டட்சன் கோ, கோ ப்ளஸ் கார்களின் பிஎஸ்6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்!

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் பிஎஸ்6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த கார்களில் ஏராளமான சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருப்பதுடன் மிக சவாலான விலையில் வந்துள்ளன.

டட்சன் கோ, கோ ப்ளஸ் கார்களின் பிஎஸ்6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்!

மிக குறைவான விலை கார் மார்க்கெட்டில் அதிக இடவசதி மற்றும் மதிப்புடைய தொழில்நுட்ப அம்சங்களுடன் டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இதில், டட்சன் கோ ஹேட்ச்பேக் கார் 5 சீட்டர் மாடலாகவும், கோ ப்ளஸ் கார் மினி எம்பிவி ரகத்தில் 7 சீட்டர் மாடலாகவும் வசதிகளை பெற்றிருக்கின்றன. ஆனால், சந்தைப் போட்டியில் இந்த கார்கள் பின்தங்கி உள்ளன. இதனை மனதில் வைத்து அதிக மதிப்புடைய அம்சங்களுடன் இந்த கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

டட்சன் கோ, கோ ப்ளஸ் கார்களின் பிஎஸ்6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்!

கடந்த மாதம் 1ந் தேதி முதல் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், அதற்கு இணையாக மேம்படுத்தப்பட்ட எஞ்சின் மற்றும் சிறப்பு சலுகைகளுடன் இந்த கார்கள் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

டட்சன் கோ, கோ ப்ளஸ் கார்களின் பிஎஸ்6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த கார்களில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 77 பிஎஸ் பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. மிக குறைவான சிவிடி கியர்பாக்ஸ் மாடல்களில் ஒன்றாகவும் இருக்கின்றன.

டட்சன் கோ, கோ ப்ளஸ் கார்களின் பிஎஸ்6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த கார்களில் 14 அங்குல அலாய் வீல்கள், எல்இடி பகல்நேர விளக்குகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. அதேபோன்று, அயர்ந்து போவதை தவிர்க்கும் அமைப்புடன் இருக்கைகள், 7.0 அங்குல திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே கனெக்ட்டிவிட்டி வசதிகள் உள்ளன. இந்த கார்களில் ஸ்போர்ட்ஸ் மோடு கொடுக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.

டட்சன் கோ, கோ ப்ளஸ் கார்களின் பிஎஸ்6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட், பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

டட்சன் கோ, கோ ப்ளஸ் கார்களின் பிஎஸ்6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்!

இரண்டு கார்களும் ரூபி ரெட், பிரான்ஸ் க்ரே, ஆம்பர் ஆரஞ்ச், க்றிஸ்ட்டல் சில்வர், விவிட் புளூ மற்றும் ஓபல் ஒயிட் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

டட்சன் கோ, கோ ப்ளஸ் கார்களின் பிஎஸ்6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்!

டட்சன் கோ பிஎஸ்6 மாடலின் மேனுவல் மாடலுக்கு ரூ.3.99 லட்சம் ஆரம்ப விலையும், சிவிடி மாடலுக்கு ரூ.6.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, டட்சன் கோ ப்ளஸ் பிஎஸ்6 மாடலின் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுக்கு ரூ.4.19 லட்சம் ஆரம்ப விலையும், சிவிடி மாடலுக்கு ரூ.6.69 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டட்சன் கோ, கோ ப்ளஸ் கார்களின் பிஎஸ்6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்!

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் பிஎஸ்6 கார்களுக்கு சிறப்பு கடன் திட்டத் தேர்வையும் டட்சன் அறிவித்துள்ளது. அதாவது, இப்போது கார் வாங்கினால் முதல் 7 மாதங்களுக்கு இஎம்ஐ கட்டத் தேவையில்லை. வரும் 2021ம் ஆண்டு ஜனவரி முதல் இஎம்ஜ கட்டத் துவங்கும் வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #டட்சன் #datsun
English summary
Datsun India has launched the BS6 compliant of its all-new GO and GO+, the most affordable CVT-equipped (continuously variable transmission) cars in India. The new Datsun GO and GO+ have a 1.2-liter petrol engine and offer a maximum power of 77PS/104Nm with 5-speed manual and CVT transmission.
Story first published: Thursday, May 14, 2020, 16:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X