இந்தியாவிலேயே விலையுயர்ந்த மஹிந்திரா பொலிரோ இதுதான்... விலைய விட இதுல இருக்க அம்சங்கள் மிரள வைக்குது!!

இந்தியாவின் விலையுயர்ந்த மஹிந்திரா பொலிரோ கார் பற்றி உங்களுக்கு தெரியுமா? அதுகுறித்த தகவலைதான் இப்பதிவில் நாம் காணவிருக்கின்றோம்.

dc-design-converts-mahindra-bolero-as-luxurious-car

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல டிசி டிசைன் நிறுவனம், வழக்கமான மஹிந்திரா பொலிரோ கார் ஒன்றை மிகுந்த சொகுசு வசதிகள் அடங்கிய வாகனமாக மாற்றியிருக்கின்றது. இவ்வாறு வாகனங்களை மாற்றியமைப்பதில் பெயர்போன நிறுவனமாக டிசி டிசைன் இருக்கின்றது. இந்த நிறுவனம், மிக சமீபத்திலேயே 2.0 கொள்கையின்கீழ் இந்தியாவில் இயங்கத் தொடங்கியது.

dc-design-converts-mahindra-bolero-as-luxurious-car

அதாவது, தனது வாகன மாடிஃபிகேஷன் திறனை புதிய லெவலுக்கு உயர்த்தி அது செயல்படத் தொடங்கியிருக்கின்றது. இந்த புதிய செயல்பாட்டின் அடிப்படையிலேயே மஹிந்திரா பொலிரோ காரை டிசி டிசைன் வேற லெவலில் மாடிஃபை செய்திருக்கின்றது. இதனால் இந்த பொலிரோ கார் இந்தியாவின் விலையுயர்ந்த காராக மாறியிருக்கின்றது.

dc-design-converts-mahindra-bolero-as-luxurious-car

டிசி டிசைன் நிறுவனத்தின் வடகிழக்கு கிளை நிறுவனமே பொலிரோ மாடலை மாடிஃபிகேஷன் செய்திருக்கின்றது. இந்த வாகனமே இந்திய சாலையில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பொலிரோவைக் காட்டிலும் அதிக லக்சூரி மற்றும் சிறப்பு வசதிகள் கொண்ட காராக மாறியிருக்கின்றது. இக்கார் பெற்றிருக்கும் புதிய வசதிகளில் அதிக கவனத்தை ஈர்க்கும் அம்சங்களில் ஒன்றாக அதன் கருப்பு நிறம் இருக்கின்றது.

dc-design-converts-mahindra-bolero-as-luxurious-car

காரின் பெரும்பாலான பகுதிகளுக்கு கருப்பு நிறத்தையே டிசி டிசைன் வழங்கியிருக்கின்றது. தொடர்ந்து, காருக்குள் புதிதாக பொருத்தப்பட்டிருக்கும் பாகங்களையும் அது கருப்பு நிறத்திலேயே பொருத்தியிருக்கின்றது. இத்துடன், மாறுபட்டத் தோற்றத்தைக் காருக்கும் வழங்கும் விதமாக சில இடங்களில் ஆரஞ்சு நிறத்தை டிசி கொடுத்துள்ளது. இந்த நிறத்தை காரின் மேற்கூரை, கண்ணாடி மற்றும் காரின் உட்பகுதியில் இருக்கக்கூடிய சில பாகங்களில் காண முடிகின்றது.

dc-design-converts-mahindra-bolero-as-luxurious-car

இத்துடன், காரின் தரைப் பகுதிக்கும் மாறுபட்ட நிறம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இது மஹிந்திரா பொலிரோ காரை அட்டகாசமான தோற்றத்திற்கு உயர்த்தியிருக்கின்றது. மிக தெளிவாக கூற வேண்டுமானால் கவர்ச்சியான மற்றும் சூப்பர் காரைப் போன்று பொலிரோ காட்சியளிக்கின்றது.

dc-design-converts-mahindra-bolero-as-luxurious-car

தொழில்நுட்ப வசதியாக, பெரிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் இக்காரில் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இதனை பின்னிருக்கை பயணிகள் பயன்படுத்தும் வகையில் காருடைய உட்பகுதி மேற்கூரையில் நிறுவப்பட்டுள்ளது. இதுபோன்ற பன்முக வசதிகளை இக்கார் பெற்றிருக்கின்றது. இந்த ஒட்டுமொத்த மாற்றத்திற்கும் ரூ. 18 லட்சம் வரை செலவாகியிருப்பதாக கூறப்படுகின்றது.

dc-design-converts-mahindra-bolero-as-luxurious-car

காருக்கான விலையும் இதிலேயே அடங்கும். இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார்களில் பொலிரோ காரும் ஒன்று. இந்த காரை குறிப்பிட்ட சில மாநில அரசுகள், அதிகாரப்பூர்வ வாகனமாக முக்கிய பொறுப்பில் இருக்கும் அரசு பணியாளர்களுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.

dc-design-converts-mahindra-bolero-as-luxurious-car

மஹிந்திரா பொலிரோ இருவிதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதில், 1.5 லிட்டர், 3 சிலிண்டர், ட்வின்-ஸ்க்ரோள் டர்போசார்ஜட் டீசல் எஞ்ஜின் தேர்வில் கிடைக்கும் பொலிரோ, அதிகபட்சாக 70 பிஎச்பி மற்றும் 195 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

dc-design-converts-mahindra-bolero-as-luxurious-car

இதேபோன்று, 2.5 லிட்டர் எம்2டிஐசிஆர் டர்போசார்ஜட் டீசல் எஞ்ஜின் தேர்வில் கிடைக்கும் பொலிரோ 63 பிஎச்பி 180 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இவ்விரு எஞ்ஜின்களும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கின்றது. இதுமட்டுமின்றி, 7 இருக்கைகள், 8 இருக்கைகள் மற்றும் 9 இருக்கைகள் ஆகிய தேர்விலும் கிடைக்கின்றது.

Most Read Articles
English summary
DC Design Converts Mahindra Bolero As Luxurious Car. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X