2020 மஹிந்திரா தாருக்கு சரியான போட்டியாளர்... பிஎஸ்6 ஃபோர்ஸ் குர்கா சோதனை ஓட்டம்..!

அடுத்த தலைமுறை ஃபோர்ஸ் குர்கா காருக்கு உரிய தோற்றத்துடன் சோதனை மாதிரி ஒன்று புனேவில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2020 மஹிந்திரா தாருக்கு சரியான போட்டியாளர்... பிஎஸ்6 ஃபோர்ஸ் குர்கா சோதனை ஓட்டம்..!

மெர்சிடிஸ் ஜி-க்ளாஸ் எஸ்யூவி காரின் தோற்றத்தால் கவரப்பட்டு உருவாக்கப்படும் இந்த ஃபோர்ஸ் எஸ்யூவியின் அறிமுகம் 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள்ளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

2020 மஹிந்திரா தாருக்கு சரியான போட்டியாளர்... பிஎஸ்6 ஃபோர்ஸ் குர்கா சோதனை ஓட்டம்..!

ஆனால் கொரோனா வைரஸினால் இந்த ஆண்டிற்குள் அறிமுகமாகுமா என கேள்வியாக உள்ள புதிய தலைமுறை ஃபோர்ஸ் குர்காவின் இந்த சோதனை மாதிரி கார் கிட்டத்தட்ட 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த ஃபோர்ஸ் குர்காவை தான் ஞாபகப்படுத்துகிறது.

2020 மஹிந்திரா தாருக்கு சரியான போட்டியாளர்... பிஎஸ்6 ஃபோர்ஸ் குர்கா சோதனை ஓட்டம்..!

டீம்பிஎச்பி செய்திதளத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இந்த சோதனை குர்கா, விலை குறைவான வேரியண்ட்டாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த சோதனை வாகனம் இரும்பு ரிம்கள், நிலையான ஹலோஜன் ஹெட்லேம்ப்கள் மற்றும் திறந்து மூடக்கூடிய பக்கவாட்டு பின்புற ஜன்னல்கள் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

2020 மஹிந்திரா தாருக்கு சரியான போட்டியாளர்... பிஎஸ்6 ஃபோர்ஸ் குர்கா சோதனை ஓட்டம்..!

வாகனத்தின் பின்புறத்தில் பிஎஸ்6 உமிழ்வு விதிமுறைகளை சரிப்பார்க்க சோதனை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆட்டோ எக்ஸ்போவில் ஃபோர்ஸ் குர்கா 2வது வரிசையில் 2 கேப்டன் இருக்கைகளையும், நேருக்கு நேர் பார்க்கப்பட்ட பின் இருக்கை வரிசையையும் கொண்டிருந்தது.

2020 மஹிந்திரா தாருக்கு சரியான போட்டியாளர்... பிஎஸ்6 ஃபோர்ஸ் குர்கா சோதனை ஓட்டம்..!

மேலும் எல்இடி ஹெட்லேம்ப்கள், ஃபெண்டரில் மார்க்கர்/ இண்டிகேட்டர் கலந்த விளக்கு மற்றும் ஸ்னோர்கில் இண்டேக் உள்ளிட்டவற்றுடனும் பிஎஸ்6 குர்கா அந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. புதிய தலைமுறை குர்காவில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 2.6 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படவுள்ளது.

2020 மஹிந்திரா தாருக்கு சரியான போட்டியாளர்... பிஎஸ்6 ஃபோர்ஸ் குர்கா சோதனை ஓட்டம்..!

அதிகப்பட்சமாக 89 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் இந்த டீசல் என்ஜின் 5-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் மற்றும் அனைத்து-சக்கர ட்ரைவ் சிஸ்டத்துடன் இணைக்கப்படுகிறது. இவற்றுடன் சுதந்திரமான முன் மற்றும் பின்பக்க சஸ்பென்ஷன் உடனும் இந்த எஸ்யூவி வழங்கப்படுகின்றது.

2020 மஹிந்திரா தாருக்கு சரியான போட்டியாளர்... பிஎஸ்6 ஃபோர்ஸ் குர்கா சோதனை ஓட்டம்..!

கடந்த செப்டம்பர் மாதத்தில் பிஎஸ்6 ட்ராக்ஸ் க்ருஸர் & டூஃபான் வாகனங்களை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது. இதனால் பிஎஸ்6 குர்காவின் அறிமுகத்தை விரைவில் எதிர்பார்க்கலாம். 2020 மஹிந்திரா தாருக்கு போட்டியாக புதிய தலைமுறை அப்கிரேடை இந்த எஸ்யூவி வாகனம் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Force Gurkha spotted with emission testing equipment
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X