டொயோட்டாவில் இருந்து டெஸ்லா வரைக்கும் எதையும் விட்டு வைக்கவில்லை... போலி கார்களும்... சீனர்களும்...

சீனா, உலகின் மிக பெரிய ஆட்டோமொபைல் சந்தைகளுள் ஒன்று. அந்நாட்டில் வாகன தயாரிப்பில் பல நிறுவனங்கள் ஈடுப்பட்டு வருகின்றன. அவை தங்களது தயாரிப்புகளை சீனாவில் மட்டுமில்லாமல் பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் போன்ற அண்டை நாடுகளிலும் சந்தைப்படுத்தி வருகின்றன.

இருப்பினும் சீன வாகனங்களுக்கு உலகளவில் வரவேற்பு கிடைக்காமல் இருப்பதற்கு மற்ற நாட்டு நிறுவனங்களின் தனித்துவமான கார்களை காப்படியடிக்கும் அவர்களது பழக்கம் தான் முக்கியமானதாக சொல்ல வேண்டும். அவ்வாறு அவர்கள் காப்பியடித்து உருவாக்கிய சில கார்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டொயோட்டாவில் இருந்து டெஸ்லா வரைக்கும் எதையும் விட்டு வைக்கவில்லை... போலி கார்களும்... சீனர்களும்...

டொயொட்டா லேண்ட் க்ரூஸர்- ஹெங்க்டியான் யூலி

டொயோட்டா நிறுவனம் உலகம் முழுவதும் விற்பனை செய்துவரும் மாடல்களுள் லேண்ட் க்ரூஸரும் ஒன்று. இதன் சீன போலி மாடலை பற்றி பலர் அறிந்திருப்பீர்கள். ஹெங்க்டியான் யூலி என்ற பெயரில் அந்நாட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் இதன் போலி மாடலை முதன்முறையாக 2016ல் சீன சாலையில் அடையாளம் காணப்பட்டது.

டொயோட்டாவில் இருந்து டெஸ்லா வரைக்கும் எதையும் விட்டு வைக்கவில்லை... போலி கார்களும்... சீனர்களும்...

பெரும்பான்மையான டிசைன் அம்சங்கள் லேண்ட் க்ரூஸர் மாடலில் இருந்து காப்படியடித்து உருவாக்கப்பட்டுள்ள ஹெங்க்டியன் யூலி காரில் 4.6 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 280 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜினை கொண்ட யூலி எஸ்யூவி காரின் அதிகப்பட்ச வேகம் 196kmph ஆகும்.

டொயோட்டாவில் இருந்து டெஸ்லா வரைக்கும் எதையும் விட்டு வைக்கவில்லை... போலி கார்களும்... சீனர்களும்...

ஃபோர்டு எஃப்150- சாங்கன்-கைசேன் எஃப்70

சாங்கன்-கைசேன் எஃப்70 என்ற பெயரில் சீனாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த ட்ரக் மாடல் அச்சு அசல் பிரம்மாண்டமான தோற்றம் கொண்ட ஃபோர்டு எஃப்150-ன் போலியாகும். குறிப்பாக அமெரிக்காவில் மிகவும் பிரபலமானதாக விளங்கும் ஃபோர்டு எஃப்150 மாடலின் இந்த காப்பி ட்ரக் மாடல் சீனாவில் சில வருடங்களுக்கு முன்பு தான் அறிமுகமானது.

இதில் இசுஸு நிறுவனத்தின் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 4X4 சிஸ்டமும் சாங்கன்-கைசேன் எஃப்70 மாடலில் வழங்கப்பட்டு உள்ளது.

டொயோட்டாவில் இருந்து டெஸ்லா வரைக்கும் எதையும் விட்டு வைக்கவில்லை... போலி கார்களும்... சீனர்களும்...

டெஸ்லா மாடல் எக்ஸ்- எக்ஸ்பென்ங் ஜி3

டெஸ்லா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்களை பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. அதிலும் அதீத செயல்திறன், தொழிற்நுட்பம் மற்றும் முற்போக்கு சிந்தனையுடன் பொருத்தப்பட்ட வசதிகளுடன் உள்ள டெஸ்லா மாடல் எக்ஸ் காருக்கு உலகளவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனை அறிந்தும் இதன் போலி மாடலை எக்ஸ்பென்ங் ஜி3 என்ற பெயரில் சீனர்கள் உருவாக்கியுள்ளனர்.

டொயோட்டாவில் இருந்து டெஸ்லா வரைக்கும் எதையும் விட்டு வைக்கவில்லை... போலி கார்களும்... சீனர்களும்...

தோற்றம் மட்டுமின்றி கிளாம்ஷெல் பொனெட், பனோராமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளையும் இந்த போலி மாடல் டெஸ்லா மாடல் எக்ஸ் காருக்கு இணையாகவே கொண்டுள்ளது. இதில் உள்ள எலக்ட்ரிக் மோட்டாரானது அதிகப்பட்சமாக 300 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் கார் சிங்கிள் சார்ஜில் 230 km தூரம் வரை இயங்குகிறது.

டொயோட்டாவில் இருந்து டெஸ்லா வரைக்கும் எதையும் விட்டு வைக்கவில்லை... போலி கார்களும்... சீனர்களும்...

மினி கூப்பர் - லிஃபான் 330

கார்களை பற்றி சிறிது தெரிந்தவர்களால் கூட எளிதில் அடையாளம் காண இயலும் விதத்திலான தோற்றத்தை கொண்ட மினி கூப்பரையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. லிஃபான் 330 என்ற பெயரில் அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்ற இந்த காரானது மினி மற்றும் ஃபியாட் 500 மாடல்களை கலந்து உருவாக்கியது போன்றதான தோற்றத்தில் காணப்படுகிறது.

டொயோட்டாவில் இருந்து டெஸ்லா வரைக்கும் எதையும் விட்டு வைக்கவில்லை... போலி கார்களும்... சீனர்களும்...

சீனாவிலும் மினி ப்ராண்ட்டில் தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும் இதன் விலை அவற்றை விட மிகவும் மலிவானதாக உள்ளது. லிஃபான் 330 காரில் பொருத்தப்பட்டுள்ள 1.3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 90 பிஎச்பி பவரை வெளிப்படுத்துகிறது. இதனுடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

டொயோட்டாவில் இருந்து டெஸ்லா வரைக்கும் எதையும் விட்டு வைக்கவில்லை... போலி கார்களும்... சீனர்களும்...

லம்போர்கினி உருஸ் - ஹையோசோ சி60

இந்தியாவில் லம்போர்கினி நிறுவனம் அதிகளவில் விற்பனை செய்யும் மாடல்களுள் ஒன்றாக இருப்பது லம்போர்கினி உருஸ். தற்கால எஸ்யூவி மாடல்களுக்கே உண்டான தொழிற்நுட்ப வசதிகள் நிரம்பிய உருஸ் மாடலின் விலை தான் அதனை வாங்க வாடிக்கையாளர்களை யோசிக்க வைக்கிறது.

டொயோட்டாவில் இருந்து டெஸ்லா வரைக்கும் எதையும் விட்டு வைக்கவில்லை... போலி கார்களும்... சீனர்களும்...

இதனால் தான் என்னவோ சீனர்கள் இதனை அப்படியே காப்பியடித்து குறைவான விலையில் விற்பனையில் விட்டுள்ளனர். ஹையோசோ சி60 என்ற பெயரில் அந்நாட்டில் விற்பனையாகும் இந்த லம்போர்கினி உருஸின் போலி மாடலில் பொருத்தப்பட்டுள்ள 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 190 பிஎச்பி பவரை வெளிப்படுத்துகிறது.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ #auto news
English summary
NEW copycat cars & SUVs from China From MINI Cooper to Land Cruiser
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X