Just In
- 2 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 8 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 9 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- 11 hrs ago
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
Don't Miss!
- News
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொத்துக்கொத்தாக மரணம்.. பீதியை கிளப்பும் கொரோனா
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆபத்தான காலத்தில் சூப்பர் முடிவு.. உயிர் காக்கும் கருவிகளை இலவசமாக வழங்க பிரபல கார் நிறுவனம் திட்டம்
கொரோனாவிற்கு எதிரான போரில் பங்களிக்கும் விதமாக பிரபல மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் இலவசமாக உயிர் காக்கும் கருவிகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உயிர் கொல்லி வைரஸ் கொரோனாவின் பிடியில் உலகமே சிக்கித் தவித்து வருகின்றது. இந்த வைரசின் தாக்கம் ஒரு பக்கம் காட்டுத் தீயைப் போல் தீவிரமடைந்து வருகின்ற அதேவேலையில் மறுபக்கம் இந்த வைரசுக்கு எதிரான போரும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.

இந்த போரில் அரசு மட்டுமின்றி தனியார் தொண்டு நிறுவனங்கள், வாகன உற்பத்தி நிறுவனங்கள் என அனைத்துத் துறைகளுமே களமிறங்கியிருக்கின்றன.
அந்தவகையில், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் பிரபல மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா தற்போது முழு வீச்சுடன் இறங்கியிருக்கின்றது.

இதனடிப்படையில், அந்நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனையாகும் உலக நாடுகள் பலவற்றிற்கு இலவசமாக தற்காலிக சுவாச கருவியான வென்டிலேட்டர்களை வழங்க முடிவு செய்துள்ளது. இதனை அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலன் மஸ்க் டுவிட் பதிவின்மூலம் உறுதி செய்துள்ளார். டெஸ்லா அனுப்பி வைக்க இருக்கும் அனைத்து வென்டிலேட்டர்களும் எஃப்டிஏ-வால் அங்கீகரிக்கப்பட்ட கருவிகளாகும்.

இந்த சாதனத்தை இலவசமாக அனுப்பி வைப்பது மட்டுமின்றி ஷிப்பிங்கையும் எந்தவொரு கட்டணமுன்றி வழங்க டெஸ்லா முடிவு செய்துள்ளது. தற்போது, கொரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளானவர்களின் முதன்மையான தேவைகளில் வென்டிலேட்டர்கள் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது.

கொரோனா வைரஸ் மனிதனின் சுவாச மண்டலங்களையே முக்கிய இலக்காக வைத்து தாக்குகின்றது. இதன் காரணத்தினாலயே வென்டிலேட்டர்கள் தற்போது அதிக முக்கியத்துவமானதாக கருதப்படுகின்றது. மேலும், கொரோனாவால் தாக்கப்பட்ட பலர் நுரையீரல் பாதிப்புக்குள்ளாகி சுவாசம் செய்வதில் சிரமம் ஏற்பட்டே பரிதாபமாக உலகை விட்டு பிரிந்துள்ளனர்.

இம்மாதிரியான சூழ்நிலையில் புதிய வென்டிலேட்டர்கள் பல உயிர்களைக் காக்க உதவும். இதனாலயே, உலக நாடுகள் அனைத்தும் அதன் வாகன உற்பத்தி நிறுவனங்களை வென்டிலேட்டர்களைத் தயாரிக்க அறிவுறுத்தி வந்தன. அதேசமயம், வென்டிலேட்டர்கள் மட்டுமின்றி கூடுதல் சில மருத்துவ உபகரணங்களையும் தயாரிக்கவும் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக மாஸ்க், கையுறை மற்றும் மருத்துவர்கள் அணியும் கண்ணாடி முகமூடிகள் உள்ளிட்டவற்றை தயாரிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகின்றது.
தற்போது, டெஸ்லா நிறுவனத்தின் மூலம் வழங்க இருக்கும் வென்டிலேட்டர்கள் எந்தெந்த மருத்துவ நிறுவனங்களுக்கும் எத்தனை யூனிட்டுகள் வழங்கப்படும் என்று தெரியவில்லை. இதுகுறித்த தகவலை விரைவில் அந்நிறுவனம் வெளியிட இருக்கின்றது.

கொரோனா வைரஸ் தற்போது உலகளவில் 7 லட்சத்திற்கும் அதிகமானோரை பாதித்துள்ளது. இதன் தாக்கம் தற்போது பூதகரமாக வெடிக்கத் தொடங்கியிருக்கின்றது. ஆகையால், மிக விரைவில் புதிய இலக்கை இந்த கொரோனா வைரஸ் எட்டிவிடும் என அஞ்சப்படுகின்றது.

மேலும், ஏற்கனவே இந்த வைரஸ் 37,500க்கும் அதிகமானோரை பலி வாங்கிவிட்டது. இதுவும் மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சம் உலகளவில் நிலவி வருகின்றது. இம்மாதிரியான சூழ்நிலையில் உலக மக்கள் அனைவரும் தங்களைத் தாங்களே கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக வீட்டிலேயே தனிமையில் இருக்க அரசு அறிவுறுத்தி வருகின்றது.

ஆனால், அத்தியாவசிய தேவைக்காக மக்கள் அவ்வப்போது வெளியேச் சுற்றித்திரிந்த வண்ணம் இருக்கின்றனர். இருப்பினம், அரசு அதன் சார்பில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்தநிலையிலேயே வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் பங்காக வென்டிலேட்டர்கள் தயாரித்தல் போன்ற பணியில் ஈடுபட்டு வருகின்றன.

வாகன உற்பத்தி நிறுவனங்கள் இவ்வாறு தங்களின் பங்கினை அளித்து வரும்நிலையில், இந்தியாவில் இந்து அறநிலையத்துறை சார்பில் சிறப்பு யாகங்கள் இன்றும் (ஏப்ரல் 1) வருகின்ற நான்காம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு துறையும் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக களமிறங்கியிருக்கின்றன.

ஆனால், மக்களின் முழு ஒத்துழைப்பில்லாமல் கொரோனாவிற்கு எதிரான போரில் நம்மால் வெற்றி காண முடியானது. தேவையற்றநிலையில் வெளியே சுற்றி திரிவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் மற்றும் அத்தியாவசிய நேரங்களில் வெளியே செல்லும்போது முக கவசங்களை அணிவது போன்றவற்றை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்.