இந்தியாவில் ஃபெராரி யூஸ்டு கார்களுக்கு சிறப்பு வாரண்டி திட்டம் அறிமுகம்!

இந்தியாவில்  சான்றளிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட தனது யூஸ்டு கார்களுக்கு சிறப்பு வாரண்டி திட்டத்தை ஃபெராரி அறிமுகம் செய்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்கும் என்று தெரிய வந்துள்ளது.

 இந்தியாவில் யூஸ்டு கார்களுக்கு சிறப்பு வாரண்டி திட்டம்: ஃபெராரி அறிமுகம்!

உலக அளவில் சூப்பர் கார் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் கனவு மாடலாக ஃபெராரி தயாரிப்புகள் உள்ளன. இந்த நிலையில், ஃபெராரி கனவுடன் வரும் பணக்காரர்களுக்கு ஃபெராரியின் பட்ஜெட் சில சமயம் நெருடலாக உள்ளது.

 இந்தியாவில் யூஸ்டு கார்களுக்கு சிறப்பு வாரண்டி திட்டம்: ஃபெராரி அறிமுகம்!

இதுபோன்ற வாடிக்கையாளர்களின் ஆசையையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதத்தில், யூஸ்டு கார்களையும் ஃபெராரி நிறுவனம் தனது ஃபெராரி அப்ரூவ்டு திட்டத்தின் மூலமாக விற்பனை செய்து வருகிறது.

 இந்தியாவில் யூஸ்டு கார்களுக்கு சிறப்பு வாரண்டி திட்டம்: ஃபெராரி அறிமுகம்!

ஃபெராரி அப்ரூவ்டு திட்டத்தின் மூலமாக விற்பனை செய்யப்படும் பயன்படுத்தப்பட்ட ஃபெராரி கார்கள் முழுமையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார்களுக்கு பரிசோதனை தரச் சான்றும் வழங்கப்படுகிறது.

 இந்தியாவில் யூஸ்டு கார்களுக்கு சிறப்பு வாரண்டி திட்டம்: ஃபெராரி அறிமுகம்!

இந்த நிலையில், இதுபோன்று ஃபெராரி அப்ரூவ்டு திட்டத்தின் மூலமாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட தனது பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு 2 ஆண்டுகளுக்கான சிறப்பு வாரண்டி திட்டத்தை வழங்குவதாக ஃபெராரி நிறுவனம் அறிவித்துள்ளது.

 இந்தியாவில் யூஸ்டு கார்களுக்கு சிறப்பு வாரண்டி திட்டம்: ஃபெராரி அறிமுகம்!

இந்த திட்டம் ஐரோப்பாவில் மட்டுமே இதுவரை வழங்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியா உள்பட உலகில் பெரும்பான்மையான நாடுகளில் இந்த சிறப்பு வாரண்டி திட்டத்தை ஃபெராரி வழங்குவதாக அறிவித்துள்ளது.

 இந்தியாவில் யூஸ்டு கார்களுக்கு சிறப்பு வாரண்டி திட்டம்: ஃபெராரி அறிமுகம்!

இதுகுறித்து ஃபெராரி மத்திய கிழக்கு பிராந்தியப் பிரிவுக்கான தலைமை அதிகாரி கியோர்ஜியோ டூரி கூறுகையில்,"ஃபெராரி அப்ரூவ்டு திட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக இந்த புதிய வாரண்டி திட்டத்தை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

 இந்தியாவில் யூஸ்டு கார்களுக்கு சிறப்பு வாரண்டி திட்டம்: ஃபெராரி அறிமுகம்!

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை இந்த வாரண்டி திட்டம் வழங்கும். எங்களது பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பையும், மன நிம்மதியையும் இந்த திட்டம் வழங்கும்," என்று அவர் கூறி இருக்கிறார்.

 இந்தியாவில் யூஸ்டு கார்களுக்கு சிறப்பு வாரண்டி திட்டம்: ஃபெராரி அறிமுகம்!

ஃபெராரி அப்ரூவ்டு திட்டத்தின் கீழ் 14 ஆண்டுகளுக்குள் பதிவு செய்யப்பட்ட கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. 100 விதமான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. மேலும், இந்த பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு சிப்பு வாரண்டி திட்டம் மற்றும் சாலை அவசர உதவி திட்டங்களையும் ஃபெராரி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஃபெராரி #ferrari
English summary
Ferrari has announced that the company will offer special warranty scheme for its certified used cars in India.
Story first published: Saturday, September 12, 2020, 10:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X