ஃபோர்ஸ் டி1என் பயணிகள் வேன் சோதனை ஓட்டம்... ஸ்பை படங்கள்!

டெம்போ டிராவலர் வேனிலிருந்து மாறுபட்ட டிசைன் அம்சங்கள் கொண்ட புதிய ஃபோர்ஸ் டி1என் பயணிகள் வேன் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. ஸ்பை படங்கள் மற்றும் இந்த வாகனம் பற்றிய கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

ஃபோர்ஸ் டி1என் பயணிகள் வேன் சோதனை ஓட்டம்... ஸ்பை படங்கள்!

சுற்றுலாப் பயணிகள் மற்றும் நீண்ட தூர பிராயணங்களுக்கான போக்குவரத்தில் அனைவரின் நம்பர்-1 தேர்வாக டெம்போ டிராவலர் பயணிகள் வேன் உள்ளது. போதுமான இடவசதி, எம்பிவி கார் போல உணர்வை தரும் சொகுசான பயணம் ஆகியவற்றால் டெம்போ டிராவலர் வேனுக்கு தனி மவுசு உள்ளது. நிறுவனங்களுக்கான வாடிக்கையாளர் போக்குவரத்து பணிகளுக்கும் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது.

ஃபோர்ஸ் டி1என் பயணிகள் வேன் சோதனை ஓட்டம்... ஸ்பை படங்கள்!

இந்த சூழலில், டெம்போ டிராவலர் வேனின் அம்சங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் T1N என்ற பயணிகள் வேன் மாடலை கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் ஃபோர்ஸ் மோட்டார் நிறுவனம் காட்சிப்படுத்தி இருந்தது. அப்போதே, இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், இது தயாரிப்பு நிலைக்கு எப்போது கொண்டு செல்லப்படும் என்ற ஆர்வமும் எழுந்தது.

ஃபோர்ஸ் டி1என் பயணிகள் வேன் சோதனை ஓட்டம்... ஸ்பை படங்கள்!

இந்த நிலையில், ஃபோர்ஸ் டி1என் பயணிகள் சாலை சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. அதன் ஸ்பை படங்கள் டீம் பிஎச்பி தளம் மூலமாக வெளியுலக பார்வைக்கு வந்துள்ளது.

ஃபோர்ஸ் டி1என் பயணிகள் வேன் சோதனை ஓட்டம்... ஸ்பை படங்கள்!

சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கும் மாடலானது கிட்டத்தட்ட தயாரிப்பு நிலை மாடலுக்கு உரிய தகுதியையும், அம்சங்களையும் பெற்றிருக்கிறது. எனவே, மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

ஃபோர்ஸ் டி1என் பயணிகள் வேன் சோதனை ஓட்டம்... ஸ்பை படங்கள்!

மேலும், 16 இருக்கைகள் கொண்டதாக அந்த வேன் உள்ளதுடன் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த வேனில் இடம்பெற்றிருக்கும் 2.6 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 112 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ஃபோர்ஸ் டி1என் பயணிகள் வேன் சோதனை ஓட்டம்... ஸ்பை படங்கள்!

இதுதவிர்த்து, ஃபோர்ஸ் டி1என் பயணிகள் வேன் மின்சார வெர்ஷனிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மின்சார மாடலில் இருக்கும் மோட்டார் அதிகபட்சமாக 161 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகவும், சிங்கிள் ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டதாகவும் இருக்கும். அனைத்து சக்கரங்களுக்கும் எஞ்சின் அல்லது மின் மோட்டார் சக்தி செலுத்தப்படும்.

ஃபோர்ஸ் டி1என் பயணிகள் வேன் சோதனை ஓட்டம்... ஸ்பை படங்கள்!

இந்த பயணிகளில் மிக முக்கிய அம்சங்களாக தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

ஃபோர்ஸ் டி1என் பயணிகள் வேன் சோதனை ஓட்டம்... ஸ்பை படங்கள்!

தற்போது டெம்போ டிராவலர் வேன் ரூ.11.10 லட்சம் முதல் ரூ.24.27 லட்சம் வரையிலான விலையில் பல்வேறு இருக்கை வசதி கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. அதேபோன்று, இந்த புதிய டி1என் பயணிகள் வேனும் பல்வேறு இருக்கை வசதி கொண்ட மாடல்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

Most Read Articles

English summary
The Force T1N has been spotted outside a tyre shop while in the middle of testing. Spy pics reveal the Force T1N sans camouflage. In addition, the vehicle looks like it is almost production ready.
Story first published: Saturday, August 1, 2020, 14:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X