டட்சன் கார்களுக்கு சிறப்பு சேமிப்புச் சலுகைகள்... முழு விபரம்

ஆண்டு இறுதியை நெருங்கி துவங்கி இருக்கும் இவ்வேளையில், கார் வாங்க திட்டமிட்டிருப்போரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், சிறப்பு சேமிப்புச் சலுகைகளை டட்சன் கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

டட்சன் கார்களுக்கு டிஸ்கவுண்ட் ஆஃபர்... முழு விபரம்

மிக குறைவான விலையில் அதிக சிறப்பம்சங்கள், இடவசதியுடன் கூடியதாக டட்சன் கார்கள் முன்னிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் டட்சன் கார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதன்படி தனது கார்களுக்கு அதிகபட்ச சேமிப்பை பெறும் வாய்ப்பை டட்சன் வழங்குகிறது.

டட்சன் கார்களுக்கு டிஸ்கவுண்ட் ஆஃபர்... முழு விபரம்

எக்ஸ்சேஞ்ச் போனஸ், நேரடி தள்ளுபடி உள்ளிட்டவற்றுடன் டட்சன் கார்கள் மீது ரூ.51,000 வரை மதிப்புடைய சலுகைகளை பெற முடியும். ஒவ்வொரு டட்சன் கார் மாடலுக்கும் எவ்வளவு அதிகபட்ச சேமிப்பு கொடுக்கப்படுகிறது என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

டட்சன் கார்களுக்கு டிஸ்கவுண்ட் ஆஃபர்... முழு விபரம்

டட்சன் ரெடிகோ

டட்சன் ரெடிகோ காருக்கு ரூ.38,000 வரை சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். ஆண்டு இறுதிக்காக ரூ.11,000 சிறப்பு போனஸாகவும், ரூ.7,000 தள்ளுபடியாகவும், ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் பெறும் வாய்ப்பு இருக்கிறது.

டட்சன் கார்களுக்கு டிஸ்கவுண்ட் ஆஃபர்... முழு விபரம்

மேலும், கொரோனா தடுப்பில் முன்கள போராளிகளாக உள்ள மருத்துவ பணியாளர்களுக்காக ரூ.5,000 கார்ப்பரேட் ஆஃபராகவும் வழங்கப்படுகிறது. டட்சன் ரெடிகோ கார் ரூ.2.83 லட்சம் முதல் ரூ.4.77 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

டட்சன் கார்களுக்கு டிஸ்கவுண்ட் ஆஃபர்... முழு விபரம்

டட்சன் கோ

டட்சன் கோ காருக்கு ரூ.51,000 வரை சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது. ஆண்டு இறுதிக்காக ரூ.11,000 வரை போனஸாகவும், ரூ.20,000 தள்ளுபடியாகவும், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் பெறும் வாய்ப்பு இருக்கிறது. டட்சன் கோ கார் ரூ.3.99 லட்சம் முதல் ரூ.6.45 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் சிவிடி கியர்பாக்ஸ் மாடலானது இந்தியாவின் மிக குறைவான விலை சிவிடி மாடல் என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறது.

டட்சன் கார்களுக்கு டிஸ்கவுண்ட் ஆஃபர்... முழு விபரம்

டட்சன் கோ ப்ளஸ்

டட்சன் கோ ப்ளஸ் மினி எம்பிவி காருக்கு ரூ46,000 வரை சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.11,000 ஆண்டு கடைசி போனஸாகவும், ரூ.15,000 தள்ளுபடியாகவும், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் பெற முடியும். ரூ.4.19 லட்சம் முதல் ரூ.6.89 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. கோ ஹேட்ச்பேக் கார் மாடலைவிட ரூ.40,000 கூடுதல் விலையில் இந்த கார் கிடைக்கிறது.

டட்சன் கார்களுக்கு டிஸ்கவுண்ட் ஆஃபர்... முழு விபரம்

ஆஃபர் விபரம்

டட்சன் கார்களுக்கான இந்த ஆஃபர் வரும் 30ந் தேதி வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள டட்சன் கார் டீலரை தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை பெற முடியும்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 26, 2020, 10:23 [IST]
English summary
Datsun has announced attractive discounts, benefits and special offers in India for the month of November 2020. The company is offering discounts on its entire line-up of vehicles currently sold in the country: Redi-GO, GO and GO+.
மேலும்... #டட்சன் #datsun
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+