சென்னையில் டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை ஓட்டம்...

டட்சன் நிறுவனத்தின் ரெடிகோ மாடல் முக்கியமான சில அப்டேட்களுடன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது. இந்நிலையில் இந்த புதிய மாடல் கார் சென்னைக்கு அருகே சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை...

பட்ஜெட் ஹேட்ச்பேக் காரான டட்சன் ரெடிகோ மாடல் முக்கியமான அப்டேட்களாக பிஎஸ்6 என்ஜின், புதுமையான டிசைன் மற்றும் கூடுதலான தொழிற்நுட்ப வசதிகள் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது.

சென்னையில் டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை...

மற்றப்படி தற்போதைய ரெடிகோ மாடலின் எஸ்யூவி கார்களுக்கு உண்டான உயரமான தோற்றத்தை அப்படியே இந்த 2020 மாடலும் கொண்டுள்ளது. இருப்பினும் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனால் காரின் முன்புறத்தில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

சென்னையில் டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை...

கடந்த வருட அக்டோபர் மாதத்தில் க்ராஷ் சோதனையில் ஈடுப்பட்டு இருந்த இந்த ஹேட்ச்பேக் கார் பாதசாரிகளின் பாதுகாப்பு சோதனையில் விரைவில் உட்படுத்தப்படவுள்ளது. இந்த நிலையில் தற்போதைய சோதனை ஓட்டத்தின் மூலம் காரின் பக்கவாட்டில் தற்போதைய ரெடிகோ மாடலில் இருப்பதை போல் அதிகளவில் வளைந்த பேனல்கள் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

சென்னையில் டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை...

இருப்பினும் ரெடிகோ மாடலின் இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் ஹேட்ச்பேக்கின் தோற்றத்திற்காக ஆழமாக காரின் உட்புறம் வளைக்கப்பட்ட ஒரே ஒரு பேனலை கொண்டுள்ளது. பின்புறம் கிட்டத்தட்ட தற்சமயம் டீலர்ஷிப்களில் விற்பனையாகி கொண்டிருக்கும் ரெடிகோ ஹேட்ச்பேக் காரை ஒத்துள்ளது.

சென்னையில் டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை...

என்ஜின் அமைப்பாக 2020 ரெடிகோ மாடலில் தற்போதைய மாடலின் 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என்ற இரு என்ஜின் தேர்வுகள் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக வழங்கப்படவுள்ளன. பிஎஸ்4 தரத்தில் 54 பிஎச்பி மற்றும் 68 பிஎச்பி பவரை முறையே வெளிப்படுத்தி வருகின்ற இந்த என்ஜின்கள் அப்கிரேட் செய்யப்பட்டு ஏற்கனவே ரெடிகோ மாடலின் முக்கிய போட்டி மாடலான ரெனால்ட் க்விட் ஹேட்ச்பேக் காரில் வழங்கப்பட்டுள்ளன.

சென்னையில் டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை...

இதில் சிறிய 0.8 லிட்டர் என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், பெரிய 1.0 லிட்டர் என்ஜினுடன் ஏஎம்டி கியர்பாக்ஸும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக வழங்கப்பட்டுள்ளன.

சென்னையில் டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை...

மாருதி சுசுகி ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோ மற்றும் ரெனால்ட் க்விட் போன்ற சந்தையில் பிரபலமாக உள்ள ஹேட்ச்பேக் மாடல்களுடன் ரெடிகோ மாடல் போட்டியிட்டு வருவதால் இதன் இந்த பிஎஸ்6 வெர்சன் காரில் ஏகப்பட்ட தொழிற்நுட்ப அம்சங்களையும் டிசைன் அப்டேட்களையும் டட்சன் நிறுவனம் வழங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை...

இந்த அப்டேட்களில் முக்கியமானதாக டேஸ்போர்டு மற்றும் உட்புற லே-அவுட் உள்ளிட்டவை பார்க்கப்படுகின்றன. மற்றப்படி தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் ட்யூல்-முன்புற காற்றுப்பைகள் இந்த ஹேட்ச்பேக் மாடலின் டாப் வேரியண்ட்களில் மட்டும் தான் வழங்கப்படவுள்ளன.

சென்னையில் டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை...

தற்சமயம் எக்ஸ்ஷோரூம்களில் டட்சன் ரெடிகோ மாடலின் 0.8 லிட்டர் வெர்சன் கார் ரூ.2.80-ரூ.3.62 லட்சத்திலும், 1.0 லிட்டர் வெர்சன் ரூ.3.90-ரூ.4.37 லட்சத்திலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் சந்தைக்கு வரவுள்ள இதன் இந்த பிஎஸ்6 மாடல் கார் ரூ.10,000 வரையில் விலை அதிகரிப்பை பெறும் என கூறப்பட்டு வருகிறது.

Source: Autocar India

Most Read Articles
மேலும்... #டட்சன் #datsun
English summary
Datsun Redigo facelift spy shots indicate major updates
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X