ஃபோர்ஸ் நிறுவனத்தின் அட்டகாசமான வாகனங்கள் அறிமுகம்... விலை என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

புதிய பிஎஸ்6 டிராக்ஸ் வாகனங்களை ஃபோர்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சம் மற்றும் விலைப் பற்றிய தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஃபோர்ஸ் நிறுவனத்தின் அட்டகாசமான வாகனங்கள் அறிமுகம்... விலை என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஃபோர்ஸ் நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த கார்களை பிஎஸ்6 தரத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அண்மையில் இந்நிறுவனம் மஹிந்திரா தார் காருக்கு போட்டியாக ஃபோர்ஸ் கூர்கா எனும் புதிய மாடலை அறிமுகம் செய்தது. இந்த நிலையிலேயே தற்போது இரு புதிய பிஎஸ்6 தரத்திலான கார்களை அது அறிமுகப்படுத்தியுள்ளது.

ஃபோர்ஸ் நிறுவனத்தின் அட்டகாசமான வாகனங்கள் அறிமுகம்... விலை என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

டிராக்ஸ் க்ரூஸர் மற்றும் டூஃபான் எனும் இரு கார்களைதான் ஃபோர்ஸ் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம் செய்திருக்கின்றது. ஃபோர்ஸ் டிராக்ஸ் பயணிகள் வாகனத்தை நடப்பாண்டின் பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் அந்நிறுவனம் முதல் முறையாக காட்சிப்படுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்தே தற்போது பிஎஸ்6 டிராக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஃபோர்ஸ் நிறுவனத்தின் அட்டகாசமான வாகனங்கள் அறிமுகம்... விலை என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இந்த டிராக்ஸ் கார் நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. அவை, டிராக்ஸ் க்ரூஸர், டிராக் க்ரூஸர் டீலக்ஸ், டிராக்ஸ் டூஃபான் மற்றும் டிராக்ஸ் டூஃபான் டீலக்ஸ் ஆகியவை ஆகும். இதற்கு ஆரம்ப விலையாக ரூ. 10.9 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

ஃபோர்ஸ் நிறுவனத்தின் அட்டகாசமான வாகனங்கள் அறிமுகம்... விலை என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இந்த புதிய மாடல்களில் பிஎஸ்6 தர எஞ்ஜின் மட்டுமின்றி மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பழைய எஞ்ஜினைக் காட்டிலும் அதிக திறனை வெளிப்படுத்தும் வகையில் இந்த எஞ்ஜின் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, அதிக நீளம் மற்றும் அகலமான உருவ அமைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

ஃபோர்ஸ் நிறுவனத்தின் அட்டகாசமான வாகனங்கள் அறிமுகம்... விலை என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இத்துடன், வாகனத்தின் உட்பகுதியில் கூடுதல் பிரீமியம் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி முன்பைக் காட்டிலும் பல மடங்கு உறுதியான மற்றும் புதிய சேஸிஸில் புதிய டிராக்ஸ் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஃபோர்ஸ் நிறுவனத்தின் அட்டகாசமான வாகனங்கள் அறிமுகம்... விலை என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

அறிமுகமாகியிருக்கும் அனைத்து டிராக்ஸ் வாகனங்களின் உருவம் மற்றும் பரிணாமங்களும் ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கின்றன. அதாவது, வெளிப்புறத்தில் வழங்கப்பட்டிருக்கும் ஸ்டிக்கர் உள்ளிட்டவை வித்தியாசமின்றி காணப்படுகின்றன. இதேபோன்று, நீளம், அகலம் மற்றும் உயரத்திலும் மாற்றமில்லாமல் காட்சியளிக்கின்றது.

ஃபோர்ஸ் நிறுவனத்தின் அட்டகாசமான வாகனங்கள் அறிமுகம்... விலை என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

நீளம் 5120 மிமீ, அகலம் 1818 மிமீ, உயரம் 2027 மிமீ, வீல் போஸ் 3050 மிமீ மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் 160 மிமீ இந்த அளவிலேயே அனைத்து கார்களும் உள்ளன. இதன் டயர்கள்கூட மாற்றமின்றி காணப்படுகின்றன. அதாவது, 215/75 என்ற அளவுள்ள டயரே 15 இன்ச் அளவுள்ள வீல் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது. இதன் எரிபொருள் டேங்க் 63.5 லிட்டர்களாகும்.

ஃபோர்ஸ் நிறுவனத்தின் அட்டகாசமான வாகனங்கள் அறிமுகம்... விலை என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

ஆனால், இருக்கை வசதி மட்டும் வித்தியாசத்துடன் காட்சியளிக்கின்றது. அதாவது, பிஎஸ்6 டிராக்ஸ் க்ரூஸர் 12+1 மற்றும் 9+1 என்ற இருக்கை வசதியிலும், டிராக்ஸ் டூஃபான் 11+1 என்ற தேர்விலும் கிடைக்க இருக்கின்றது. இந்த வித்தியாசத்தைத் தவிர வெறெந்த வித்தியாசத்தையும் இந்த வாகனங்களில் நம்மால் காண முடியாது.

ஃபோர்ஸ் நிறுவனத்தின் அட்டகாசமான வாகனங்கள் அறிமுகம்... விலை என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

எஞ்ஜின்

4 சிலிண்டர் அமைப்புடைய 2.6 லிட்டர் எஞ்ஜினே இந்த வாகனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட டீசல் வகை எஞ்ஜின்களாகும். இந்த எந்திரம் அதிகபட்சமாக 90 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இது 5 ஸ்பீடு கியர்பாக்ஸின் வழியாக இந்த வெளிப்படுத்துகின்றது.

ஃபோர்ஸ் நிறுவனத்தின் அட்டகாசமான வாகனங்கள் அறிமுகம்... விலை என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

எஞ்ஜின் மட்டுமில்லைங்க இந்த வாகனத்தின் சஸ்பென்ஷனும் சிறப்பு திறன் வாய்ந்ததாக உள்ளது. இதன் முன்பக்கத்தில் சுதந்திரமான இரு விஷ்போன் செஸ்பென்ஷனும், பின் பக்கத்தில் லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷனும் இணைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, முன்பக்கத்திற்கு டிஸ்க் பிரேக்கும், பின்பக்கத்திற்கு டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும், பவர் அசிஸ்ட் ஸ்டியரிங் வீல் போன்ற சிறப்பு வசதிகளும் டிராக்ஸ் வாகனத்தில் இடம்பெற செய்யப்பட்டுள்ளன.

Most Read Articles

English summary
BS6 Force Trax Cruiser and Toofan Launched In India. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X