புகாட்டி சிரோனுக்கு இணையான திறனில் மிரட்டும் புதிய எலெக்ட்ரிக் ஹைப்பர் கார்!

புகாட்டி சிரோன் காருக்கு இணையான திறனுன் மிரட்டும் புதிய எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் மாடலை ஜெர்மனி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

புகாட்டி சிரோனுக்கு இணையான திறனில் மிரட்டும் புதிய எலெக்ட்ரிக் ஹைப்பர் கார்!

பொது சாலையில் பயன்படுத்துவதற்கான சட்டரீதியிலான அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட உலகின் அதிசெயல்திறன் மிக்க கார் மாடலாக புகாட்டி சிரோன் விற்பனையில் உள்ளது. பில்லியனர்களின் கனவு கார் மாடலாக இருந்து வரும் புகாட்டி சிரோன் பெட்ரோல் மாடலாக இருக்கும் நிலையில், அதன் மார்க்கெட்டை குறிவைத்து இப்போது மின்சார ஹைப்பர் கார்களை பல நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன.

புகாட்டி சிரோனுக்கு இணையான திறனில் மிரட்டும் புதிய எலெக்ட்ரிக் ஹைப்பர் கார்!

அந்த வரிசையில், ஜெர்மனியை சேர்ந்த எலெக்ட்ரான் இன்னோவேட்டிவ் என்ற நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் மாடலை உருவாக்கி உள்ளது. இதன் புரோட்டோடைப் மாடலானது அடுத்த ஆண்டு ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

புகாட்டி சிரோனுக்கு இணையான திறனில் மிரட்டும் புதிய எலெக்ட்ரிக் ஹைப்பர் கார்!

எலெக்ட்ரான் ஒன் என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த புதிய எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் மாடலானது கான்செப்ட் எனப்படும் தயாரிப்பு நிலையில் உள்ள மாதிரி மாடலாகவே இருக்கிறது. இதனை விற்பனைக்கு கொண்டு செல்லும் தகுதியுடன் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

புகாட்டி சிரோனுக்கு இணையான திறனில் மிரட்டும் புதிய எலெக்ட்ரிக் ஹைப்பர் கார்!

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 2.1 வினாடிகளில் எட்டிவிடும் என்றும், மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லும் திறனை பெற்றிருக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இதனால், இந்த கார் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளதுடன், புகாட்டி சிரோனுக்கு எதிராக நிலைநிறுத்தப்படும் என்று ஐரோப்பிய ஆட்டோமொபைல் துறை வட்டாரங்கள் பரபரக்கின்றன.

புகாட்டி சிரோனுக்கு இணையான திறனில் மிரட்டும் புதிய எலெக்ட்ரிக் ஹைப்பர் கார்!

இந்த ஹைப்பர் காரில் ஆற்றல் இழப்பு இல்லாமல் சக்தியை சக்கரங்களுக்கு கடத்தும் வகையில் 4 மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மின்மோட்டார்கள் இணைந்து அதிகபட்சமாக 1,341 எச்பி (1,000 கிலோவாட்ஸ்) சக்தியை வாரி வழங்கும் ஆற்றல் கொண்டவையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகாட்டி சிரோனுக்கு இணையான திறனில் மிரட்டும் புதிய எலெக்ட்ரிக் ஹைப்பர் கார்!

இதன் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் மூலமாக சேமிக்கப்படும் மின் ஆற்றலானது ஆக்டிவ் சஸ்பென்ஷன் இயக்கத்திற்கு பயன்படுத்தப்படும்.

புகாட்டி சிரோனுக்கு இணையான திறனில் மிரட்டும் புதிய எலெக்ட்ரிக் ஹைப்பர் கார்!

டிரைவிங் செய்யும் முறைகளை கண்டறிந்து அதன் அடிப்படையில் இது செயல்படும். அதேபோன்று, சாலை நிலைகள் மற்றும் ஓட்டுனரின் விருப்பத்தின் பேரில் க்ரவுண்ட் கிளியரன்ஸ் எனப்படும் தரை இடைவெளியையும் அதிகரிக்கும் வாய்ப்பை வழங்கும்.

புகாட்டி சிரோனுக்கு இணையான திறனில் மிரட்டும் புதிய எலெக்ட்ரிக் ஹைப்பர் கார்!

இவ்வளவு அதிசெயல்திறன் மிக்க இந்த புதிய எலெக்ட்ரான் ஒன் ஹைப்பர் காரின் மிக முக்கிய அம்சமே, இது மாசு உமிழ்வு இல்லாத கார் என்பதே. இது முழுக்க முழுக்க பேட்டரி மின்திறனில், மின்மோட்டார்களை கொண்டு செயல்படும்.

புகாட்டி சிரோனுக்கு இணையான திறனில் மிரட்டும் புதிய எலெக்ட்ரிக் ஹைப்பர் கார்!

ஆண்டுக்கு 140 யூனிட்டுகள் என்ற இலக்குடன் இந்த புதிய எலெக்ட்ரான் ஒன் எலெக்ட்ரிக் ஹைப்பர்கள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விலை விபரம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

Most Read Articles
English summary
German based electric car maker, Elecktron has revealed of its all new electric hypercar named as Elecktron One and it will be showcased on 2021 Geneva Motor Show.
Story first published: Saturday, June 6, 2020, 13:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X