இசைக்கு ஏற்ப டான்ஸ் ஆடும் மஹிந்திரா தார்... இந்த வீடியோவை மிஸ் பண்ணிடாதீங்க, வருத்தப்படுவீங்க...

இசைக்கேற்ப டான்ஸ் ஆடும் மஹிந்திர தார் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இசைக்கு ஏற்ப டான்ஸ் ஆடும் மஹிந்திரா தார்... இந்த வீடியோவை மிஸ் பண்ணிடாதீங்க, வருத்தப்படுவீங்க...

இணையத்தில் வாகனம் சார்ந்த வீடியோக்கள் பல வைரலாகிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலும் மாடிஃபை செய்யப்பட்ட வாகனங்களைப் பற்றியதாகவோ அல்லது ஸ்டண்ட் செய்யும் வாகனங்களைப் பற்றியதாகவோ மட்டுமே இருக்கின்றன. இதைதான் பல நாட்களாக நாமும் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

இசைக்கு ஏற்ப டான்ஸ் ஆடும் மஹிந்திரா தார்... இந்த வீடியோவை மிஸ் பண்ணிடாதீங்க, வருத்தப்படுவீங்க...

ஆனால், இதுதவிர சில விநோத சம்பவங்கள்குறித்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், டான்ஸ் ஆடும் மஹிந்திரா தார் கார் பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கிவிருக்கின்றோம். இதுகுறித்த வீடியோவை கவுரவ்ஸோன் (GAURAVZONE) எனும் யுடியூப் தளம் வெளியிட்டிருக்கின்றது.

இசைக்கு ஏற்ப டான்ஸ் ஆடும் மஹிந்திரா தார்... இந்த வீடியோவை மிஸ் பண்ணிடாதீங்க, வருத்தப்படுவீங்க...

பொதுவாக எஸ்யூவி ரக வாகனம் என்றாலே ஆஃப் ரோடு மற்றும் நெடுந்தூர பயணத்திற்கு ஏற்றவை என்ற பார்வையே அனைவரின் மத்தியிலும் காணப்பட்டு வருகின்றது. ஆனால், வாகன ஆர்வலர்கள் மற்றும் காதலர்கள் மத்தியில் மட்டும் எஸ்யூவி என்றாலே அதனை எப்படி செய்வது என்றே எண்ணமே அதிகம் காணப்படுகின்றது. இதற்கேற்ப பல்வேறு எஸ்யூவி கார்கள் முரட்டுத்தனமான ஆஃப் ரோடர்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.

இசைக்கு ஏற்ப டான்ஸ் ஆடும் மஹிந்திரா தார்... இந்த வீடியோவை மிஸ் பண்ணிடாதீங்க, வருத்தப்படுவீங்க...

அந்தவகையிலேயே மஹிந்திரா தார் ஆடும் வகையில் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. காரை இவ்வாறு மாடிஃபை செய்வதற்கு இந்தியாவில் பெரியளவில் சாதனங்கள் கிடைப்பதில்லை. அதேசமயம், சர்வதேச சந்தையில் இதற்கான ஹைட்ராலிக்ஸ்கள் ஏராளமாக கிடைக்கின்றன. இதைப் பயன்படுத்தியே வெளிநாட்டவர்கள் தங்களது காரை குதிக்கும் திறனுக்கு மாற்றுகின்றனர்.

இசைக்கு ஏற்ப டான்ஸ் ஆடும் மஹிந்திரா தார்... இந்த வீடியோவை மிஸ் பண்ணிடாதீங்க, வருத்தப்படுவீங்க...

ஆனால், தற்போதைய சம்பவத்தில் இதுபோன்ற ஸ்பெஷல் அம்சங்கள் (ஹைட்ராலிக்ஸ்) எதுவும் சேர்க்கப்படாமலேயே மஹிந்திரா தார் எஸ்யூவியை குதிக்கும் வகையில் மாடிஃபை செய்திருக்கின்றார் இளைஞர் ஒருவர். அது எப்படி என்ற கேள்வி உங்களுக்கு எழும்பியிருக்கலாம். இதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

இசைக்கு ஏற்ப டான்ஸ் ஆடும் மஹிந்திரா தார்... இந்த வீடியோவை மிஸ் பண்ணிடாதீங்க, வருத்தப்படுவீங்க...

யுடியூப் புகழ் காஷ்மீரி எனும் நபர்தான் இந்த செயல்பாட்டிற்கு காரணமானவர். இவரிடத்தில் மஹிந்திர தார் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஆகிய இரு எஸ்யூவி கார்கள் இருக்கின்றன. இரண்டுமே மிக கடுமையாக மாடிஃபை செய்யப்பட்ட கார்களாக இருக்கின்றன. கார்களின் வெளிப்புறத் தோற்றத்தைப் பார்த்தாலே அது எந்த வகையில் மாடிஃபை செய்யப்பட்டிருக்கின்றது என்பது பற்றிய தகவல் உங்களுக்கு அது புரிந்துவிடும்.

இசைக்கு ஏற்ப டான்ஸ் ஆடும் மஹிந்திரா தார்... இந்த வீடியோவை மிஸ் பண்ணிடாதீங்க, வருத்தப்படுவீங்க...

(குறிப்பு: இதுபோன்று வாகனங்களை மாடிஃபை செய்வது இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றமாகும்).

இளைஞர் மேற்கொண்ட மாடிஃபிகேஷனில் அதிக ஒலியை எழுப்பும் சவுண்ட் சிஸ்டமும் ஒன்று. இது திருமணம் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பயன்படுத்தும் டிஜே சவுண்ட் சிஸ்டத்திற்கு இணையானதாகும். திருமண நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவதற்காகவே இத்தகைய அதீ திறன் கொண்ட மியூசிக் சிஸ்டத்தை அவர் எஸ்யூவி கார்களில் கொண்டு புகுத்தியுள்ளார்.

இசைக்கு ஏற்ப டான்ஸ் ஆடும் மஹிந்திரா தார்... இந்த வீடியோவை மிஸ் பண்ணிடாதீங்க, வருத்தப்படுவீங்க...

மேலும், இதுபோன்ற கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் மாடிஃபை செய்யப்பட்ட கார்களைப் பயன்படுத்தும்போது, அக்காரை வைத்து மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக அதனை அவர் குதிக்கச் செய்வார். இதற்காக எந்தவொரு ஸ்பெஷல் கிட்டும் அவர்கள் பயன்படுத்தவில்லை என்பதே மிகப்பெரிய ஆச்சரியம்.

இசைக்கு ஏற்ப டான்ஸ் ஆடும் மஹிந்திரா தார்... இந்த வீடியோவை மிஸ் பண்ணிடாதீங்க, வருத்தப்படுவீங்க...

சிறப்பு கிட்டுகள் பயன்படுத்தாத நிலையில், வெறும் ஆக்ஸலரேட்டர்களை மட்டுமே கொண்டு இந்த துள்ளிக் குதிக்கும் செயலை அவர்கள் செய்து வருகின்றார்.

இதற்கு டயரும் ஓர் காரணம். ஏர் பிரஷ்ஷரை துள்ளிக் குதிக்கின்ற வகையில் டயரில் நிரப்பி, அதன் பின்னரே ஆக்ஸலரேட்டரை கண்ணிமைக்கும் நேரத்தில் அழுத்தி விட்டு குதிக்கச் செய்கின்றனர்.

இசைக்கு ஏற்ப டான்ஸ் ஆடும் மஹிந்திரா தார்... இந்த வீடியோவை மிஸ் பண்ணிடாதீங்க, வருத்தப்படுவீங்க...

ஒரு முறை அதிக முறுக்கு விசையுடன் முன் பக்க வீல்கள் தூக்கப்பட்டு பின்னர் தரையை மீண்டும் சந்திக்கும். அப்போது வழக்கமான சஸ்பென்ஷன்கள் அதை மீண்டும் மேலெழும்ப செய்கிறது. அம்மாதிரியான நேரத்தில்தான் தொடர்ச்சியாக ஆக்ஸலரேட்டர் கொடுக்கப்பட்டு காரை அந்த குழு துள்ளிக் குதிக்கச் செய்கின்றது.

இசைக்கு ஏற்ப டான்ஸ் ஆடும் மஹிந்திரா தார்... இந்த வீடியோவை மிஸ் பண்ணிடாதீங்க, வருத்தப்படுவீங்க...

மிகத் தெளிவாக கூற வேண்டுமானால் பைக்கை வீலிங் செய்ய எப்படி அதிக முறுக்கு விசையுடன் ஆக்ஸலரேட்டர் கொடுக்கப்படுகின்றதோ, அதேபோன்று இக்காரிலும் செய்யப்படுகின்றது. காரின் முன் வீல்கள் ஒரு முறை தரையைத் தொட்டதும் மீண்டும் அதேபோன்று தொடர்ச்சியாகச் செய்யப்படுகின்றது. இதனாலயே, மஹிந்திரா தார் துள்ளிக் குதிப்பதைப் போல் தெரிகின்றது.

இதனை பார்க்கும்போது இசைக்கேற்ப மஹிந்திரா தார் ஆட்டம் ஆடுவதைப் போல் தெரியும். இவ்வாறு, வழக்கமான சஸ்பென்ஷன் கொண்ட காரை துள்ளிக் குதிக்கச் செய்வது மிகவும் ஆபத்தானது. அது காரின் சஸ்பென்ஷனை பதம் பார்ப்பதுடன், அதன் ஆயுட்காலத்தைக் குறைக்கச் செய்யும். மேலும், காரின் உறுதித் தன்மையையும் அது சீர்குலைக்கும். எனவேதான் இதுபோன்ற தேவையற்ற ஸ்டண்ட்டுகளை வாகனங்களில் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.

Most Read Articles

English summary
Dancing Mahindra Thar - Video. Read In Tamil.
Story first published: Wednesday, July 8, 2020, 19:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X