டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட்டின் அதிகாரப்பூர்வ தோற்றம் வெளிவந்தது..!

டட்சன் இந்தியா நிறுவனம் ரெடி-கோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் புதிய டீசர் புகைப்படங்களை அறிமுகத்திற்கு முன்னதாக வெளியிட்டுள்ளது. இதன்மூலம் வெளிவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட்டின் அதிகாரப்பூர்வ தோற்றம் வெளிவந்தது..!

புதிய ரெடி-கோ ஃபேஸ்லிஃப்ட் மாடலை தற்சமயம் அமலில் உள்ள ஊரடங்கு முடிந்தவுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்த டட்சன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இதன் இரு டீசர் புகைப்படங்களின் மூலமாக இந்த ஃபேஸ்லிஃப்ட் காரின் முன் மற்றும் பக்கவாட்டு பகுதிகளின் தோற்றம் வெளிவந்துள்ளது.

டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட்டின் அதிகாரப்பூர்வ தோற்றம் வெளிவந்தது..!

இந்த வகையில் டட்சன் ரெடி-கோ ஃபேஸ்லிஃப்ட் கார் L-வடிவிலான டிஆர்எல்களையும், சுற்றிலும் க்ரோம் உடன் புதிய எண்கோண வடிவிலான க்ரில், எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் டட்சன் பேட்ஜிங் பொருத்தப்பட்ட ஃபெண்டர்கள் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது.

டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட்டின் அதிகாரப்பூர்வ தோற்றம் வெளிவந்தது..!

இவற்றுடன் பிரகாசமான நிறத்தில் ஃபாக்ஸ் ஸ்கிட் தட்டுகள், ரூஃப்பில் வழக்கமான ஆண்டெனா, ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்பாய்லர், எல்இடி டெயில்லைட்கள் மற்றும் அலாய் சக்கரங்களும் உள்ளன. உட்புறம் புதிய அமைப்பில் அப்டேட்டான இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் திருத்தியமைக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் போன்றவற்றை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட்டின் அதிகாரப்பூர்வ தோற்றம் வெளிவந்தது..!

அதேபோல் இந்த 2020 ஃபேஸ்லிஃப்ட் கார் க்ராஷ் டெஸ்ட் மற்றும் பாதுகாப்பு விதிக்களுக்காக அப்டேட் செய்யப்பட்டிருக்கும் எனவும் கூறலாம். இயக்க ஆற்றலுக்கு ரெடி-கோ மாடலின் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட்டின் அதிகாரப்பூர்வ தோற்றம் வெளிவந்தது..!

இதில் சிறிய அளவு பெட்ரோல் என்ஜின் 54 பிஎச்பி பவரையும், 72 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெரிய அளவிலான பெட்ரோல் என்ஜின் 67 பிஎச்பி பவர் மற்றும் 91 என்எம் டார்க் திறனை தற்சமயம் வெளிப்படுத்தி வருகிறது. இந்த இரு என்ஜின்களுடனும் நிலையாக 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் பொருத்தப்படவுள்ளது.

டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட்டின் அதிகாரப்பூர்வ தோற்றம் வெளிவந்தது..!

1.0 லிட்டர் வேரியண்ட்டிற்கு மட்டும் கூடுதல் தேர்வாக ஏஎம்டி கியர்பாக்ஸும் வழங்கப்படவுள்ளது. கொரோனா தீவிரமடைவதற்கு முன்பாக தொடர் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வந்த இந்த ஃபேஸ்லிஃப்ட் காரில் இந்த சோதனை புகைப்படங்களின் மூலமாக முன்புறத்தை தவிர்த்து மற்ற அனைத்து பாகங்களும் வழக்கமான டிசைனில் வழங்கப்பட்டிருப்பது தெரிய வந்திருந்தது.

டட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட்டின் அதிகாரப்பூர்வ தோற்றம் வெளிவந்தது..!

மாருதி சுசுகி ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோ மற்றும் ரெனால்ட் க்விட் போன்ற சந்தையில் பிரபலமான மாடல்களுடன் போட்டியிடுவதால் இந்த பிஎஸ்6 காரில் அப்டேட்டான தொழிற்நுட்ப வசதிகளை டட்சன் நிறுவனம் வழங்கியிருக்கும் என்பது நிச்சயம். இதன் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.2.8 - ரூ. 4.37 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #டட்சன் #datsun
English summary
New Datsun redi-GO Teaser India Launch
Story first published: Monday, April 27, 2020, 22:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X