக்கை 4,129 ஆகும்.

மூன்றாம் இடத்தில் 3,040 மாதிரி கார்கள் விற்பனையாகி நெக்ஸான் மாடல் உள்ளது. டாடா நிறுவனத்தின் க்ளோபல் என்சிஏபி அமைப்பில் 5 நட்சத்திரங்களை பாதுகாப்பில் பெற்றுள்ள இந்த கார் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 4,170 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.

இதன் மூலம் பார்க்கும்போது இந்த கார் வெறும் 27 சதவீத விற்பனை வீழ்ச்சியை மட்டுமே தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் அடைந்துள்ளது. மஹிந்திராவின் எக்ஸ்யூவி300 மாடல் இந்த லிஸ்ட்டில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருந்த இந்த கார் சப்-4 மீட்டர் பிரிவில் மஹிந்திராவிற்கு குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்து கொடுத்துள்ளது.

தென்கொரியாவில் விற்பனையாகி வரும் சாங்சோங் டிவோலி காரின் எக்ஸ்100 ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த கார் கடந்த மாதத்தில் 1,812 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. இது 2019 ஜூன் மாதத்தை காட்டில் சுமார் 62 சதவீதம் குறைவு.

இதேபோன்று சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகமான ஈக்கோ ஸ்போர்ட் மாடல் இதற்கு அடுத்த இடத்தில் உள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் விற்பனை மாடலான இது கடந்த 2020 ஜூன் மாதத்தில் 2019 ஜூன் மாதத்தை காட்டிலும் 63 சதவீதம் குறைவாக 3,254 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.

இந்த வரிசையில் ஆறாவது காராக உள்ள டபிள்யூஆர்-வி எஸ்யூவியின் புதிய தலைமுறை காரை மிக சமீபத்தில் தான் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த கார் 658 யூனிட்கள் விற்பனையுடன் தற்போது வெளியாகியுள்ள லிஸ்ட்டில் கடைசி இடத்தில் உள்ளது.

காம்பெக்ட் எஸ்யூவி ரக கார்கள் கடந்த ஆண்டுகளில் இந்திய சந்தையில் மிக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் பெரும்பான்மையாக அனைத்து நிறுவனங்களும் எஸ்யூவி ரக கார்களையே புதியதாக களமிறக்க முயற்சித்து வருகின்றன. இந்த லிஸ்ட் எஸ்யூவி கார்களுக்கு எந்த அளவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது என்பதை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது.