இந்திய சந்தையில் நுழைகிறது உலகளவில் பிரபலமான டயர் தயாரிப்பு நிறுவனம்... கலக்கத்தில் மற்ற நிறுவனங்கள்

ப்ரீமியம் தரத்திலான டயர்களை தயாரிக்கும் தொழிற்நுட்ப நிறுவனமான காண்டினெண்டல், அதன் ஆறாம் தலைமுறை டயர்களை பயணிகள் வாகனங்களுக்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய சந்தையில் நுழைகிறது உலகளவில் பிரபலமான டயர் தயாரிப்பு நிறுவனம்... கலக்கத்தில் மற்ற நிறுவனங்கள்

அல்ட்ராகான்டெக்ட் (யுசி6) மற்றும் கம்ஃபார்ட்கான்டெக்ட் (சிசி6) என்ற காண்டினெண்டலின் புதிய டயர்கள் இந்திய சாலைகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் இவை பாதுகாப்பை அதிகமாகவும், சத்தத்தை குறைவாகவுமே வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்திய சந்தையில் நுழைகிறது உலகளவில் பிரபலமான டயர் தயாரிப்பு நிறுவனம்... கலக்கத்தில் மற்ற நிறுவனங்கள்

இவை மட்டுமின்றி வாகனத்தின் மைலேஜ் மற்றும் எரிபொருள் திறனை மேம்படுத்தும் விதத்திலும் தயாரிக்கப்பட்டு வருகின்ற காண்டினெண்டலின் இந்த இரு டயர்கள், சொர சொரப்பான பக்கவாட்டு சுவரில் உரசிப்படி சென்றாலும் கூட பாதிப்பு பெரிய அளவில் இருக்காது.

அல்ட்ராகான்டெக்ட் 6 மற்றும் கம்ஃபார்ட்கான்டெக்ட் 6 என்ற இரு டயர்களும் செயல்திறன், பாதுகாப்பு, அதிக மைலேஜை வழங்குதல் மற்றும் சவுகரியத்தில் உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களின் நம்பத்தகுந்த தயாரிப்பு பொருள்களாக உள்ளன.

இந்திய சந்தையில் நுழைகிறது உலகளவில் பிரபலமான டயர் தயாரிப்பு நிறுவனம்... கலக்கத்தில் மற்ற நிறுவனங்கள்

இந்தியாவில் இந்த ஆறாம் தலைமுறை டயர்கள் நுழைந்துள்ளதால் பயணிகள் வாகன பிரிவில் எங்களது சந்தை விரிவடையும் என்ற நம்பிக்கை உள்ளதாக காண்டினெண்டல் இந்தியா நிறுவனத்தின் முதன்மை அதிகாரி கிளாட் டி காமா ரோஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் ரோஸ் கூறுகையில், எங்களது இத்தகைய தயாரிப்புகளை இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். எங்களது தத்துவம், ‘சந்தையில், சந்தைக்கு' ஆகும் என்றார். இவரது கூற்றுபடி உத்திரபிரதேசத்தில் உள்ள நிறுவனத்தின் மோடிபுரம் தொழிற்சாலையில் இந்த புதிய டயர்கள் தயாரிக்கப்படவுள்ளன.

இந்திய சந்தையில் நுழைகிறது உலகளவில் பிரபலமான டயர் தயாரிப்பு நிறுவனம்... கலக்கத்தில் மற்ற நிறுவனங்கள்

இந்த தொழிற்சாலையில் தற்சமயம் பேருந்து மற்றும் லாரி டயர்களை தான் காண்டினெண்டல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த இரு டயர்களில் குறிப்பாக யுசி6, அனைத்து விதமான சாலைகளிலும் வாடிக்கையாளர் விரும்பும் தரத்தினை வழங்கக்கூடியதாக இருக்கும்.

ஈரமான மற்றும் உலர்ந்த சாலைகளில் அவசரகால ப்ரேக்கை தொடர்ந்து கொடுத்தாலும் எளிதில் தேய்ந்து போகாத வகையில் டிசைனை பெற்றுள்ள அல்ட்ராகான்டெக்ட் (யுசி6) டயர் ஈரமான சாலைகளிலும் சிறப்பான கண்ட்ரோலை வழங்கும் என தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

இந்திய சந்தையில் நுழைகிறது உலகளவில் பிரபலமான டயர் தயாரிப்பு நிறுவனம்... கலக்கத்தில் மற்ற நிறுவனங்கள்

ஈரமான சாலைகளில் டயரின் நடுப்பகுதி மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும். அத்தகைய சூழலை சமாளிக்க நீரை மிக விரைவாக வடிகால் செய்யும் வகையில் யுசி6 டயர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் டைமண்ட் முனைகளுடன் இந்த டயர் தயாரிக்கப்படவுள்ளதால் டயரின் பேட்டர்ன் தரையில் படும் பகுதி அதிகமாக இருக்கும்.

இதனால் ப்ரேக்கிங் விசை கூடுதலாக வெளிப்படும். அதேபோல் மழை நேரங்களிலும் இதன் டைமண்ட் பேட்டர்ன், வைப்பர் போல் செயல்பட்டு டயரில் நீரின் படலம் இல்லாமல் பார்த்து கொள்ளும். 14-ல் இருந்து 17 இன்ச் வரையிலான ரிம்களுக்கு யுசி6 டயர்கள் பொருத்தமானதாக இருக்கும்.

இந்திய சந்தையில் நுழைகிறது உலகளவில் பிரபலமான டயர் தயாரிப்பு நிறுவனம்... கலக்கத்தில் மற்ற நிறுவனங்கள்

அப்படியே சிசி6 என்ற கம்ஃபார்ட்கான்டெக்ட் 6 டயருக்கு வந்தால், இதுவும் சத்தத்தை பெரிய அளவில் வெளிப்படுத்தாது. சவுகரியத்திற்கும் எந்த விதத்திலும் குறைவில்லாமல் உருவாக்கப்படவுள்ள சிசி6-ல் சுழலும்போது ஏற்படும் தடை குறைவாக இருக்கும் என்பதால் வாகனத்தின் எரிபொருள் திறன் தானாக மேம்பட துவங்கும்.

மேலும் முந்தைய தலைமுறை கம்ஃபார்ட்கான்டெக்ட் டயர்களை காட்டிலும் புதிய சிசி6 டயர் வாகனத்தின் மைல்லேஜை அதிகரிக்க உதவும் என தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. இந்த டயரை, 13-ல் இருந்து 15 இன்ச் வரையிலான ரிம்களில் பொருத்த முடியும்.

Most Read Articles

மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Continental to launch made-in-India Generation 6 tyres for passenger vehicles
Story first published: Wednesday, August 19, 2020, 20:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X