பழைய பத்மினி காரை புதிய வடிவத்தில் கண்முன் நிறுத்திய உரிமையாளர்...!

ப்ரீமியர் பத்மினி கார், சிறப்பான வடிவத்தில் கஸ்டமைஸ்ட் செய்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரின் பழைய நினைவுகளை மீண்டும் கண்முன் கொண்டுவந்துள்ள இந்த கஸ்டமைஸ்ட் காரை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

பழைய பத்மினி காரை புதிய வடிவத்தில் கண்முன் நிறுத்திய உரிமையாளர்...!

ராஜ்புத் ப்ரின்ஸஸ் என்ற பெயருக்கு பிறகு பத்மினி என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்த இந்த கார் இந்தியாவில் 1964-ல் இருந்து 2000 வரையில் தயாரிக்கப்பட்டும் விற்பனை செய்யப்பட்டும் வந்தது. பத்மினி காருக்கு அந்த காலக்கட்டத்தில் ஹிந்துஸ்தான் அம்சாடர் மற்றும் ஹெரால்ட் மாடல்கள் போட்டியாக விளங்கின.

பழைய பத்மினி காரை புதிய வடிவத்தில் கண்முன் நிறுத்திய உரிமையாளர்...!

பிறகு பத்மினி பெயரில் புதிய கார்களை இந்தியாவிற்கு கொண்டுவர ப்ரீமியர் ப்ராண்ட் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அது அந்த நிறுவனம் நினைத்திருந்ததை விட மிக கடினமாக இருந்தது. பிறகு சந்தையில் இனி நிலைக்க முடியாது என எண்ணிய மும்பையை சேர்ந்த இந்நிறுவனம் புனே அருகே இருந்த தனது 26.5 ஏக்கர் நிலத்தை ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு சமீபத்தில் 2019ல் விற்றது.

பழைய பத்மினி காரை புதிய வடிவத்தில் கண்முன் நிறுத்திய உரிமையாளர்...!

இந்தியாவின் முதல் சப்-4 மீட்டர் எஸ்யூவி மாடலாக இந்நிறுவனம் கொண்டு வந்த ரியோ மாடல் தான் ப்ரீமியர் ப்ராண்ட்டை கடைசி வரை நிலைத்திருக்க செய்தது. ஆனால் கடைசியில் அந்த எஸ்யூவி மாடலுக்கான வரவேற்பும் வாடிக்கையாளர்களிடம் இருந்து குறைய ப்ரீமியர் ப்ராண்ட்டின் சகாப்தம் முடிவுக்கு வந்தது.

பழைய பத்மினி காரை புதிய வடிவத்தில் கண்முன் நிறுத்திய உரிமையாளர்...!

பத்மினி மாடலை தற்போது இந்தியாவில் எங்கு சென்றாலும் வாங்க முடியாது. இதனால் பத்மினி மாடலை தற்போது பத்திரமாக வைத்திருக்கும் சில வாடிக்கையாளர்கள் அந்த மாடலை புதுமையான வடிவத்திற்கு மாற்றி பயன்படுத்தி வருகின்றனர். அதில் ஒன்றின் புகைப்படங்கள் தான் தற்போது வெளியாகியுள்ளன.

பழைய பத்மினி காரை புதிய வடிவத்தில் கண்முன் நிறுத்திய உரிமையாளர்...!

இந்த புகைப்படங்களை மும்பையை சேர்ந்த எம்க்ராஃப்ட் டிசைன் என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பழைய பத்மினி மாடலில் இருந்து முழுவதுமாக வேறுபட்டு நிற்கும் இந்த காரை நேரில் பார்த்தால் யவருக்கும் ஒரு ரவுண்ட் சென்று வர நிச்சயம் தோன்றும்.

பழைய பத்மினி காரை புதிய வடிவத்தில் கண்முன் நிறுத்திய உரிமையாளர்...!

கருப்பு மற்றும் க்ரே என்ற இரு டோன்களில் பெயிண்ட் அமைப்பை பெற்றுள்ள இந்த கஸ்டமைஸ்ட் காரின் முன்புற க்ரில், வட்ட வடிவிலான ஹெட்லேம்ப் சரௌண்டிங், முன்புற மற்றும் பின்புற பம்பர் பாதுகாப்பான், காரின் இருபுறமும் நேர்த்தியான ஷோல்டர் லைன், பில்லர்கள் மற்றும் இண்டிகேட்டரை சுற்றிலும் கருப்பு நிறம் வழங்கப்பட்டுள்ளது.

பழைய பத்மினி காரை புதிய வடிவத்தில் கண்முன் நிறுத்திய உரிமையாளர்...!

இவை மட்டுமின்றி பூட் ஓபனர் மற்றும் இரு புறங்களிலும் லைசன்ஸ் ப்ளேட்களிலும் கருப்பு நிறத்தை பார்க்கலாம். மற்ற சிறப்பம்சங்களாக இந்த கஸ்டமைஸ்ட் பத்மினி காரில் ஸ்மோக்டு டெயில்லேம்ப்கள் மற்றும் புதிய சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. உட்புறத்தில் கருப்பு நிற டேஸ்போர்டு உடன் இருக்கைகளும் கருமையான நிறத்தில் காட்சியளிக்கின்றன.

பழைய பத்மினி காரை புதிய வடிவத்தில் கண்முன் நிறுத்திய உரிமையாளர்...!

டிசைனை தவிர்த்து காரின் என்ஜின் அமைப்பில் எதாவது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதா என்ற தகவல் கிடைக்கவில்லை. பழைய பத்மினி மாடலில் 1.1 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு வந்தது. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 4,800 ஆர்பிஎம்-ல் 47 பிஎச்பி பவரையும், 3,000 ஆர்பிஎம்-ல் 71 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

பழைய பத்மினி காரை புதிய வடிவத்தில் கண்முன் நிறுத்திய உரிமையாளர்...!

இதனுடன் இணைக்கப்பட்டு வந்த 4-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் என்ஜினின் ஆற்றலை காரின் பின் சக்கரங்களுக்கு வழங்கும். அதிகப்பட்சமாக 130kmph வேகத்தில் இயங்கக்கூடிய இந்த 4-இருக்கை காரின் மொத்த எடை 900 கிலோ ஆகும்.

Image Courtesy: Mineel Mkraft‎

பத்மினியை போன்று வாடிக்கையாளர்களிடையே மிகவும் பிரபலமாக விளங்கிய ஹிந்துஸ்தான் அம்பாசடர் மாடலும் சமீபத்தில் புதிய தோற்றத்திற்கு கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. அதனை காண கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ #auto news
English summary
This Customised Premier Padmini Is A Certain Work Of Art
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X