கண்கவரும் மஞ்சள் நிறத்தில் மாருதி ஸ்விஃப்ட்... இதுக்கு எவ்ளோ செலவாகி இருக்கும்னு நெனைக்குறீங்க..?

இந்தியாவில் அதிகளவில் மாடிஃபைடு மாற்றங்களுக்கு உட்படுத்தப்படும் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் மாடல் தற்போது அட்டகாசமான மஞ்சள் நிறத்தில் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கண்கவரும் மஞ்சள் நிறத்தில் மாருதி ஸ்விஃப்ட்... இதுக்கு எவ்ளோ செலவாகி இருக்கும்னு நெனைக்குறீங்க..?

மாருதி சுசுகி நிறுவனம் தற்சமயம் மூன்றாம் தலைமுறை ஸ்விஃப்ட் மாடலை விற்பனை செய்து வருகிறது. கஸ்டமைஸ்ட் செய்வதற்கு மிகவும் ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த தலைமுறை கார் தான் அதிகளவில் மாடிஃபைடு மாற்றங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

கண்கவரும் மஞ்சள் நிறத்தில் மாருதி ஸ்விஃப்ட்... இதுக்கு எவ்ளோ செலவாகி இருக்கும்னு நெனைக்குறீங்க..?

இதனை கடந்த சில மாதங்களில் பலமுறை பார்த்திருப்போம். இந்த நிலையில் தற்போது இந்த ஹேட்ச்பேக் கார் கண்கவரும் மஞ்சள் நிறத்திற்கு மாற்றம் அடைந்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவினை ராகுல் சிங் என்பவர் தனது யுடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனால் வீடியோவில் காட்டப்பட்டுள்ள கார் அவருக்கு சொந்தமானதாக தான் இருக்க வேண்டும். இந்த வீடியோ ஆனது கார் தனக்கு இறுதியாக எப்படி வர வேண்டும் என்பதை ராகுல் சிங் கஸ்டமைஸ்ட் நிறுவனத்தை சேர்ந்த ஒருவரிடம் கூறுவதில் இருந்து ஆரம்பிக்கிறது.

கண்கவரும் மஞ்சள் நிறத்தில் மாருதி ஸ்விஃப்ட்... இதுக்கு எவ்ளோ செலவாகி இருக்கும்னு நெனைக்குறீங்க..?

அதன்பிறகு காரின் வெளிப்புறங்களில் லேயர்கள் ஒட்ட ஆரம்பிக்கப்படுவது காட்டப்படுகிறது. இதன்படி முதல் லேயர் காரின் பொனெட் பகுதியில் ஒட்டப்படுகிறது. இந்த லேயர்கள் அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான அவெரி டென்னிசன் நிறுவனத்துடையது ஆகும்.

கண்கவரும் மஞ்சள் நிறத்தில் மாருதி ஸ்விஃப்ட்... இதுக்கு எவ்ளோ செலவாகி இருக்கும்னு நெனைக்குறீங்க..?

காரின் உண்மையான நிறம் வெள்ளை. ஆனால் காரின் உரிமையாளர் சுற்றிலும் பளபளப்பான மஞ்சள் நிறமும், காரின் மேற்கூரையில் கருப்பு நிறத்தை கொண்டுவர விருப்பியுள்ளார். இதற்கான செயல்முறைகள் அனைத்தும் இந்த வீடியோவில் மிகவும் தெளிவாகவும், விரிவாகவும் காட்டப்படுகின்றன.

கண்கவரும் மஞ்சள் நிறத்தில் மாருதி ஸ்விஃப்ட்... இதுக்கு எவ்ளோ செலவாகி இருக்கும்னு நெனைக்குறீங்க..?

காரின் பக்கவாட்டு பேனல்கள் மற்றும் பூட் லிட் மட்டுமின்றி முன் மற்றும் பின்புறத்தில் உள்ள பம்பர்களும் மஞ்சள் நிறத்தை பெற்றுள்ளன. ஓஆர்விஎம்கள், ஏ,பி மற்றும் சி பில்லர்கள் கார்பன் ஃபைபர் பெயிண்ட் உடன் காட்சியளிக்கின்றன.

கண்கவரும் மஞ்சள் நிறத்தில் மாருதி ஸ்விஃப்ட்... இதுக்கு எவ்ளோ செலவாகி இருக்கும்னு நெனைக்குறீங்க..?

முன்புறத்தில் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ள சுசுகி லோகோ தான் மொத்த காருக்கும் ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்குகிறது. இந்த காரில் ஏற்கனவே ஸ்போர்ட்டியான அலாய் சக்கரங்கள் மற்றும் தொழிற்சாலைக்கு பிறகான எக்ஸாஸ்ட் பொருத்தப்பட்டுள்ளது.

கண்கவரும் மஞ்சள் நிறத்தில் மாருதி ஸ்விஃப்ட்... இதுக்கு எவ்ளோ செலவாகி இருக்கும்னு நெனைக்குறீங்க..?

இத்தகைய மாற்றங்களினால் வழக்கமான மாருதி ஸ்விஃப்ட் மாடலான இது சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ள ஸ்விஃப்ட்டின் ஸ்போர்ட் வெர்சனாக மாறியுள்ளது. தற்சமயம் மாருதி ஸ்விஃப்ட் மாடல் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Maruti Suzuki Swift with yellow wrap job looks KILLER! [Video]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X