ஆவலை தூண்டும் புதுப்பிக்கப்பட்ட ஃபார்ச்சூனர்! என்னென்ன அம்சங்கள் எல்லாம் மாற்றம் கண்டுள்ளன... வீடியோ

புதுப்பிக்கப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் பற்றிய வீடியோ ஒன்று வெளியாகி அதன் ரசிகர்களை கிரங்கடிக்கச் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஆவலை தூண்டும் புதுப்பிக்கப்பட்ட ஃபார்ச்சூனர்... என்னென்ன அம்சங்கள் எல்லாம் மாற்றம் கண்டுள்ளன... இதோ வீடியோ!

இணையத்தில் அண்மைக் காலங்களாக புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனில் தயாராகியிருக்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் பற்றிய தகவல்தான் அதிகளவில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவில், அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்களில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரும் ஒன்று. இந்த கார் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் அதிக இட சொகுசு வசதியை விரும்பும் தொழிலதிபர்கள் மத்தியில் புகழ்வாய்ந்த மாடலாக இருக்கின்றது.

ஆவலை தூண்டும் புதுப்பிக்கப்பட்ட ஃபார்ச்சூனர்... என்னென்ன அம்சங்கள் எல்லாம் மாற்றம் கண்டுள்ளன... இதோ வீடியோ!

அதாவது, பிரமாண்ட தோற்றத்தைப் பெற்றிருக்கும் ஃபார்ச்சூனர் கார், அதிக இடவசதி மற்றும் லக்சூரி அம்சங்களைக் கொண்டிருப்பதன் காரணத்தினாலேயே இந்தியாவில் அமோகமான விற்பனையைப் பெற்று வருகின்றது. இதனாலயே இந்த காருக்கு இந்தியாவில் எப்போதும் அதிகளவில் வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்த நிலை இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் காணப்படுகின்றது.

ஆவலை தூண்டும் புதுப்பிக்கப்பட்ட ஃபார்ச்சூனர்... என்னென்ன அம்சங்கள் எல்லாம் மாற்றம் கண்டுள்ளன... இதோ வீடியோ!

அந்தவகையில், டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து உள்ளது. எனவேதான் இரண்டாம் தலைமுறையாக உருவாகியிருக்கும் ஃபார்ச்சூனர் காரை டொயோட்டா நிறுவனம் முதன் முறையாக அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. இந்த அறிமுகத்தைத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட ஃபார்ச்சூனர் எஸ்யூவி பற்றிய பல்வேறு தகவல்கள் இணையத்தில் வலம் வர ஆரம்பித்துள்ளன.

ஆவலை தூண்டும் புதுப்பிக்கப்பட்ட ஃபார்ச்சூனர்... என்னென்ன அம்சங்கள் எல்லாம் மாற்றம் கண்டுள்ளன... இதோ வீடியோ!

அந்தவகையில், அக்காரில் இடம்பெற்றிருக்கும் புதிய தொழில்நுட்ப அம்சங்கள் முதல் அக்ஸசெரீஸ்கள் வரையிலான பல தகவல்கள் இணையத்தில் பரவலாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில், புதுப்பிக்கப்பட்ட ஃபார்ச்சூனர் காரில் இடம்பெற்றிருக்கம் அம்சங்களை விளக்குகின்ற வகையிலான வீடியோ ஒன்றும் வலம் வரத் தொடங்கியுள்ளது. அது, அந்த கார் பிரியர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

ஆவலை தூண்டும் புதுப்பிக்கப்பட்ட ஃபார்ச்சூனர்... என்னென்ன அம்சங்கள் எல்லாம் மாற்றம் கண்டுள்ளன... இதோ வீடியோ!

இந்த புதுப்பிக்கப்பட்ட மாடலின் வீடியோ தொகுப்பை பார்ப்பதற்கு முன்பாக, அந்த கார் இந்தியாவில் எப்போது களமிறக்கப்பட உள்ளது என்பது பற்றிய தகவலை பார்த்துவிடலாம். அதாவது, தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, இரண்டாம் தலைமுறை ஃபார்ச்சூனர் அடுத்த ஆண்டு (2021) அறமுகம் செய்யப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையில்தான் அதன் அம்சங்களை விளக்குகின்ற வகையில் வெளியாகி, இந்திய வாகன பிரியர்களிடத்தில் மோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவலை தூண்டும் புதுப்பிக்கப்பட்ட ஃபார்ச்சூனர்... என்னென்ன அம்சங்கள் எல்லாம் மாற்றம் கண்டுள்ளன... இதோ வீடியோ!

டொயோட்டா தாய்லாந்து சமீபத்தில் இரண்டாம் தலைமுறை பார்ச்சூனரின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பை அறிமுகப்படுத்தியது. உலக சந்தைகளில் 2015 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இது இரண்டாம் தலைமுறை பார்ச்சூனரின் முதல் புதுப்பிப்பாகும். அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள பார்ச்சூனரின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பில் ஏற்பட்ட மாற்றங்களை விளக்கும் வீடியோ இங்கே.

ஆவலை தூண்டும் புதுப்பிக்கப்பட்ட ஃபார்ச்சூனர்... என்னென்ன அம்சங்கள் எல்லாம் மாற்றம் கண்டுள்ளன... இதோ வீடியோ!

வீடியோவின் படி, டொயோட்டா ஃபார்ச்சூனர், அதன் வெளிப்புறம் மற்றும் உட்புறம் என அனைத்திலும் மாற்றங்களைப் பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது. இது முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில் அதிகளவு வித்தியாசத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் இது ஃபார்ச்சூனர் கார்தானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துமளவிற்கு அப்டேட்டுகளை ஏராளமாகப் பெற்றிருக்கின்றது.

ஆவலை தூண்டும் புதுப்பிக்கப்பட்ட ஃபார்ச்சூனர்... என்னென்ன அம்சங்கள் எல்லாம் மாற்றம் கண்டுள்ளன... இதோ வீடியோ!

இளம் மற்றும் நடுத்தர வயதினரை இலக்காக வைத்து புதுப்பித்தலை வழங்கப்பட்டிருக்கின்ற காரணத்தால் அதன் கவர்ச்சி முந்தைய மாடல்களைக் காட்டிலும் பல மடங்கு உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, தொழில்நுட்பங்களுக்கும் எந்தவொரு குறைச்சலுமின்றி அது காணப்படுகின்றது. அந்தவகையில், புதுப்பிக்கப்பட்ட ஃபார்ச்சூனர் காரில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கன்னெக்டிவிட்டி அம்சம் கொண்ட தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

ஆவலை தூண்டும் புதுப்பிக்கப்பட்ட ஃபார்ச்சூனர்... என்னென்ன அம்சங்கள் எல்லாம் மாற்றம் கண்டுள்ளன... இதோ வீடியோ!

அது, எண்ணற்ற சேவைகளையும், வசதிகளையும் அதன் உரிமையாளர்களுக்கு வழங்கும். இத்துடன், 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்துகொள்ளக் கூடிய முன்பக்க இருக்கை மற்றும் இருவிதமான ஷேட் கொண்ட இன்டீரியர் காணப்படுகின்றது. இது கூடுதல் லக்சூரி மற்றும் பிரிமியம் தோற்றத்தை பார்ச்சூனருக்கு வழங்கும் வகையில் உள்ளது. இதேபோன்று, புதிய ஆம்பியண்ட் லைட் சிஸ்டம் மற்றும் 9 அதி திறன் வாய்ந்த ஜிபிஎல் ஸ்பீக்கர் சிஸ்டம் ஸ்டார் ஹோட்டல்களுக்கு இணையான ஓர் பிம்பத்தை வகையில் உள்ளது.

ஆவலை தூண்டும் புதுப்பிக்கப்பட்ட ஃபார்ச்சூனர்... என்னென்ன அம்சங்கள் எல்லாம் மாற்றம் கண்டுள்ளன... இதோ வீடியோ!

இதுமட்டுமின்றி, காரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக முகப்பு பகுதி க்ரில் அமைப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த க்ரில் அமைப்பு முந்தைய மாடலில் இருந்ததைக் காட்டிலும் உருவத்திலும், வடிவத்திலும் பெரிதானதாகக் காட்சியளிக்கின்றது. இத்துடன், புதிய வடிவிலான பிஐ-பீம் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள் மற்றும் டெயில் மின் விளக்குகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஆவலை தூண்டும் புதுப்பிக்கப்பட்ட ஃபார்ச்சூனர்... என்னென்ன அம்சங்கள் எல்லாம் மாற்றம் கண்டுள்ளன... இதோ வீடியோ!

மேலும், கண்களைக் கவரும் விதமாக 18 இன்ச் அலாய் வீல், கருப்பு நிற ரூஃப் ஸ்போர்ட்டி லுக் என பல்வேறு புதுப்பித்தல் அம்சங்களை இரண்டாம் தலைமுறை ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரில் டொயோட்டா கையாண்டுள்ளது.

இதுமட்டுமின்றி கூடுதல் தொழில்நுட்ப வசதியாக முன் மற்றும் பின் பக்கங்களில் பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், சிறு அசைவைக் கொண்டு பின் பக்க டிக்கி டூரை திறக்கும் அம்சம் வழங்கப்பட்டிருக்கின்றது.

ஆவலை தூண்டும் புதுப்பிக்கப்பட்ட ஃபார்ச்சூனர்... என்னென்ன அம்சங்கள் எல்லாம் மாற்றம் கண்டுள்ளன... இதோ வீடியோ!

மேற்கூறியது போன்று ஏராளமான அம்சங்கள் புது தலைமுறை ஃபார்ச்சூனர் காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. அதுகுறித்த அனைத்து தகவலும் வீடியோவில் வழங்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஃபார்ச்சூனர் காரில் 2.8 லிட்டர் எஞ்ஜின் காணப்படுகின்றது. அது, அதிகபட்சமாக 204 பிஎஸ் மற்றும் 500 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்.

இந்த கார் இந்தியாவில் அறிமுகம்பட்சத்தில் விலைக் குறைப்புச் செய்ய வேண்டும் என்பதற்காக சில அம்சங்கள் குறைபாட்டுடன் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், தற்போது விற்பனையில் இருக்கும் பார்ச்சூனரைக் காட்டிலும் ரூ. 48 ஆயிரம் விலையுயர்வில் களமிறக்கப்படலாம் என கூறப்படுகின்றது. இதற்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதியே காரணமாக இருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Facelift Toyota Fortuner Interior Exterior Revealed Video. Read In Tamil.
Story first published: Wednesday, June 10, 2020, 18:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X