நீங்களுமா!! திட்டம் போட்டு அதிரடி காட்டும் வாகன நிறுவனங்கள்... இது எங்கு போய் முடியபோகுதோ!!

நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களைத் தொடர்ந்து பிரபல இசுஸு நிறுவனமும், அதன் பிக்-அப் டிரக்குகளின் விலையைக் கணிசமாக உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

நீங்களுமா!! திட்டம் போட்டு அதிரடி காட்டும் வாகன நிறுவனங்கள்... இது எங்கு போய் முடியபோகுதோ!!

அண்மைக் காலங்களாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் விலையுயர்வைப் பற்றிய தகவல்களை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ் முதல் மாருதி சுசுகி நிறுவனம் வரை 2021ம் ஆண்டிற்கான புதிய விலையை அறிவித்திருக்கின்றன.

நீங்களுமா!! திட்டம் போட்டு அதிரடி காட்டும் வாகன நிறுவனங்கள்... இது எங்கு போய் முடியபோகுதோ!!

இம்மாதிரியான சூழ்நிலையில் இசுஸு மோட்டார்ஸும் அதன் வர்த்தக வாகன பிரிவில் விற்பனைக்கு கிடைக்கும் புதிய வாகனங்களின் விலையைக் கணிசமாக உயர்த்த இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதனால், இந்நிறுவனத்தின்கீழ் விற்பனையில் இருக்கும் டி-மேக்ஸ் மற்றும் டி-மேக்ஸ் எஸ்-கேப் ஆகிய பிக்-அப் டிரக்குகளின் விலைகள் அதிகரிக்க இருக்கின்றது.

நீங்களுமா!! திட்டம் போட்டு அதிரடி காட்டும் வாகன நிறுவனங்கள்... இது எங்கு போய் முடியபோகுதோ!!

இந்த புதுமுக பிக்-அப் டிரக்குகளை அண்மையிலேயே இசுஸு நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் உற்பத்தி செலவு அதிகரித்திருப்பதாகக் காரணம்காட்டி விலையை உயர்த்தியிருக்கின்றது. ஆகையால், வரும் ஜனவரி மாதம் 1ம் தேதியில் இருந்து ரூ. 10 ஆயிரம் வரை விலையுயர இருக்கின்றது.

நீங்களுமா!! திட்டம் போட்டு அதிரடி காட்டும் வாகன நிறுவனங்கள்... இது எங்கு போய் முடியபோகுதோ!!

இதுகுறித்து இசுஸு மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வர்த்தக வாகனங்களான டி-மேக்ஸ் மற்றும் டி-மேக்ஸ் எஸ்-கேப் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டிருக்கின்றன. இந்த புதிய விலையுயர்வு வருகின்ற 1ம் தேதி முதல் அமலுக்கு வரும். எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்படுகின்றது" என தெரிவித்துள்ளது.

நீங்களுமா!! திட்டம் போட்டு அதிரடி காட்டும் வாகன நிறுவனங்கள்... இது எங்கு போய் முடியபோகுதோ!!

இசுஸு அண்மையில் விற்பனைக்குக் கொண்டுவந்த டி-மேக்ஸ் மாடல் பிக்-அப் டிரக் வாகனங்கள் பிஎஸ்-6 தரத்திலானவை ஆகும். மூன்று விதமான வேரியண்டுகளில் இது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. டி-மேக்ஸ் கேப் சேஸிஸ், டி-மேக்ஸ் சூப்பர் ஸ்ட்ராங் மற்றும் டி-மேக்ஸ் ஆகிய அவை.

நீங்களுமா!! திட்டம் போட்டு அதிரடி காட்டும் வாகன நிறுவனங்கள்... இது எங்கு போய் முடியபோகுதோ!!

ரூ. 7.84 லட்சத்தில் இருந்து ரூ. 8.38 லட்சம் வரையிலான விலையில் இது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதேபோன்று, டி-மேக்ஸ் எஸ்-கேப் மாடலில் விற்பனைக்குக் வந்திருக்கும் பிக்-அப் டிரக்கில் இரு விதமான வேரியண்டுகள் வழங்கப்படுகின்றன. அவை, ஸ்டாண்டர்டு மற்றும் ஹை-ரைட். இதன் ஆரம்ப விலை ரூ. 9.82 லட்சம் ஆகும். இதன் உயர்நிலை மாடலின் விலை ரூ. 10.07 லட்சம் ஆகும்.

நீங்களுமா!! திட்டம் போட்டு அதிரடி காட்டும் வாகன நிறுவனங்கள்... இது எங்கு போய் முடியபோகுதோ!!

இவ்விரு பிக்-அப் டிரக்கிலும் 2.5 லிட்டர், இன்டர் கூல்டு, 4 சிலிண்டர் டீசல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 78 பிஎச்பி பவரையும், 176 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது, 5 ஸ்பீடு வேகக்கட்டுப்பாட்டு கருவியைக் கொண்டிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #இசுஸு #isuzu
English summary
Due To Increase Of Manufacturing Cost Isuzu Announced Price Hike In India. Read In Tamil.
Story first published: Tuesday, December 22, 2020, 15:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X