வைப்பரில் ஏற்படும் தொடர் பிரச்சனை... காம்பஸ் மாடல்களை திரும்ப அழைக்கும் ஜீப்...

ஃபியாட் க்றைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் க்ரூப் இந்தியாவில் அதன் 547 மை20 ஜீப் காம்பஸ் மாடல்களை திரும்ப அழைப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

வைப்பரில் ஏற்படும் தொடர் பிரச்சனை... காம்பஸ் மாடல்களை திரும்ப அழைக்கும் ஜீப்...

எஃப்சிஏ க்ரூப்பின் இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக வைபர் அமைப்பில் பயன்படுத்தப்படும் பிரேஸ் நட்டில் ஏற்படும் பழுது குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜீப் ப்ராண்ட் தரப்பில், வாகன தணிக்கையின்போது மை20 காம்பஸ் மாடலின் பிரேஸ் நட்கள் பொருத்தத்தை மேம்படுத்த வேண்டிய நிலைக்கு உள்ளா

வைப்பரில் ஏற்படும் தொடர் பிரச்சனை... காம்பஸ் மாடல்களை திரும்ப அழைக்கும் ஜீப்...

அதேசமயம் 2020ல் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட 547 யூனிட்களும் திரும்பி அழைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எஃப்சிஏ க்ரூப் வெளியிட்டுள்ள அறிக்கையில், வைப்பர் பிவோட் அமைப்பில் உள்ள வைப்பர் ஆர்ம்-ஐ டார்க்-தூண்டப்பட்ட பிரேஸ் நட் உறுதியாக பிடித்து கொள்ள வேண்டும்.

வைப்பரில் ஏற்படும் தொடர் பிரச்சனை... காம்பஸ் மாடல்களை திரும்ப அழைக்கும் ஜீப்...

அப்போது தான் செயல்பாட்டின்போது ஒரே

யூனிட்டாக இருக்கும். ஆனால் பிரேஸ் நட் செயலிழப்பதால் ஸ்டேரிங் சக்கரத்திற்கு பின்புறத்தில் உள்ள வைப்பர்-ஸ்விட்ச் மூலமாக வைப்பர் அமைப்பு செயல்படுத்தப்படும் போது வைப்பர்கள் சுழல்வது நின்றுவிடுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

வைப்பரில் ஏற்படும் தொடர் பிரச்சனை... காம்பஸ் மாடல்களை திரும்ப அழைக்கும் ஜீப்...

வைப்பர் பிவோட்டில் பிரேஸ் நட்டின் பிடிமானத்தை மேம்படுத்தும்போது இத்தகைய பழுது ஏற்பட வாய்ப்பில்லை என தயாரிப்பு நிறுவனம் கூறுகிறது. மேலும் சீரான வைப்பர் செயல்பாட்டிற்கு பிரேஸ் நட்டின் வடிவத்தையே மாடிஃபைடு செய்ய வேண்டும் என்றும் இந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைப்பரில் ஏற்படும் தொடர் பிரச்சனை... காம்பஸ் மாடல்களை திரும்ப அழைக்கும் ஜீப்...

மை20 ஜீப் காம்பஸ் கார்களின் உரிமையாளர்களில் எவர் ஒருவரும் இதுவரை இத்தகைய பழுதினை தெரிவித்துள்ளார்களா என்பதும் தெரியவில்லை என கூறியுள்ள எஃப்சிஏ க்ரூப், அவ்வாறு பாதித்திருந்தால் அந்த வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளும் பணியினை அங்கீகாரம் பெற்ற சேவை மையங்கள் மூலமாக ஏற்கனவே துவங்கிவிட்டது.

வைப்பரில் ஏற்படும் தொடர் பிரச்சனை... காம்பஸ் மாடல்களை திரும்ப அழைக்கும் ஜீப்...

வெறும் 15 நிமிடங்களில் இந்த பழுது சரி பார்க்கப்பட்டுவிடும் என கூறியுள்ள இந்நிறுவனம் இதற்காக கூடுதலாக எந்த கட்டணத்தையும் வசூலிக்க போவதில்லை எனவும் கூறியுள்ளது. எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கும் எங்கள் வாகனங்களின் தரத்திற்கும் அதிக முன்னுரிமை அளிக்கிறோம். இந்த சிக்கலை விரைவாக அடையாளம் காண முடியும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

வைப்பரில் ஏற்படும் தொடர் பிரச்சனை... காம்பஸ் மாடல்களை திரும்ப அழைக்கும் ஜீப்...

மேலும் எங்கள் வாடிக்கையாளர்களை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஜீப் பிராண்ட் வாகனங்கள் சாலையில் மிகவும் நம்பகமான வாகனங்களாக இருப்பதை உறுதி செய்வதில் பெருமை கொள்கிறோம் என ஃபியார் க்றைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பார்த்தா தத்தா கூறியுள்ளார்.

வைப்பரில் ஏற்படும் தொடர் பிரச்சனை... காம்பஸ் மாடல்களை திரும்ப அழைக்கும் ஜீப்...

வாடிக்கையாளர்களிடம் இருந்து இத்தகைய பழுது குறித்த புகார் எதுவும் தற்போது வரையில் வரவில்லை என ஜீப் நிறுவனம் கூறியிருப்பது அதன் வாகனங்களின் தரத்தை காட்டுகிறது. இருப்பினும் தானாக முன்வந்து இந்த பிரச்சனையை தீர்க்க நினைப்பது உண்மையில் பாராட்டத்தக்கதே.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
FCA India recalls 547 units of MY20 Jeep Compass
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X