2020 நவம்பரில் மொத்தம் எத்தனை வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன? பிரிவு வாரியாக வாகன பதிவின் விபரம்!

2020 நவம்பரில் ஒட்டுமொத்தமாக எத்தனை அலகு வாகனங்கள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டன என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. பிரிவு வாரியாக வெளியாகியிருக்கும் தகவலை இப்பதிவில் காணலாம்.

2020 நவம்பரில் மொத்தம் எத்தனை வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன? பிரிவு வாரியாக வாகன பதிவின் விபரம்!

இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் எந்தெந்த பிரிவுகளில் எத்தனை அலகு (unit) பதிவுச் (Vehicle Registration) செய்யப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய தகவலை ஆட்டோமொபைல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு சங்கம் (FADA) வெளியிட்டுள்ளது. நடப்பாண்டின் தொடக்கத்தைக் காட்டிலும் 2020 நவம்பர் மாதத்தில் வாகன விற்பனை வேற லெவலில் இருந்ததாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

2020 நவம்பரில் மொத்தம் எத்தனை வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன? பிரிவு வாரியாக வாகன பதிவின் விபரம்!

இந்த நிலையிலேயே கடந்த இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்கள் எத்தனை கடந்த 2020 நவம்பரில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய தகவலை ஃபடா வெளியிட்டிருக்கின்றது. இதனை கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாத பதிவுடன் ஒப்பிட்டு அது வெளியிட்டிருக்கின்றது. இதுகுறித்த தகவலையே இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம் வாருங்கள் தகவலுக்குள் செல்லலாம்.

2020 நவம்பரில் மொத்தம் எத்தனை வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன? பிரிவு வாரியாக வாகன பதிவின் விபரம்!

பயணிகள் வாகன பிரிவு:

கடந்த 2020 நவம்பரில் பதிவு வளர்ச்சியைப் பெற்ற வாகன பிரிவில் பயணிகள் வாகன பிரிவும் ஒன்று. இது கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்தைக் காட்டிலும் 4.17 சதவீதம் அதிக பதிவு வெளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. அதாவது, 2019ம் ஆண்டு நவம்பரைக் காட்டிலும் 2020 நவம்பரில் 2,19,001 பயணிகள் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 2019ம் ஆண்டு நவம்பரில் 2,79,365 பயணிகள் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதனுடன் ஒப்பிட்டு பார்க்கையில் 2020 நவம்பர் 4.17 சதவீதம் அதிக பதிவுகளைப் பெற்றிருக்கின்றது.

2020 நவம்பரில் மொத்தம் எத்தனை வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன? பிரிவு வாரியாக வாகன பதிவின் விபரம்!

இருசக்கர வாகன பிரிவு:

2019ம் ஆண்டு நவம்பரைக் காட்டிலும் 2020 நவம்பர் மாதத்தில் குறைந்தளவு இருசக்கர வாகனங்களே பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஃபடா தெரிவித்திருக்கின்றது. 21.40 சதவீத அளவில் பதிவு சரிவை அது சந்தித்திருக்கின்றது. மிக தெளிவாக கூற வேண்டுமானால் நவம்பர் 2020யில் 14,13,378 இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. அதேசமயம், 2019இல் 17,98,201 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

2020 நவம்பரில் மொத்தம் எத்தனை வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன? பிரிவு வாரியாக வாகன பதிவின் விபரம்!

மூன்று சக்கர வாகன பிரிவு:

நடப்பாண்டில் மிகப் பெரிய பதிவு சரிவைச் சந்தித்த வாகன பிரிவில் ஒன்றாக மூன்று சக்கர வாகன பிரிவு இருக்கின்றது. இது ஒட்டுமொத்தமாக 64.98 சதவீத பதிவு சரிவைச் சந்தித்திருக்கின்றது. 2020 நவம்பரில் 24,185 அலகு ஆட்டோக்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதுவே 2019 நவம்பர் மாதத்தில் 69,056 அலகுகள் பதிவு செய்யப்பட்டன.

2020 நவம்பரில் மொத்தம் எத்தனை வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன? பிரிவு வாரியாக வாகன பதிவின் விபரம்!

வர்த்தக வாகன பிரிவு:

ஆட்டோக்களைப் போலவே வர்த்தக வாகன பிரிவும் கணிசமான பதிவு சரிவைச் சந்தித்திருக்கின்றது. 2020 நவம்பர் மாதத்தில் 50,113 யூனிட் வர்த்தக வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஃபடா அறிவித்திருக்கின்றது. இதுவே, 2019 நவம்பர் மாதத்தில் 72,863 அலகு வர்த்தக வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இத்துடன் நடப்பாண்டு நவம்பர் மாதத்தை ஒப்பிட்டு பார்த்தால் 31.22 சதவீதம் பதிவு சரிவைச் சந்தித்திருப்பதை நம்மால் உணர முடியும்.

2020 நவம்பரில் மொத்தம் எத்தனை வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன? பிரிவு வாரியாக வாகன பதிவின் விபரம்!

டிராக்டர் வாகன பிரிவு:

பிற பிரிவு வாகனங்களைக் காட்டிலும் சற்று அதிக பதிவைப் பெற்றிருக்கும் வாகனத்துறையில் டிராக்டர்களும் ஒன்றாக இருக்கின்றது. இதன் பயன்பாடு சற்று லேசாக உயர்ந்திருப்பதை இதன் மூலம் நம்மால் உணர முடிகின்றது. 2020 நவம்பரில் 49,313 யூனிட் டிராக்டர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், 2019 நவம்பரில் வெறும் 45,462 டிராக்டர்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன. நடப்பாண்டில் டிராக்டர் பதிவு 8.47 சதவீதம் வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது.

2020 நவம்பரில் மொத்தம் எத்தனை வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன? பிரிவு வாரியாக வாகன பதிவின் விபரம்!

தற்போது ஃபடா வெளியிட்டிருக்கும் தகவலின்படி பயணிகள் மற்றும் டிராக்டர் வாகன பிரிவுகள் மட்டுமே கணிசமான வளர்ச்சியைப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 2020 நவம்பரில் 25,15,256 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இது கடந்த ஆண்டு 2019ம் ஆண்டைக் காட்டிலும் 4.74 சதவீதம் குறைவாகும்.

Most Read Articles
English summary
FADA released 2020 November Vehicle Registration Figures: Here Is Full Details. Read In Tamil.
Story first published: Tuesday, December 8, 2020, 19:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X