தீவிர சோதனை ஓட்டங்களில் பிஎஸ்6 ஃபோர்ஸ் குர்கா!! மஹிந்திரா தாரை சமாளிக்குமா?

மஹாராஷ்டிராவை சேர்ந்த ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் மீண்டும் குர்கா பிஎஸ்6 மாடலை சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படத்தை இந்த செய்தியில் பார்ப்போம்.

தீவிர சோதனை ஓட்டங்களில் பிஎஸ்6 ஃபோர்ஸ் குர்கா!! மஹிந்திரா தாரை சமாளிக்குமா?

2020ஆம் ஆண்டின் துவக்கத்தில், அப்போது அறிமுகமாக தயாராகி கொண்டிருந்த 2020 மஹிந்திரா தாருக்கு போட்டியாக புதிய தலைமுறை குர்காவை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது.

தீவிர சோதனை ஓட்டங்களில் பிஎஸ்6 ஃபோர்ஸ் குர்கா!! மஹிந்திரா தாரை சமாளிக்குமா?

கவனிக்கத்தக்க வகையிலான காஸ்மெட்டிக் மற்றும் தொழிற்நுட்ப அம்சங்களுடன் கொண்டுவரப்படும் புதிய குர்காவை கடந்த சில மாதங்களாக தீவிரமாக பொது சாலையில் தயாரிப்பு நிறுவனம் சோதனை செய்து வருகிறது.

தீவிர சோதனை ஓட்டங்களில் பிஎஸ்6 ஃபோர்ஸ் குர்கா!! மஹிந்திரா தாரை சமாளிக்குமா?

இந்த வகையில் தற்போது மீண்டும் வழக்கம்போல் எந்தவொரு மறைப்பும் இல்லாமல் 2021 குர்கா சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. பிஎஸ்6 என்ஜின் உடன் கொண்டுவரப்படும் இந்த 2021 மாடல் இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீவிர சோதனை ஓட்டங்களில் பிஎஸ்6 ஃபோர்ஸ் குர்கா!! மஹிந்திரா தாரை சமாளிக்குமா?

அதர்வா மடியல் என்பவர் மூலம் நமக்கு கிடைத்துள்ள இது தொடர்பான ஸ்பை படத்தில் நமக்கு காட்சி தருவது விலை குறைவான புதிய குர்கா வேரியண்ட்டாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த சோதனை மாதிரியில் இரும்பு சக்கர ரிம்கள் வழங்கப்பட்டுள்ளன.

தீவிர சோதனை ஓட்டங்களில் பிஎஸ்6 ஃபோர்ஸ் குர்கா!! மஹிந்திரா தாரை சமாளிக்குமா?

வெள்ளை பெயிண்ட் நிறத்தில் உள்ள இந்த சோதனை குர்கா வாகனம் அதன் வழக்கமான பெட்டகம் வடிவத்தை அப்படியே கொண்டுள்ளது. முன்பக்கத்தில் ஒற்றை ஸ்லாட் க்ரில் அமைப்பு மெஷ் டிசைனில் வழங்கப்பட்டுள்ளது.

தீவிர சோதனை ஓட்டங்களில் பிஎஸ்6 ஃபோர்ஸ் குர்கா!! மஹிந்திரா தாரை சமாளிக்குமா?

ஹெட்லேம்ப்கள் பொருத்தப்படுவதற்கான குழிகள் செவ்வகம் வடிவில் உள்ளன. 2021 குர்காவின் டாப் வேரியண்ட் வட்ட வடிவிலான டிஆர்எல்கள், மூடுபனி விளக்குகளுடன் பம்பர், சறுக்கு தட்டு மற்றும் வலதுபுற ஃபெண்டரில் ஸ்னோர்கெள்ளை பெற்று வரவுள்ளது.

தீவிர சோதனை ஓட்டங்களில் பிஎஸ்6 ஃபோர்ஸ் குர்கா!! மஹிந்திரா தாரை சமாளிக்குமா?

இதனை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த குர்கா வாகனத்திலேயே பார்த்திருந்தோம். அதேபோல் உட்புறத்தில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பவர் ஜன்னல்கள், 3-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரத்தையும் அந்த நிகழ்ச்சியில் இதன் டாப் வேரியண்டில் பார்க்க முடிந்தது.

தீவிர சோதனை ஓட்டங்களில் பிஎஸ்6 ஃபோர்ஸ் குர்கா!! மஹிந்திரா தாரை சமாளிக்குமா?

இருப்பினும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கான அனலாக் வடிவம் மற்றும் ஒற்றை துண்டாக இரண்டாவது இருக்கை வரிசை உள்ளிட்டவற்றில் மாற்றம் இருக்காது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு புதிய குர்காவில் மெர்சிடிஸ்-பென்ஸின் 2.6 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படவுள்ளது.

தீவிர சோதனை ஓட்டங்களில் பிஎஸ்6 ஃபோர்ஸ் குர்கா!! மஹிந்திரா தாரை சமாளிக்குமா?

பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமானதாக வழங்கப்படவுள்ள இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 89 பிஎச்பி மற்றும் 260 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த என்ஜின் உடன் 4x4 ட்ரைவ்ட்ரெயின், 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படவுள்ளது.

Most Read Articles
English summary
Force Gurkha spied testing India, launch dealyed.
Story first published: Monday, December 28, 2020, 22:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X