இனி நிறைய பேர் வாங்குவாங்க... மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்ற சூப்பர் பிளான்... என்னனு தெரியுமா?

மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இனி நிறைய பேர் வாங்குவாங்க... மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்ற சூப்பர் பிளான்... என்னனு தெரியுமா?

இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னையால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட நகரமாக தலைநகர் டெல்லி உள்ளது. இதற்கு பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களே மிகவும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகின்றன. தேசிய அளவில் சராசரியாக 1,000 மக்களுக்கு 8 கார்கள் மட்டுமே உள்ளன. ஆனால் டெல்லியிலோ இந்த எண்ணிக்கை 85 ஆக உள்ளது.

இனி நிறைய பேர் வாங்குவாங்க... மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்ற சூப்பர் பிளான்... என்னனு தெரியுமா?

எனவே காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக ஆளும் ஆம் ஆத்மி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. எலெக்ட்ரிக் கார்களை வாங்குபவர்களுக்கு 1.50 லட்ச ரூபாய் மானியமாக வழங்கப்படும் என டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சில மாதங்களுக்கு முன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இனி நிறைய பேர் வாங்குவாங்க... மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்ற சூப்பர் பிளான்... என்னனு தெரியுமா?

இந்த சூழலில், டெல்லியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது. அடுத்த ஒரு ஆண்டிற்குள் டெல்லியில் மிகப்பெரிய எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டமைக்க டெல்லி மாநகராட்சி நிர்வாகங்கள் தற்போது முடிவு செய்துள்ளன.

இனி நிறைய பேர் வாங்குவாங்க... மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்ற சூப்பர் பிளான்... என்னனு தெரியுமா?

ஒவ்வொரு 3 கிலோ மீட்டருக்கும் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க டெல்லி மாநகராட்சி நிர்வாகங்கள் திட்டமிட்டுள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''குறைந்தபட்சம் ஒவ்வொரு 3 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷனையாவது அமைப்பதுதான் எங்களது இலக்கு. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மக்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்'' என்றனர்.

இனி நிறைய பேர் வாங்குவாங்க... மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்ற சூப்பர் பிளான்... என்னனு தெரியுமா?

சார்ஜிங் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு 75 இடங்களை தெற்கு டெல்லி மாநகராட்சி கண்டறிந்துள்ளது. அதே சமயம் வடக்கு மாநகராட்சி சார்பில் 127 சார்ஜிங் ஸ்டேஷன்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அத்துடன் கிழக்கு மாநகராட்சி சார்பில், சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க 93 இடங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இனி நிறைய பேர் வாங்குவாங்க... மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்ற சூப்பர் பிளான்... என்னனு தெரியுமா?

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''டெல்லியில் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களின் அடர்த்தி அதிகமாக உள்ளது. இது காற்று மாசுபாட்டிற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது. எனவே பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் பேருந்துகளுக்கு மாறினால், காற்று மாசுபாடு கணிசமாக குறையும்.

இனி நிறைய பேர் வாங்குவாங்க... மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்ற சூப்பர் பிளான்... என்னனு தெரியுமா?

எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதற்கு மக்கள் விரும்பவே செய்கின்றனர். ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன்கள் போதிய அளவில் இல்லாததுதான் அவர்களின் கவலையாக உள்ளது. எனவே வரும் ஆண்டுகளில், பெட்ரோல் பங்க்குகளை போல், டெல்லியில் சார்ஜிங் ஸ்டேஷன்களையும் அதிக எண்ணிக்கையில் அமைக்கவுள்ளோம்'' என்றனர்.

இனி நிறைய பேர் வாங்குவாங்க... மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்ற சூப்பர் பிளான்... என்னனு தெரியுமா?

இதற்கிடையே தெற்கு டெல்லி மாநகராட்சி நிர்வாகம், அதிகாரிகள் பயன்பாட்டிற்கு ஏற்கனவே எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல், டீசல் கார்களுடன் ஒப்பிடும்போது எலெக்ட்ரிக் கார்களை இயக்குவதற்கு குறைந்த செலவே ஆகும் என்பதால், இதன் மூலம் போக்குவரத்து செலவு குறைந்துள்ளது. அத்துடன் சுற்றுச்சூழலுக்கும் நன்மையாக அமைந்துள்ளது.

இனி நிறைய பேர் வாங்குவாங்க... மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்ற சூப்பர் பிளான்... என்னனு தெரியுமா?

டெல்லியை போல், இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகளும், மத்திய அரசும் மானியம் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்குவதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் தற்போது தீவிரமாக உள்ளன. மத்திய அரசை பொறுத்தவரை ஃபேம் இந்தியா-2 திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்குகிறது.

இனி நிறைய பேர் வாங்குவாங்க... மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்ற சூப்பர் பிளான்... என்னனு தெரியுமா?

எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் காற்று மாசுபாடு பிரச்னைக்கு மட்டுமின்றி, கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு பிரச்னைக்கும் முடிவு கட்ட முடியும். மத்திய, மாநில அரசுகள் வழங்கி வரும் ஆதரவு காரணமாக தற்போது இந்திய சந்தையில் ஏராளமான எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகமாக தொடங்கியுள்ளன.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
English summary
Delhi Municipal Corporations Plans To Set Up Electric Vehicle Charging Stations At Every 3 Km. Read in Tamil
Story first published: Wednesday, December 16, 2020, 13:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X