மாஃபியா கும்பல்களின் கார்கள் இப்படிதான் இருக்கும்... மாடிஃபை ஹூண்டாய் வெர்னா...

மாஃபியா கும்பல்கள் பயன்படுத்தும் விதத்திலான தோற்றத்திற்கு ஹூண்டாய் வெர்னா செடான் கார் ஒன்று மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை காரை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

மாஃபியா கும்பல்களின் கார்கள் இப்படிதான் இருக்கும்... மாடிஃபை ஹூண்டாய் வெர்னா...

ஹூண்டாய் வெர்னா இந்தியாவில் பிரபலமான செடான் கார்களுள் ஒன்று. சமீபத்தில்தான் பிஎஸ்6 அப்டேட் உடன் டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வை புதியதாக பெற்றிருந்த இந்த காருக்கு விற்பனையில் ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஸ்கோடா ரேபிட் மற்றும் ஃபோக்ஸ்வேகன் வெண்டோ உள்ளிட்ட செடான் கார்கள் போட்டியாக உள்ளன.

மாஃபியா கும்பல்களின் கார்கள் இப்படிதான் இருக்கும்... மாடிஃபை ஹூண்டாய் வெர்னா...

விற்பனையில் ஜொலிக்கும் அதேநேரம் அதிகளவில் மாடிஃபை மாற்றங்களிலும் இந்த செடான் கார் உட்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு உதாரணமாக பல மாடிஃபை ஹூண்டாய் வெர்னா கார்களை பற்றி இதற்கு முன்னர் பார்த்துள்ளோம்.

இந்த வகையில் தற்போது, பார்ப்பதற்கு முரட்டுத்தனமான தோற்றத்திற்கு வெர்னா கார் ஒன்று மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ வினய் கபூர் என்ற யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கார் ஏற்கனவே மாடிஃபை செய்யப்பட்டு, மாடிஃபை கார் பிரியர்களின் கவனத்திற்காக மட்டுமே காட்டப்பட்டுள்ளது.

மாஃபியா கும்பல்களின் கார்கள் இப்படிதான் இருக்கும்... மாடிஃபை ஹூண்டாய் வெர்னா...

மாடிஃபை செய்யப்படுவதற்கு முன்னர் நிறைய க்றல்களை பல பேனல்களில் பெற்றிருந்ததாகவும் இதனால்தான் இந்த காரை அதன் உரிமையாளர் மாடிஃபை செய்துள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. க்ரோம் பாகங்கள் உள்பட கார் முழுக்க முழுக்க கருப்பு நிறத்தால் வடிவமைக்கப்பட, சில பாகங்கள் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன.

மாஃபியா கும்பல்களின் கார்கள் இப்படிதான் இருக்கும்... மாடிஃபை ஹூண்டாய் வெர்னா...

அதேபோல் சில பாகங்களில் கஸ்டமைஸ்ட் நிறுவனம் கை வைக்கவில்லை. ஏற்கனவே கூறியதுபோல் கார் மொத்தமும் மாஃபியா கும்பல்கள் பயன்படுத்தக்கூடியது போல் உள்ளது. காரின் முன்பக்கத்தில் சறுக்கு தட்டு வழங்கப்பட்டுள்ளது. உண்மையில் இதுதான் காருக்கு முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்குகிறது.

மாஃபியா கும்பல்களின் கார்கள் இப்படிதான் இருக்கும்... மாடிஃபை ஹூண்டாய் வெர்னா...

முன்பக்க க்ரில் மற்றும் பம்பரில் காற்று ஏற்பான் துளை உள்ளிட்டவற்றில் சிவப்பு நிறத்தை பார்க்க முடிகிறது. அப்படியே பக்கவாட்டிற்கு சென்றால், அங்கேயும் சிவப்பு நிறத்தில் சறுக்கு தட்டு உள்ளது. கதவு கைப்பிடிகளும் கருப்பு நிறத்தில் இருக்க, காரின் பின்பக்கத்தில் ஃபாக்ஸ் டிஃப்யூஸர், கஸ்டமைஸ்ட் பம்பர் மற்றும் புகை டெயில்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மாஃபியா கும்பல்களின் கார்கள் இப்படிதான் இருக்கும்... மாடிஃபை ஹூண்டாய் வெர்னா...

இவை மட்டுமின்றி இந்த வெர்னா காரின் அலாய் சக்கரங்கள் கூட கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. ஆனால் கூடுதல் ஸ்போர்டி பண்பிற்காக காலிபர்கள் சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல் காரின் உட்புற கேபினும் சிவப்பு- கருப்பு நிற கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக கார் கம்பீரமாக தோற்றத்தை பெற்றுள்ளது.

மாஃபியா கும்பல்களின் கார்கள் இப்படிதான் இருக்கும்... மாடிஃபை ஹூண்டாய் வெர்னா...

குறிப்பாக சிவப்பு நிறம் தான் மொத்த கருப்பு நிறத்தையும் எடுப்பாக காட்டுகின்றது. மற்றப்படி என்ஜின் அமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. விலாகர் கஸ்டமைஸ்ட் நிறுவனம் இந்த ஹூண்டாய் வெர்னா காரை மாஃபியா தோற்றத்திற்கு மாற்ற கடுமையாக உழைத்திருப்பது இந்த வீடியோ மூலம் அறிய முடிகிறது.

Most Read Articles
English summary
Hyundai Verna Mafia Modification
Story first published: Thursday, October 15, 2020, 1:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X