புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை வேற லெவலுக்கு மாற்றும் பாடி கிட்: டிசி2 நிறுவனம் அறிமுகம்!

அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு விசேஷ கஸ்டமைஸ் தேர்வை டிசி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்காக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு ஸ்பெஷல் பாடி கிட்: டிசி2 நிறுவனம் அறிமுகம்

கார்களை கஸ்டமைஸ் செய்து தருவதில் மும்பையை சேர்ந்த டிசி நிறுவனம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. மேலும், காரின் வெளிப்புறத்தையும், உட்புறத்தையும் வேற லெவலுக்கு மாற்றித் தரும் பணிகளிலும் பெயர் பெற்றுள்ளது டிசி நிறுவனம்.

 புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு ஸ்பெஷல் பாடி கிட்: டிசி2 நிறுவனம் அறிமுகம்

இந்த நிலையில், வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு விசேஷ ஆக்சஸெரீகள் கொண்ட பாடி கிட் ஒன்றை டிசி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு ஸ்பெஷல் பாடி கிட்: டிசி2 நிறுவனம் அறிமுகம்

வழக்கமாக டிசி நிறுவனம் கார்களில் வழங்கப்படும் பாகங்களை எடுத்துவிட்டு, தான் விசேஷமாக உருவாக்கும் பாடி பேனல்களை பொருத்தி வசீகரத்தை கூட்டுவது வழக்கம். ஆனால், தற்போது புதிய மஹிந்திரா தாருக்கு ஆக்சஸெரீகளை எளிதாக பொருத்திக் கொள்ளும் விதத்தில் அறிமுகம் செய்துள்ளது.

 புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு ஸ்பெஷல் பாடி கிட்: டிசி2 நிறுவனம் அறிமுகம்

அதாவது, மஹிந்திரா தார் எஸ்யூவியில் எந்த மாற்றமும் செய்யாமல் இந்த விசேஷ ஆக்சஸெரீகளை போல்ட் - நட் பயன்படுத்தி பொருத்திக் கொள்ள முடியும். இதன்மூலமாக, படங்களில் நீங்கள் காண்பது போன்ற தனித்துவமான தோற்றத்திற்கு மஹிந்திரா தார் எஸ்யூவியின் தோற்றத்தை மாற்றிக் கொள்ள முடியும்.

 புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு ஸ்பெஷல் பாடி கிட்: டிசி2 நிறுவனம் அறிமுகம்

புதிய க்ரில் அமைப்பு, ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், பம்பர் அமைப்பு ஆகியவை இந்த பாடி கிட்டில் கொடுக்கப்படுகிறது. இதன்மூலமாக, மஹிந்திரா தார் எஸ்யூவியின் முகப்பு மிகவும் வலிமையான தோற்றத்திற்கு மாற்ற முடியும்.

 புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு ஸ்பெஷல் பாடி கிட்: டிசி2 நிறுவனம் அறிமுகம்

இந்த விசேஷ பாடி கிட்டில் மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு பெரிய அளவுடைய வீல் ஆர்ச்சுகள் மற்றும் சக்கரங்கள் இடம்பெற்றுள்ளன. இது புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை முரட்டுத்தனமான தோற்றத்திற்கு கொண்டு செல்கிறது.

 புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு ஸ்பெஷல் பாடி கிட்: டிசி2 நிறுவனம் அறிமுகம்

ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ற ஸ்டீல் சக்கரங்கள் மற்றும் ஆஃப்ரோடு பயன்பாட்டு டயர்களுடன் இந்த பாடி கிட் வருகிறது. இதன்மூலமாக, க்ரவுண்ட் க்ளியரன்ஸ் வெகுவாக அதிகரிக்க முடியும். பின்புற தோற்றத்தையும் மாற்றிக் கொள்வதற்கான பாகங்கள் வழங்கப்படுகின்றன. புதிய பம்பர், டெயில் லைட்டுகள், புதிய ஹார்டு டாப் எனப்படும் கூரை அமைப்பும் கொடுக்கப்படுகிறது.

 புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு ஸ்பெஷல் பாடி கிட்: டிசி2 நிறுவனம் அறிமுகம்

இந்த பாடி கிட்டில் உட்புறத்திற்கான மாறுதல்கள் எதுவும் செய்வற்கான பாகங்கள் அல்லது கஸ்டமைஸ் செய்யும் வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்த டிசி2 நிறுவனத்திடம் இருந்து எந்த தகவலும் இல்லை. வரும் நவம்பரில் இந்த புதிய பாடி கிட்டை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டிசி2 நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

English summary
Mahindra & Mahindra introduced their new-generation Thar SUV in the Indian market earlier this month. The all-new SUV has been received extremely well across the country, with demand for the SUV still building.
Story first published: Friday, October 30, 2020, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X