சில வினாடிகளில் 100கிமீ வேகம்! மெர்சலாக்கும் எலெக்ட்ரிக் ஹைப்பர் கார்... இதோட விலைதான் கண்ண கட்டுது!

கண்களை இமைப்பதற்காக மூடக் கூடிய அந்த ஒரு சில விநாடிக்குள்ளேயே மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டக்கூடிய கார் ஒன்றை அமெரிக்க நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

கண்ணிமைக்கும் நேரமே அதிகம் அதுக்குள்ள 100 கிமீ வேகத்தை தொட்டுவிடும்... இதோட விலை இன்னும் அதி பயங்கரம்!

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் சூப்பர் கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று மிக அதிக வேகத்தில் செல்லக் கூடிய கார் ஒன்றை தயாரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூப்பர் கார் என்றாலே பிரமாண்டம் மற்றும் பிரம்மிப்பு ஆகியவையே பலரின் நினைவுக்கு வரும். அத்தகைய அம்சங்களை மிக கூடுதலாகக் தாங்கியிருக்கும் காராக இக்கார் உள்ளது.

கண்ணிமைக்கும் நேரமே அதிகம் அதுக்குள்ள 100 கிமீ வேகத்தை தொட்டுவிடும்... இதோட விலை இன்னும் அதி பயங்கரம்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் எலேஷன். இந்த நிறுவனமே ஃப்ரீடம் எனும் பெயரில் சூப்பர் பவர் கொண்ட எலெக்ட்ரிக் ஹைப்பர் (Elation Freedom Hypercars) அறிமுகம் செய்துள்ளது. இந்த காரை பாற்றிதான் நாம் இந்த பதிவில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

கண்ணிமைக்கும் நேரமே அதிகம் அதுக்குள்ள 100 கிமீ வேகத்தை தொட்டுவிடும்... இதோட விலை இன்னும் அதி பயங்கரம்!

இந்த காரே மின்னலை மிஞ்சக்கூடிய திறனில் உருவாகியிருக்கின்றது. அதாவது, வெறும் 1.8 செகண்டில் 0-த்தில் இருந்து 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டக்கூடிய திறனை பெற்றிருக்கின்றது. எனவேதான் இதனை ஹைப்பர் கார் என அழைக்கின்றனர். இது ஓர் மின்சார வாகனமும்கூட. அதேசமயம், ரேஸ் டிராக்குகளில் பயன்படக்கூடிய காராகவும் இது இருக்கின்றது.

கண்ணிமைக்கும் நேரமே அதிகம் அதுக்குள்ள 100 கிமீ வேகத்தை தொட்டுவிடும்... இதோட விலை இன்னும் அதி பயங்கரம்!

இதனை சுமார் 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிள் அமெரிக்க நிறுவனம் கட்டமைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, உலகின் மிகவும் விலையுயர்ந்த மின்சார ஸ்போர்ட்ஸ் காராக இது உருவெடுத்துள்ளது. எலேஷன் நிறுவனம் அதிக வேகத்தில் இயங்கக்கூடிய சூப்பர் கார்களை உருவாக்கி வருகின்றது. அந்தவகையில், முன்னதாக இதுபோன்ற அதிக வேகத்தில் இயங்கக்கூடிய சூப்பர் கார்களை அது அறிமுகம் செய்திருக்கின்றது. ஆனால், அவற்றைக் காட்டிலும் இது (எலோன் ஃப்ரீடம்) மிக சீறிய வேகத்தில் இயங்கக்கூடிய காராக உள்ளது.

கண்ணிமைக்கும் நேரமே அதிகம் அதுக்குள்ள 100 கிமீ வேகத்தை தொட்டுவிடும்... இதோட விலை இன்னும் அதி பயங்கரம்!

இந்த எலெக்ட்ரிக் சூப்பர் கார் அதிகபட்சமாக 1,427 எச்பி திறனை வெளியேற்றும் சக்தியைக் கொண்டிருக்கின்றது. இந்த திறனை வெளியேற்றுவதற்காக மூன்று மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, நான்கு மின் மோட்டார்கள் கொண்ட மாடலிலும் இக்காரை தயாரிப்பு நிறுழனம் வடிவமைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்ணிமைக்கும் நேரமே அதிகம் அதுக்குள்ள 100 கிமீ வேகத்தை தொட்டுவிடும்... இதோட விலை இன்னும் அதி பயங்கரம்!

அந்த கார் அதிகபட்சமாக 1,903 எச்பி திறனை வெளியேற்றும். மேலும், இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 260 மைல்களாக இருக்கின்றது. அதாவது, அதிகபட்சமாக மணிக்கு 420 கிமீ எனும் வேகத்தில் இக்கார் பயணிக்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த சூப்பர் ஃபாஸ்ட் திறனுக்காகவே ஃப்ரீடம் சூப்பர் காரை மிகவும் இலகு ரக காராக தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதன் அதிகபட்ச எடை எக்காரணத்தைக் கொண்டும் காரின் சூப்பர் திறன்களைக் குறைத்துவிடக் கூடாது என்ற நோக்கில் இவ்வாறு அமெரிக்க நிறுவனம் செய்திருக்கின்றது.

கண்ணிமைக்கும் நேரமே அதிகம் அதுக்குள்ள 100 கிமீ வேகத்தை தொட்டுவிடும்... இதோட விலை இன்னும் அதி பயங்கரம்!

இருப்பினும், இக்கார் சுமார் 1,650 கிலோ எடைக் கொண்டதாக உள்ளது. இது மூன்று மோட்டார்களைக் கொண்ட ஃப்ரீடம் காரின் எடையாகும். இதைவிட சற்று கூடுதல் எடையை நான்கு மோட்டார்கள் கொண்ட வெர்ஷன் கொண்டிருக்கின்றது. காரின் திறன் மட்டுமின்றி அதன் சிறப்பு வசதிகள் சிலவும் ஃபைட்டர் ஜெட் விமானத்தைப் போன்று வழங்கப்பட்டுள்ளது.

கண்ணிமைக்கும் நேரமே அதிகம் அதுக்குள்ள 100 கிமீ வேகத்தை தொட்டுவிடும்... இதோட விலை இன்னும் அதி பயங்கரம்!

குறிப்பாக, காக்பிட் மற்றும் காரின் உட்கட்டமைப்புகள் சில ஜெட் விமானங்களுக்கு இணையான வசதியைப் பெற்றிருக்கின்றன. இக்காரை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 482 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது வழக்கமான மாடலின் ரேஞ்ஜ் விகிதம் ஆகும். இதே உயர்நிலை வேரியண்டை முழுமையாக சார்ஜ் செய்தால் 643 கிமீ வரை பயணிக்கலாம் என கூறப்படுகின்றது.

கண்ணிமைக்கும் நேரமே அதிகம் அதுக்குள்ள 100 கிமீ வேகத்தை தொட்டுவிடும்... இதோட விலை இன்னும் அதி பயங்கரம்!

இந்த காரை மின்சார வெர்ஷனில் மட்டுமின்றி எரிபொருள் எஞ்ஜினுடனும் கட்டமைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃப்ரீடம் ஐகானிக் கலெக்சன் என பெயரிடப்பட்டிருக்கும் அந்த காரில் 5.2 லிட்டர் வி10 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அதிகபட்சமாக 750 எச்பி திறனை வெளியேற்றும்.

Most Read Articles
English summary
Elation Reveals Freedom Luxury EV Hypercar. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X